Tuesday, November 15, 2016

Demonetisation and Life Certificate

என் அம்மாவை வங்கிக்கு தனியாக நான் அனுப்புவது கிடையாது . வங்கிக்கு அவர் வந்தே ஆகா வேண்டும் என்ற சூழ்நிலை வந்தால் நானும் கூடவே வருவேன் .
ஒவ்வொரு நவம்பர் மாதத்திலும் பென்ஷன் Life Certificate தர வேண்டும் அதற்க்கு நேரில் வர வேண்டும் ..
நானே அழைத்து வருவேன்.அவருக்கு சிரமமின்றி வேலையை முடித்து கொடுப்பேன் .
ஆனால் பலர் பெற்றோருக்கு ஒரு 20, 50 ரூபாய் பஸ்சுக்கு காசு கொடுத்துவிட்டு ... சென்று வர சொல்லிவிடுவார்கள்..
அங்கே ஒரு இளைஞரையும் காண முடியாது .
இது நவம்பர் மாதம் இன்னும் வங்கியால் Life Certificate கொடுக்க முடியவில்லை - காரணம் இந்த Demonetisation சூழ்நிலை .
கால அவகாசம் கொடுத்து இருக்கிறார்கள்
இருந்தாலும் தற்போதைய கூட்ட நெரிசலை பார்த்தால் .
இது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது..
இந்த மாதம் நாடு முழுவது பென்சன் வாங்குவோர் சிரமப்படுவார்கள்.

Krishna Kumar G