Sunday, November 20, 2016

இந்தியாவே தலை நிமிரு

நிறுவனங்களிடம் இருந்து கட்சி நிதியை வாங்குகிற எந்த நபராலும் அல்லது கட்சியாலும் அந்தந்த நிறுவங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது .
அவர்களுக்கு பணிந்துதான் போவார்கள்.
இதுவே நிறுவங்களிடம் இருந்து நிதி வாங்காமல் மக்களிடம் இருந்து மட்டுமே நிதி வாங்கி கட்சி நடத்தி ஆட்சியை பிடித்திருந்தால் !
அவர்கள் தைரியாமாக தவறு செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள்.
இதில் தற்போது ஆளுகிற ஆட்சி எந்த ரகம் என்று சற்று யோசித்து பாருங்கள் .
நிறுவனங்களுக்காக மக்கள் மீது போர் தொடுத்து இருக்கிறார்கள்
நிறுவனங்களின் நிதி தான் அந்த 23 ஆயிரம் கோடி இவர்கள் தேர்தல் பிரச்சார செலவு நிதி .
இவ்வளவு பெரிய தொகை கொடுத்த நிறுவங்கள் மீது அவர்களால் நடவடிக்கை எடுக்க முடியுமா ?
எடுத்தால் விடுவார்களா ?
மக்களே சிந்தித்து பாருங்கள் .
இவர்கள் மட்டுமல்ல இதுவரை ஆட்சி செய்தவர்கள் எவரும் இனி தொடரவே கூடாது .
புதிய விடியலை நோக்கி நாம் செல்ல வேண்டும்.
ஜாதி மதம் கடந்த புதிய பாதையை நாம் செதுக்க வேண்டும்
அதில் தான் புதிய விதிகளுடன் புதிய இந்தியா பிறக்க வேண்டும்
ஒருமுறை தலை நிமிர்ந்திடுங்கள் தலைமுறைகள் தழைத்தோங்கிட

Krishna Kumar G