Tuesday, November 1, 2016

மக்கள் ஆசையும் பயமும் வியாபாரம்

2011 கடலூரில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய தானே புயலின் தாக்கம் மக்கள் மனதில் ..அதுக்கும் அடுத்த வருடம் 2012 வந்த நீலம் புயலின் போதும் இருந்தது.. ஆனால் அந்த புயல் கரையை கடப்பதற்கு முன்பே வலுவிழந்தது .
புயல் வருவதற்கு முந்தைய நாள் ஆட்டோவில் ஸ்பீக்கர் வைத்து (announce) அறிவிப்பு செய்தார்கள்.. அத்தியாவாசிய பொருட்களை வாங்கி வைக்கவும் என்று ..செய்தி தாள்களும் அதே சொல்லியது..
மக்கள் பீதியில் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கினார்கள்...
மாலை 7 மணிக்குள் என் வீட்டு அருகே இருந்த கடைகளில் (Super Market ல்) ஒரு பொருளுமில்லை அனைத்தும் காலியானது... எந்த கடையிலும் மெழுவர்த்தி மற்றும் பால் பிஸ்கட் இல்லை..
அடுத்த நாள் விடிந்தது புயல் சென்னையை நோக்கி நகர்ந்தது ...
அங்கே லேசாக காற்று வீசி வெறும் மழையாக மட்டுமே பொழிந்தது...
மாத கடைசியில் கடைகளில் முழு வியாபாரம் நடந்து முடிந்தது.

மக்கள் ஆசையை தூண்டியும் வியாபாரம் செய்யலாம்
அதே போல்
மக்களை பயமுறுத்தியும் வியாயாபாம் செய்யலாம்

என்று இந்த நிகழ்வு உணர்த்தியது.

+krishna kumar G



During Thane cyclone Cuddalore 2011

During Nilam Cyclone 1 Nov 2012 satellite Pictures

Nilam cyclone in Chennai was compared to Sandy in US by me in this pic (same day pictures)