Tuesday, November 29, 2016

Marriage Expectations அதிகமாகிகிட்டே போகுது ..

இப்பலாம் பொண்ணு மாப்பிள்ளை பார்க்கிற சிஸ்டமே டோட்டலா மாறி போச்சி - வினோதமா இருக்கு ... இப்படியே போனா யாருக்கும் கல்யாணமே நடக்காது ...
Expectations அதிகமாகிகிட்டே போகுது ..
அமெரிக்காவுல வேலை செய்றவனுக்கும் பொண்ணு கிடைக்கல
சிங்கப்பூர்ல வேலை செய்றவனுக்கும் பொண்ணு கிடைக்கல
சென்னையில் வேலை செய்றவனுக்கும் பொண்ணு கிடைக்கல
சொந்த தொழில் செய்றவனுக்கு பொண்ணே யாரும் தர விரும்புல ...
அதே நிலைமை தான் பெண்களுக்கும் ...
ஆனா பெண்களுக்கு easy யா மாப்பிள்ளை கிடைக்குது ஆனா அவங்க அதிலிருந்து ஒரு மாப்பிள்ளைய choose பண்றதுக்குள்ள அவங்களுக்கு 35 வயசு ஆகிடுது .....
அவ்வளவு எதிர்பார்ப்புடன் இருப்பதைப்போல தெரிகிறது ..
கடைசில அவங்கவங்களுக்கு யாரு கிடைக்கிறாங்களோ
அவங்க பின்னாடி பொய் கிட்டே இருக்காங்க ...
இப்ப divorce சர்வ சாதரணமாக மாறிவிட்ட படியால் 25 வயது பொண்ணுக்கே .... பணக்கார divorce மாப்பிள்ளைகள் நேரடியாக வந்து பெண் கேட்கும் நிலைமைக்கு வந்துவிட்டது ..
அதேபோல் divorce ஆனா பெண்களும் அதை பெரும்பாலும் மறைக்கப் பார்க்கிறார்கள்.
இடையே Matrimony நிறுவனங்கள் செம லாபம் பார்க்கிறார்கள் ( எனக்கு அதில் கணக்கு கிடையாது )
Living Together life சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது ..
வருசத்துக்கு நான்கு கம்பெனி மாறுவதை போல் அதிலும் ஆட்களை எளிதில் மாற்றி விடுகிறார்கள்.
இந்த பெண்கள் தட்டுப்பாட்டுக்கு யார் கரணம் என்று நண்பர்களுடன் பலமுறை விவாதித்ததுண்டு ...
அதற்க்கு 80 களில் நிலவிய கள்ளிப்பால் கலாச்சாரமும் ஒரு காரணம் , ஆண் பெண் விகிதாசாரம் சம நிலையில் இல்லை. அதன் தாக்கம் கடந்த 5 ந்து ஆண்டுகளாக மிக கடுமையாக சமுகத்தில் எதிரொலிக்கிறது ...
ஒரே சாதிகுள் வரன் கிடைப்பதும் கடினமாகி விட்டது .
Divorce ஆனவர்கள் வேறு போட்டிக்கு களத்தில் குதிப்பதால் ...கடும் போட்டி நிலவுகிறது ...
இதை எல்லாம் பார்த்தால் மிக வேடிக்கையாக சிரிப்பாக இருக்கிறது ...
சரி இதை சரிக்கட்டலாம் என்று வெளிநாட்டில் இருக்கும் ஆண்களை பார்த்து அங்கே இருக்கும் பெண்களை காதலித்து அங்கேயே திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றால் ...செய்ய மறுக்கிறார்கள் ...அதற்க்கு அவர்கள் சொல்லும் காரணங்களை கேட்டால் ...அவ்வளவுதான் .
இந்திய வரன் தான் வேண்டும் என்று ஒற்றை காலில் நிற்கிறார்கள் .. 40 வயதை கடந்தும் , கொடி கொடியாய் bank balance இருந்தும் அவர்களுக்கு ஒன்றும் சிக்குவதில்லை ...இது உண்மைதாங்க ... நம்புங்க...(இவங்க பெண்களிடம் எதிர்பார்ப்பது மிக பெரிய Expectations)
(சொந்தத்தில் வரன் பூகிங் செய்துவிட்டால் அந்த கதை வேறு அவைகளை இந்த பேச்சுவார்த்தைக்கே சேர்த்து கொள்ள வேண்டாம்)
இதிலும் சிலர் எந்த எதிர்பார்ப்பும் இல்லாததால் எந்த கவலையும் இன்றி தங்கள் பிள்ளைகளுக்கு எளிதில் திருமணம் செய்து முடிக்கிறார்கள்.
இங்கு தற்போது அதீத எதிர்பார்ப்பால் வரன் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது ...
லவ் marriage தான் இப்ப பெஸ்ட் சாய்ஸ் I mean only for marriage .
அதுக்கப்பறம் வாழ்ந்தாலும் சரி divorce ஆனாலும் சரி
லவ் marriage தான் பெஸ்ட் சாய்ஸ் .
இதேவேளையில் எனக்கு திருமணமே வேண்டாம் என்று சொல்லும் ஆண் பெண் categoryகளும் அதிகரித்து கொண்டே வருகிறார்கள்.
எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை
நாட்டில் நடக்கும் உண்மையை தான் சொல்லி இருக்கிறேன் .

+krishna kumar G