Friday, November 4, 2016

மன்னரின் தியாகமும் மக்களாட்சியும்

மன்னர் ஆட்சியில் நன்மை அடைந்தவர்கள்
மன்னரை புகழ்வார்கள்
மன்னர் ஆட்சியில் கெடுதல் அடைந்தவர்கள்
மன்னரை இகழ்வார்கள்
இது இயல்பு
ஆனால் அது குறித்து
மக்களாட்சியில் சண்டையிட்டு முட்டி மோதி கொள்வது
அறியாமையின் உச்சம்.
இந்த அறியாமையை அறுவடை செய்கிறது ஊடகம்.
மக்களாட்சியில்
மன்னரும் தியாகி அல்ல அடிமையும் தியாகி அல்ல.
---------------------------------------------
இந்தியா என்ற நாடு உருவாகுவதற்கு முன்
யாரும் இந்தியாவிற்காக போராடவில்லை
அவரவர் நாட்டையும் இனத்தையும் காக்கவே போராடினர்.
-----------------------------------------------
இந்தியா என்ற நாட்டை கட்டமைத்ததே பிரிட்டிஷ்காரர்கள் தான்
அதுவரை சமஸ்தனமாகவும் ,பளையமாகவும் ,நாடுகளாகவும் செல்வா செழிப்போடு எந்த பாகுபாடுமின்றி வாழ்ந்து வந்தார்கள்.
இவர்களை ஒருங்கிணைத்து ஒரே வரி வசூலிக்க
ஒரு நாட்டை உருவாக்கினார்கள் பிரிட்டிஷ்காரர்கள் .
அது தான் இந்தியா.
அது பிற்காலத்தில் அவர்களுக்கே பெரும் தலைவலியாக மாறியது.
உலக யுத்தத்தின் அழுத்தம்,மக்களிடம் பிரிவினை,
நிர்வாக சீர்குலைவு பொருளாதார சிக்கலால் இந்த நாட்டை விட்டே ஓடினார்கள்
----------------------------------------------
இதில் தியாகி என்பனுக்கும் போர் புரிபவனுக்கும் வித்தியாசம் இருக்கிறது..
தியாகி என்பவன் எதோ ஒன்றை இழந்தவன்/ துறந்தவன்.
போர் புரிபன் எதையும் இழக்காமல் இருக்க சண்டை இடுபவன் அல்லது எதோ ஒன்றை கை பற்ற முயல்பவன்..
இப்ப உங்களுக்கு
தியாகி என்கிற பட்டம் வேண்டுமா
போர்புரியும் வீரன் என்கிற பட்டம் வேண்டுமா.
---------------------------------------------
Krishna Kumar G