Wednesday, November 2, 2016

அன்புக்கு வந்த சோதனை காலம்.


அன்பை வெளிபடுத்த
பணமும் பதவியும் தேவை இல்லை என்றாலும்

சிலர்
அன்பை பெறுவதற்கு
அதை தருபவரிடம்
பணமும் பதவியும் இருக்கிறதா என்று கூட எதிர்பார்க்கிறார்கள்
யார் யார்
நம்மேல் அன்பு செலுத்த வேண்டும்
யார் யார்
நம்மேல் அன்பை செலுத்த கூடாது
என்று ஒரு வரையறை வைத்திருக்கிறார்கள்

அதை வைத்துதான்
அவர்களிடம்மிருந்து அன்பை பெற்றுகொள்வார்கள்
அதேபோல் அன்பையும் வெளிபடுத்துவார்கள்

இது அன்புக்கு வந்த சோதனை காலம்.

என்னை போன்றோர்கள்
யார் செலுத்தினால் என்ன
அன்பு கிடைத்தல் போதும்
என்று ஏங்குகிறோம்
அதுவும் இதே காலகட்டத்தில்.