Tuesday, December 20, 2016

நவீன தமிழ் மொழிகள்

பேஸ்புக் நிறுவனத்தை முகநூல் / முகபுத்தகம் என்று தமிழில் நாம் அழைக்கிறோம்
அது ஒருவகையில் தவறு ,
இருந்தாலும் வர வர அப்படியே பழகி வருகிறோம்.
பேஸ்புக் என்பது ஒரு நிறுவனத்தின் பெயர்
அதை அப்படியே தான் அழைக்க வேண்டும்.
மாறாக ஒருவேளை அவர்களே அந்த பெயரை
மொழி அடிப்படையில் மாற்றினால் நாம் அழைக்கலாம் .
உதாரணம் சொல்கிறேன்
Green Trends என்ற நிறுவனத்தை தமிழிலா அழைக்க முடியும்.
முடியும் என்றால் முடியும் அனால் அப்படி அழைப்பது தவறு .
Green Trends நிறுவனத்தை தமிழில் பெயர் மாற்றி அழைப்பதும் தவறே .
இவ்வாறே பல நிறுவனங்களின் பெயர்களை தமிழில் மாற்றி தவறாக அழைத்து பழகி வருகிறோம் .
பிறகு அது Dictionary களிலும் இடம் பிடித்து விடுகிறது.
இதுவே பொருட்களை, இடங்களை குறிப்பிடும் பொது வேறுபாடும்
Twin Tower ரை இரட்டை கோபுரம் என்று அழைக்கலாம்
அது தவறு இல்லை .
பேஸ்புக்கை பேஸ்புக் என்று அழைப்பது தான் சரியாக இருக்க முடியும்.
முகநூல் என்கிற சொல்லே தமிழுக்கும் தங்க்லீஷ்க்கும் இடையே எதோ ஒரு நிலையில் இருக்கிறது .
அந்த மொழி வடிவத்துக்கு இன்னும் யாரும் பெயர் வைக்கவில்லை .
அனைத்துக்கும் நாங்கள் தமிழில் பெயர் வைப்போம் என்கிற நவீன திமீர் மொழி வடிவில் இருக்கிறது.
பிறகு அது தமிழ் மொழி வடிவில் உருமாறி தமிழ் மொழிக்குள்ளே நுழைந்து விடுகிறது.
இது பழமை என்கிற போர்வையில் நவீன மொழியாகிறது .
நவீன தமிழ் மொழி என்றும் இதனை அழைக்கலாம்
இதற்க்கு கண்டிப்பாக எதிர்ப்பு இருக்கும் ...என்றே நான் கருதுகிறேன் .
காரணம் இப்போது நாம் அப்படி அழைத்தே பழகிவிட்டோம், இனி விட முடியாது .
இன்னும் தமிழ் சரியாக தெரிந்தவர்கள் இதற்க்கு சிறப்பான பதில் தர முடியும் என்றே கருதுகிறேன்.

கீழே உள்ள படத்தில் உள்ளவைகள் தமிழில் பெயர் வைக்கிறோம் என்று வீம்புக்கு செய்யப்படும் யுக்த்திகள் ,மொபைல் போன் / கை பேசி செயலிகளுக்கு தமிழில் பெயர் வைத்திருக்கிறார்கள் . இது வீம்புக்கு செய்யப்படும் செயல்.

அந்த செயலிகள் உருவாக்கப்படும் முன்பு இவர்கள் எங்கு இருந்தார்கள்.
இப்படிப்பட்ட செயல்களுக்கு
 நான் வைக்கும் பெயர் "நவீன தமிழ் மொழி ".


Saturday, December 17, 2016

வேடிக்கையாக கூகுளில் வேலை தேடி

நேற்று முன்தினம் சும்மா வேடிக்கையாக கூகுள் நிறுவனத்தில்
வேலைக்கு விண்ணப்பம் செய்து இருந்தேன்
இதுதான் அவர்களது பதில்
இது கிடக்கட்டும் அவர்களது Application Form பார்த்தால் அசந்து பொய் விடுவீர்கள் .சும்மா ட்ரை பண்ணி பாருங்க..
நீங்கள் எந்த நிறமாக இருந்தாலும் கவலை இல்லை ..
நீங்கள் எந்த நாடாக இருந்தாலும் கவலை இல்லை
இப்படி அனைத்திலும் அவர்கள் எதையும் பார்க்கவில்லை ..
அவர்களுக்கு தேவை நம் வீட்டு முகவரி தொலைபேசி எண்கள் ,Email முகவரி ..
அவ்வளவுதான்
கல்வி தகுதிக்கு கூட மூன்று option வைத்திருக்கிறார்கள் .
Gender கூட விருப்பப்பட்டால் சொல்லலாம்,
உங்களை பற்றி சொல்லுங்கள் என்கிறார்கள் அதே வேளையில் விருப்பம் இல்லை என்றால் விட்டுவிடுங்கள் என்கிறார்கள்
செம Flexibility ...
.........
ஆனால் அவர்கள் ஒருவரை தேர்வு செய்ய கையாளும் முறை வித்தியாசமானது .
ஒருவரின் தகுதியை தாண்டி திறமையை தனித்துவத்தை மன நோக்கத்தை பார்ப்பதைப்போல் தெரிகிறது
Auobot களை தவிர்க்க அவர்கள் தவறி விட்டார்கள் .Autofill மூலம் பல Applications நிரப்ப வாய்ப்பு உள்ளது .Security Check இல்லை .
இதன் மூலம் ஒரு நாளைக்கே லட்ச கணக்கான
Applications வரக்கூடும் .
(குறிப்பு ; சொந்தமாக வெப்சைட்/BLOG இருக்க வேண்டும் )
Krishna Kumar G


Sunday, December 11, 2016

அரசியல் கணிப்பும் பதிலும்

எதிர்கால தமிழக அரசியல் கணிப்புகளின் சுருக்கம் : 11.12.2016
திராவிட அரசியல் வழி மாறி நெறி மாறி சென்றுவிட்டது என்பதனை தற்போதைய சூழல் உணர்த்துகிறது.
சாதியவாதிகளின் பெரும், கூடாரமாக திராவிட அரசியல் மாறியதன் விளைவை அதன் தலைமைகள் மறைந்த பின்பு நேரடியாக காண முடிகிறது
சாதியை மதத்தை எதிர்த்து தொடங்கப்பட்ட திராவிட இயக்கங்கள் ..அதன் பாதையை மாற்றிவிடவில்லை அனால் மறந்துவிட்டது .
இனி நேரடியாக சாதிகளை மதங்களை வைத்து அரசியல் செய்யும் காலம் வந்துவிட்டதை போல் தெரிகிறது..
இன்றைய இளைஞர்கள் சாதியில் மிகவும் தீவிரமாக இருக்கிறார்கள் ...இதை அறுவடை செய்ய சாதிய கட்சிகள் முயற்சி செய்ய கூடும்.
இனி ஒற்றை தலைமை அரசியல் இருக்காது .
குழப்பங்கள் வர கூடும் .
அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் போகும்.
மத்திய கட்சிகளின் கை ஓங்கும்
-------------------------------------------------------
மேலே உள்ளது கணிப்பு., தற்போதைய நிகழ்வுகளை வைத்து கணித்தவை.
அனுமானம்
--------------------------------------------------------
இதையெல்லாம் தாண்டி வேறு ஒன்று இருக்கிறது
அதுதான் நாடக்கப்போகிறது


கணிப்பும் பதிலும்
Krishna Kumar G


Friday, December 9, 2016

உங்கள் கற்பனையில் கதை சொல்ல போகிறேன்

ஒருவேளை ஒரு திரைப்படத்தின் பெயர் இதுவாக இருந்தால்
"என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா "
அதன் கதை என்னவாக இருக்கும் என்று உங்கள் கற்பனைக்கு இன்நேரம் வந்திருக்கும்...
ஆமாம் அதே தான்
அதே கதையில் சில காதபத்திரங்களை சேர்ப்போம்
முதலாவதாக பிரேம்ஜி அமரன் மற்றும் அவரது குழுவினரை இதில் சேர்த்து பார்ப்போம் .
இதோ உங்கள் கற்பனையில் அனைத்து காட்சிகளும் ஒரு படமாய் ஓட தொடங்கி இருக்கும் ...
ஆரம்பமே நண்பர்களுடன் ஒரு ரவுண்டு டேபிளில் சரக்கடித்து போதையில் இருப்பதை போல் ஒரு காட்சி வந்து இருக்கும் ...
அதில் SPB சரண் போல் ஒருவர் ..என் பொண்டாட்டி ஊருக்கு போறா ..நாம இனிமே எங்க வீட்டுல ஜாலியா சரக்கு அடிக்கலாம் என்பதை போல் இருக்கும் ..
அந்த அப்பாவி முகம் உள்ள பொண்டாட்டி ஊருக்கு சென்ற பின்பு அதே போல் அவரது வீட்டில் சரக்கு அடிக்க ஆரம்பித்திருப்பார்கள் .
போதை தலைக்கு எரிய நிலையில் ... ஊர் சுற்றி வரும் வழியில் மேலும் உல்லாசமாக இருக்க கருதி ஒரு விலை மாதுவை வீட்டுக்கு அழைத்தும் வருவார்கள் ...
பிறகு பஞ்சதந்திரம் படத்தின் கதையை உள்ளே சேர்க்கவும்..
படம் இறுதி கட்சியில் பெரும் குழப்பத்துடன் ...என்ன செய்வது என்று தெரியாமல் ...
ஒரு ஆடல் பாடல் காட்சியுடன் நிறைவு பெரும் ..வகையில் அது அமைந்து இருக்கும்
(இதுவும் உங்கள் கற்பனையை தூண்ட தான் )
(நீங்க படமாய் எடுத்தால் நான் Copyrights claim செய்ய மாட்டேன் )
நான் இதில் சொல்லவருவது என்னவென்றால் நான் இங்கு எதையும் முழுமையாக சொல்லவில்லை அனைத்தையும் உங்கள் கற்பனையிலே அவரவர் போக்கிலே இந்த கதையை சொல்லி இருக்கிறேன் .
இதுபோலத்தான் இருக்கிறது இன்றைய நிகழ்வுகளும்

Krishna Kumar G



Saturday, December 3, 2016

நாட்டு வெடி கலாசாரத்தில் தகிக்கும் தேசம

வெடி மருந்தை கலசத்துக்குள்ளே குத்தும் போதே கொலைநடுங்கும்... எதுக்குடா இவனுங்க இந்த வேலையை செய்றானுங்கன்னு ..
உடம்பு முழுவதும் மருந்தின் நிறம் அடர்ந்து படர்ந்து இருக்கும்..
அவர்கள் முகத்தில் ஒரு பயமும் இருக்காது .,
இந்த வெடி பாறைக்கு , இந்த வெடி கிணத்துக்கு , இந்த வெடி திருவிழாவுக்கு என்று அவர்கள் ஓர் முழம் அளவுள்ள பெரிய பெரிய வெடிகளை கைகளால் செய்வதை நம்மால் நம்பவே முடியாது ...

இது வெடிச்ச என்ன ஆகும் என்று நாம் வெகுளித்தனமாய் கேட்கா ...
அவர்கள் அவ்வளவு தான் 100 அடிக்கு இந்த இடமே இருக்காது ,
இரண்டு மாசத்துக்கு முன்னாடி கூட 4 பேர் இறந்துட்டாங்க.
என்று சொல்லிவிட்டு அசட்டு தனமாய் சிரிப்பார்கள்..

நமக்கு பயம் அதிகரித்து விடும் .

ஒரு 100 வேட்டு ஒரு பத்து 100 சரம் ஒரு 10 கலசம் ஒரு 1000 சரம் போதும் கொஞ்சம் சிக்கிரம் கொடுங்க என்று வாங்கியப்பின் அந்த இடத்தை விட்டு உடனே காலி செய்யத்தான் தோன்றும் .

பிறகு ஒரு ஆறு மாதம் கழித்து ..செய்திதாளில் அந்த இடத்தில் ஒரு வெடி விபத்து 3 நபர்கள் பலி.
அரசு முறையற்ற வெடி தயாரிப்பு ஆலைகளுக்கு சீல்.
என்பது செய்தியாக இருக்கும் ..

இது இப்படியே தொடர்கிறது .....
இதற்க்கு மாற்று வழி இல்லையா ...
என்றால்
எல்லாத்துக்கும் நாம் தான் காரணம்...
வெடி வெடிப்போம் டா
ஊரையே அதிர செய்வோம் டா
நாங்க யாருன்னு காட்டுவோம் டா

Standard பட்டாசு எல்லாம் சத்தம் வராது டா
நாட்டு வெடி வெடிப்போம் டா

என்கிற எண்ணமும் ஒரு மறைமுக காரணம்.

அனுமதி இல்லாத பட்டாசு ஆலைகளில் பட்டாசுகளை
வாங்குவதை தவிர்க்க வேண்டும் .

வெடி செய்யும் ஒரு ஏழையீன் வாழ்வாதாரம் போகுதே என்று இந்த விசியத்தில் மட்டும் கரிசனம் காட்டவே கூடாது.

Krishna Kumar G