Tuesday, November 29, 2016

Marriage Expectations அதிகமாகிகிட்டே போகுது ..

இப்பலாம் பொண்ணு மாப்பிள்ளை பார்க்கிற சிஸ்டமே டோட்டலா மாறி போச்சி - வினோதமா இருக்கு ... இப்படியே போனா யாருக்கும் கல்யாணமே நடக்காது ...
Expectations அதிகமாகிகிட்டே போகுது ..
அமெரிக்காவுல வேலை செய்றவனுக்கும் பொண்ணு கிடைக்கல
சிங்கப்பூர்ல வேலை செய்றவனுக்கும் பொண்ணு கிடைக்கல
சென்னையில் வேலை செய்றவனுக்கும் பொண்ணு கிடைக்கல
சொந்த தொழில் செய்றவனுக்கு பொண்ணே யாரும் தர விரும்புல ...
அதே நிலைமை தான் பெண்களுக்கும் ...
ஆனா பெண்களுக்கு easy யா மாப்பிள்ளை கிடைக்குது ஆனா அவங்க அதிலிருந்து ஒரு மாப்பிள்ளைய choose பண்றதுக்குள்ள அவங்களுக்கு 35 வயசு ஆகிடுது .....
அவ்வளவு எதிர்பார்ப்புடன் இருப்பதைப்போல தெரிகிறது ..
கடைசில அவங்கவங்களுக்கு யாரு கிடைக்கிறாங்களோ
அவங்க பின்னாடி பொய் கிட்டே இருக்காங்க ...
இப்ப divorce சர்வ சாதரணமாக மாறிவிட்ட படியால் 25 வயது பொண்ணுக்கே .... பணக்கார divorce மாப்பிள்ளைகள் நேரடியாக வந்து பெண் கேட்கும் நிலைமைக்கு வந்துவிட்டது ..
அதேபோல் divorce ஆனா பெண்களும் அதை பெரும்பாலும் மறைக்கப் பார்க்கிறார்கள்.
இடையே Matrimony நிறுவனங்கள் செம லாபம் பார்க்கிறார்கள் ( எனக்கு அதில் கணக்கு கிடையாது )
Living Together life சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது ..
வருசத்துக்கு நான்கு கம்பெனி மாறுவதை போல் அதிலும் ஆட்களை எளிதில் மாற்றி விடுகிறார்கள்.
இந்த பெண்கள் தட்டுப்பாட்டுக்கு யார் கரணம் என்று நண்பர்களுடன் பலமுறை விவாதித்ததுண்டு ...
அதற்க்கு 80 களில் நிலவிய கள்ளிப்பால் கலாச்சாரமும் ஒரு காரணம் , ஆண் பெண் விகிதாசாரம் சம நிலையில் இல்லை. அதன் தாக்கம் கடந்த 5 ந்து ஆண்டுகளாக மிக கடுமையாக சமுகத்தில் எதிரொலிக்கிறது ...
ஒரே சாதிகுள் வரன் கிடைப்பதும் கடினமாகி விட்டது .
Divorce ஆனவர்கள் வேறு போட்டிக்கு களத்தில் குதிப்பதால் ...கடும் போட்டி நிலவுகிறது ...
இதை எல்லாம் பார்த்தால் மிக வேடிக்கையாக சிரிப்பாக இருக்கிறது ...
சரி இதை சரிக்கட்டலாம் என்று வெளிநாட்டில் இருக்கும் ஆண்களை பார்த்து அங்கே இருக்கும் பெண்களை காதலித்து அங்கேயே திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றால் ...செய்ய மறுக்கிறார்கள் ...அதற்க்கு அவர்கள் சொல்லும் காரணங்களை கேட்டால் ...அவ்வளவுதான் .
இந்திய வரன் தான் வேண்டும் என்று ஒற்றை காலில் நிற்கிறார்கள் .. 40 வயதை கடந்தும் , கொடி கொடியாய் bank balance இருந்தும் அவர்களுக்கு ஒன்றும் சிக்குவதில்லை ...இது உண்மைதாங்க ... நம்புங்க...(இவங்க பெண்களிடம் எதிர்பார்ப்பது மிக பெரிய Expectations)
(சொந்தத்தில் வரன் பூகிங் செய்துவிட்டால் அந்த கதை வேறு அவைகளை இந்த பேச்சுவார்த்தைக்கே சேர்த்து கொள்ள வேண்டாம்)
இதிலும் சிலர் எந்த எதிர்பார்ப்பும் இல்லாததால் எந்த கவலையும் இன்றி தங்கள் பிள்ளைகளுக்கு எளிதில் திருமணம் செய்து முடிக்கிறார்கள்.
இங்கு தற்போது அதீத எதிர்பார்ப்பால் வரன் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது ...
லவ் marriage தான் இப்ப பெஸ்ட் சாய்ஸ் I mean only for marriage .
அதுக்கப்பறம் வாழ்ந்தாலும் சரி divorce ஆனாலும் சரி
லவ் marriage தான் பெஸ்ட் சாய்ஸ் .
இதேவேளையில் எனக்கு திருமணமே வேண்டாம் என்று சொல்லும் ஆண் பெண் categoryகளும் அதிகரித்து கொண்டே வருகிறார்கள்.
எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை
நாட்டில் நடக்கும் உண்மையை தான் சொல்லி இருக்கிறேன் .

+krishna kumar G


India's real growth is in local supply chains

India survived all invasion and all sorts of troubles because their supply chain was local and they knew how to do their own local economy
Now the bad thing is the Indian rulers were trying to hang India in world supply chain like Mcdonalds, Target , Pepsi,Coke,P&G,Dow &other MNC's in the name of India's development .
Actually they are digging out India's true soul and making India's into a empty body . Making people to obey their orders and wait for their supplements or consume only their products .
They've already cut down most the local supply chains and they want to do more .
However if we are strong enough , they can't do that .
We've to support local markets that's the strength to India .
I don't say demonetisation is one of the cause & it will make the path to those companies and will cut down the local supply chains but organising these sectors in centralized banking in name of Demonetisation and Tax will lead to this , It will break the local supply chains .
Without breaking this supply chain they have to bring everything possible .It needs deep study on local markets, I mean its not share markets its just local supply chains .
Cashless Economy will come to all people at time if they really need it but don't forcefully push them to it .
Even a Local guy knows this
who plans for real better India

#Krishna Kumar G

இன்று வரை எத்தனையோ உள்நாட்டு வர்த்தக முறைகள் அழிக்கப்பட்டுள்ளது ,
இவர்கள் செய்யும் வர்த்தம் மிகவும் சிறியது
இவர்கள் தனி நபராக அடையும் லாபம் மிகவும் சொற்ப்ப தொகை .
ஆனால் நாடு முழுவதும் அந்த தொகையின் ஒட்டுமொத்த கூட்டு மதிப்பு இந்த நாட்டின் பெரும் பொருளாதார மதிப்பு.
இந்த வர்த்தகத்தில் இருப்பவர்களை
குறுகிய காலத்தில்
ஒரு centralized banking எனப்படும் ஒருங்கிணைந்த வங்கி முறைக்கு அழைத்து செல்வது ..பெரும் பிழை.
இவர்கள் யார் என்பது கூட உலக வர்த்தகத்துக்கு தெரியாது ...இவர்களை அழித்தால் தான் அவர்கள் உள்ளே வர முடியும் .
centralized banking மூலம் இவர்களை முதலில் அடையாளம் காண்பார்கள், பிறகு தனி தனியாக அழிக்கப்படுவார்கள் ... இதனை பெரிய நிறுவனங்கள் நுதன முறையில் இதை செய்து முடிக்கும் ....
இதற்க்கு தெரிந்தோ தெரியாமலே சுய லாபத்துக்காக பல தலைவர்கள் இதற்க்கு வித்திடுகிறார்கள் .
இது நாட்டின் ஆன்மாவை அழிக்கும் செயல்..
இவர்களுக்கு வங்கி கணக்கு தேவை தான் ஆனால் அது மிகவும் பாதுகாப்பான வங்கி முறையாக இருக்க வேண்டும் . centralized banking தனியாரிடம் போக கூடாது , தனி நிறுவனங்களிடம் போக கூடாது ...
கல்வி விவசாயம் போன்ற அடிப்படை தேவைக்காக வாங்கிய கடனை வசூலிக்க அந்த பெரு நிறுவனங்களிடம் பொறுப்பை ஒப்படைக்க கூடாது .
(தேர்தல் நிதிக்காக பல கட்சிகள் பெரிய நிறுவனங்களுக்கு சாதகமாக செயல் படுகிறார்கள்- இது தவறு )

Cashless Economy எல்லாம் காலத்தின் கட்டாயம் தேவை என்றால் தன்னாலே உள்ளே வரும் . இதை மக்களிடம் யாரும் திணிக்க வேண்டாம் .
ஒரே நாளில் அனைத்தையும் மக்கள் கற்றுகொள்வார்கள் என்று மனக்கணக்கு போடாதீர்கள் ,மக்கள் என்ன chitti robot டா ?நொடிகளில் Terabyteல் ஏற்றிக்கொள்ள ? பொறுத்தால் அவர்களே கொஞ்சம் கொஞ்சமாக    debit card பயன்படுத்த தொடங்குவார்கள் .

முதலில் அனைவருக்கும் கல்வி கொடுங்கள் , இடைநிற்றலை நிறுத்துங்கள் , கல்வி தரம் உயர்ந்தால் ,மக்கள் வாழ்க்கை தரம் உயரும் .

புரியுதா மக்களே
இவ்வளவு நாள் நான் ஏன் கூவுகிறேன் என்று ..
Krishna Kumar G


Friday, November 25, 2016

கனவும் நானும்

"கனவும் நானும்
கவிதையும் வாழ்வும்"
என்று தொடங்கிகொள்ளலாம் என்றே கருதுகிறேன்.
இதுவும் ஒரு கனவின் வெளிப்பாடுதான் .
கனவு
கனவே கலை
கனவே காவியம்
கனவே கண்டுபிடிப்பு
கனவே ஆருடம்
கனவே சிந்தனை
கனவே கனவு
கனவே நிஜம்
கனவே நாம்
ஆகவே நான் கனவுகள்
இதைதான் நான் இப்போது விரிவாக சொல்லப்போகிறேன் அல்லது உங்கள் கனவுகளை தூண்டிவிட்டு உங்களை கனவு காண செய்ய போகிறேன் ,
வாருங்கள் கனவுகளுக்குள் பயணிக்கலாம் கனவுகளாக .

(தொடரும்)


Wednesday, November 23, 2016

SBI is a non friendly bank in India

Today in Neyveli : SBI ATM has money 2000 rs notes only but there is no queue,instead people were standing in long queue inside the bank .
I don't have account in SBI becoz even security guard will speak bank rules and close the main door for common people .
I came there for my Mom ,As usual security guard stopped and asked me what purpose you came .
I will come to bank for 100 purposes ,What purpose do you want to hear from me .
Security guard : I will not allow people inside to withdraw money .
I said I'm not came here to withdraw money .
I want to see the manager .For different issue .
He asked What issue ?.
I looked furiously and said I've came to close my account.
He immediately opened the door .
-
but I really came for Life certificate and for a correction in account details .
I meet the manager and said about the correction .
Manager : I'm not responsible for it , you are responsible for it .
I said I'm not entering bank data's in your computer , If so I'll take the responsibility .
Manager : (Had no way to reply , He took other route ) Ok I'll correct it but come in next week , I'm busy now regarding demonetisation issue.
Actually There is no queue or anything else I'm the only person standing in front of him behind two empty chairs .
Respect less bank in India is SBI .
That's why I don't have account there .
(But SBI net banking is user friendly - without writing a single letter to bank manager you can generate user id and password by yourself,Just u need to have a account there its enough,this is very much comfortable one ,For this no need to go to the bank and do those formality rituals )
(When you are in top level handling cores of rupees means this is the best bank but its not best bank for the common people as they have no good hospitality )
India's largest network bank is SBI

Krishna Kumar G



Sunday, November 20, 2016

இந்தியாவே தலை நிமிரு

நிறுவனங்களிடம் இருந்து கட்சி நிதியை வாங்குகிற எந்த நபராலும் அல்லது கட்சியாலும் அந்தந்த நிறுவங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது .
அவர்களுக்கு பணிந்துதான் போவார்கள்.
இதுவே நிறுவங்களிடம் இருந்து நிதி வாங்காமல் மக்களிடம் இருந்து மட்டுமே நிதி வாங்கி கட்சி நடத்தி ஆட்சியை பிடித்திருந்தால் !
அவர்கள் தைரியாமாக தவறு செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள்.
இதில் தற்போது ஆளுகிற ஆட்சி எந்த ரகம் என்று சற்று யோசித்து பாருங்கள் .
நிறுவனங்களுக்காக மக்கள் மீது போர் தொடுத்து இருக்கிறார்கள்
நிறுவனங்களின் நிதி தான் அந்த 23 ஆயிரம் கோடி இவர்கள் தேர்தல் பிரச்சார செலவு நிதி .
இவ்வளவு பெரிய தொகை கொடுத்த நிறுவங்கள் மீது அவர்களால் நடவடிக்கை எடுக்க முடியுமா ?
எடுத்தால் விடுவார்களா ?
மக்களே சிந்தித்து பாருங்கள் .
இவர்கள் மட்டுமல்ல இதுவரை ஆட்சி செய்தவர்கள் எவரும் இனி தொடரவே கூடாது .
புதிய விடியலை நோக்கி நாம் செல்ல வேண்டும்.
ஜாதி மதம் கடந்த புதிய பாதையை நாம் செதுக்க வேண்டும்
அதில் தான் புதிய விதிகளுடன் புதிய இந்தியா பிறக்க வேண்டும்
ஒருமுறை தலை நிமிர்ந்திடுங்கள் தலைமுறைகள் தழைத்தோங்கிட

Krishna Kumar G


இராணுவ ஆட்சியை எதிர்ப்பார்க்கிறேன்

குறிப்பிட்ட அளவு கருப்பு பணம் ஒழியவில்லை என்றால்
ஜனவரி கூட வேண்டாம் முடிந்தால் மே மாதம் ஆட்சியை கலைத்து விட்டு தேர்தலை சந்தியுங்கள்.
மக்கள் யார் என்று காட்டுவார்கள் .
அனால் அதுவரை இந்த ஆட்சி இருக்குமா என்பதே சந்தேகம் தான் .
எப்போது கலவரம் வெடிக்கும் என்று தெரியவில்லை என்று உச்ச நீதிமன்றம் சொல்லி இருக்கிறது .
அப்படி நிகழ்ந்தால் ஒன்று குடியரசு தலைவரின் ஆட்சி வரும்
அல்லது
இராணுவ ஆட்சி வரும் .
அடுத்த நொடியே விஜய்மல்லைய முதல் அதானி வரை கைது செய்யப்படுவார்கள்.
அவர்களது நிறுவனங்கள் நாட்டுடைமையாக்கப்படும்
நாட்டை சுரண்டுகிற
அந்த கருப்பு வட்டம் கலைக்கப்படும்
அப்போது உங்களுக்கு கற்றுகொடுக்கப்படும்
எப்படி கருப்பு பணம் ஒழிப்பது என்று.
கருப்பு பணம் புழக்கத்துக்கு வரும் ..
இராணுவ ஆட்சியை எதிர்ப்பார்க்கிறேன்
அடுத்த ஒரு வருடம் கூட
அதை நான் பொருத்து போக தயாராக இருக்கிறேன்

Not War like situation in border its now Inside the Country

Krishna Kumar G


Saturday, November 19, 2016

AI technologies will be the survivor

It will identify all possibilities
by analysing all patterns
and one day it will start to program by itself (Without mistakes & No need for human testers 😂)
Then it makes its own self programmed creatures
which will rule the world
Today's AI technologies is the beginning for the future Robots
and only this technology will survive in the future

Krishna Kumar G


அமெரிக்க தேர்தலும் இந்திய அரசியலும் செவ்வாய் கிரக காதலியும்

முன்பு விளம்பரம் மற்றும் Social Mediaவால் ஒபாமாவை வெற்றி பெற செய்ய முடிந்தது .
ஆனால்
இது தற்போது வேலை செய்ய வில்லை ..
இந்த தோல்வியை விளம்பர நிறுவனங்கள் & சோசியல் மீடியா நிறுவனர்களால் பொறுக்கமுடியவில்லை .
இவ்வளவு முயன்றும் ஹிலாரி எப்படி தோற்றார் என்று அவர்களால் கணிக்க முடியவில்லை.
மக்களிடம் இருந்த அவ்வளவு எதிர்ப்பையும் Trump வெற்றியாக அறுவடை செய்தது எப்படி என்ற குழப்பம் உலகம் எங்கும் எதிரொலித்து கொண்டே இருக்கிறது .
இதற்கும் இந்தியாவிற்கும் தொடர்பு இருக்கிறதா என்பது ஆய்வு செய்ய வேண்டிய விசியம் , அது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் நம் அரசியல் வாதிகள் அமெரிக்காவின் அரசியல் வாதிகளின் யுக்திகளை அப்படியே கடைபிடிப்பவர்கள்.
ஒபமாவின் formula தற்போது இந்தியாவில் செல்லாது என்று நன்கு உணர்ந்திருப்பார்கள்.
மாறாக
Trump ன் methodologyக்கு விரைவில் மாறுவார்கள் என்றே தோன்றுகிறது ..
பிற தேசத்தை சேர்ந்தவர்களை இந்தியாவைவிட்டு விரட்டுவோம் என்று அவர்கள் சொல்லி அரசியல் செய்ய போகும் காலம் வெகு தொலைவில்ல என்றே தோன்றுகிறது .
இப்போது அந்த கேள்வி என்னவேனில் பிற தேசத்தார் என்போர் இந்தியாவில் யார் என்பது தான் .
ஒருவேளை இது மதத்தை குறிக்குமோ அல்லது ஜாதியை குறிக்குமோ என்பதுதான் .

சரி அது என்ன செவ்வாய் கிரக காதலி  ?
சும்மா ஒரு பஞ்ச் ல் லைன்
"சும்மா கிடக்கிற காசை கங்கையில் கரைத்தானாம் ஆண்டி"
என்பதைப்போல தான் செவ்வாய் கிரகத்துக்கு நானும் அனுப்பினேன் ஒரு விண்வெளி ஓடத்தை ..
இங்கு சோத்துக்கே வழிய காணோம் கட்டிக்க கோவணம் காணோம்
பக்கத்து ஊருக்கு போக பேருந்தை காணோம்
ஆனால் மங்கல்யான் அனுப்பி மக்கள் காசை மங்களம் பாடுகிறார்கள்
பெருமை வாதிகள்.
செயற்க்கைகோளை அனுப்புங்கள் அனால் அது பின் நோக்கிய தொழில்நுட்ப்பத்தில் அல்ல முன் நோக்கிய தோழி நுப்பத்தில்.

மற்றவர் எள்ளி நகைக்கும் படி செய்யாதிர்கள்.

நாங்களும் செய்தோம் என்பதல்ல
நாங்கள் தான் செய்தோம்
நாங்கள் மட்டும் தான் செய்தோம்
என்பது தான் பெருமை

தேசபக்த்தன்

+krishna kumar G




Friday, November 18, 2016

Body clock changed

My body's internal clock is out of sync
even in the same time zone
nowadays many guys face this ,I won't say its a problem.
but its something unusual ..

I think we have to learn something at that time
or Travel somewhere else or enjoy at that time or have fun,sex or something else.
wait but I'm alone.


Krishna Kumar G


Wednesday, November 16, 2016

Dear Indians want to keep fake news sites out of your sight?

There are many sites which promotes fake news .and many sites run only to promote ads and generate their revenue .

Social media is a place were people get attracted to these fake sites and get into read up those fake news .
There are many fake social media pages attract people and get them on a trap by fake news .

Even violence or civil war may occur in a country according to these fake news.

This fake news were created by someone who has some intention to bring people to under their control by touching their sensitive issues . They attract people and bring them under their control and diverting them from the main real issues . These things may happen due to for politics , advertisements and even terrorism acts


நான் வழக்கமா நண்பர்களோடு பேச கூடிய செய்தி தான் இது ..
தவறான செய்தி பரப்பும் இணையதளங்களை தடுக்க வேண்டும் என்று .
நேற்று Google Facebook இரண்டுமே தடை செய்ய தொடங்கி விட்டது .
அதற்க்கு ஒரு நாள் முன்பு உங்களிடம் நான் பேசிய செய்தி கிழே Screenshotல்.
நேற்று இரவே பிஜேபி யுடைய ஒரு முக்கிய இணையத்தை கூகுள் தடை செய்துள்ளது .உடனே.அவர்கள் இப்போது ஒரு புது இணையத்தில் தவறான செய்தியை பரப்ப தொடங்கி இருக்கிறார்கள்.
இதற்க்கு இணைப்பு பாலமாக இருப்பது சமுக வலைத்தளங்கள் தான் .
Facebook உழியர்கள் இன்னும் தீவிரமாக வேலை செய்ய வேண்டும் ..
ஒரு சில குறிப்பிட்ட Facebook பக்கங்களை முடக்கினால் இந்த தவறான செய்திகள் மக்களை சென்றடையாமல் தடுக்கலாம் .
இவர்கள் ஆட்சியை பிடித்ததே சமுக வலைதளங்களில் தவறான செய்திகளை பரப்பி தான் ..
Photoshop செய்யப்பட்ட புகைப்படங்களை வைத்தே ஆட்சிக்கு வந்தவர்கள் என்பது உலகம் அறிந்ததே .


( ஒரு சிறிய கட்சிக்கே நேரடியாக 1 இணையதளமும் மறைமுகமாக 10 இணைய தளமும் இருக்கும் அதற்க்கு 20-30 எழுத்தாளர்கள் இருப்பார்கள் .
அதுவே பெரிய கட்சி என்றால் சொல்லவே வேண்டாம் 2-3 நேரடி இணைய தளமும் மறைமுகமாக நூற்று கணக்கான இணையதளமும் ... சமுக வலைதளத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட போலி கணக்குகளும் இருக்கும்.
இதில் வேலை செய்யும் ஆட்கள் என்று சிலர் தான் இருப்பார்கள் ஆனால் Freelancer ராக ஆயிர கணக்கில் வேலை செய்வார்கள்.
அவர்களின் நோக்கமே அந்த கட்சிக்கு ஆதரவாக செயல்படுவது .
எதிராக செயல்படுபவர்களை ஒடுக்குவது (Comment Messages) .
இதற்காக எந்த extreme வேண்டும் என்றாலும் போவார்கள் .
இவர்கள் தான் இந்த MEME போடுவது Edit செய்து வீடியோ போடுவது ... என்று பல்வேறு வேலைகள் செய்வார்கள் .
இது தெரிந்ததே
அனால் நீங்கள் கண்டு பிடிக்க முடியாதது போல பல (வெப்சைட் ) இணையதளம் இவர்கள் வைத்திருப்பார்கள் , இது இந்த கட்சியை சேர்ந்த இணையதளம் என்று நீங்கள் சொல்லவே முடியாத படி இருக்கும் .
வெறும் நல்ல செய்திகளை மட்டுமே பல மொழிகளில் போடுவார்கள் ஆனால் தங்களுக்கு தேவை படும்போது அதை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான செய்தியை சந்தர்ப்பம் பார்த்து போட்டுவிடுவார்கள்..
இது மேல் மட்டத்தில் இருப்பவர்களுக்கு நன்றாக தெரியும்
ஆனால் பொதுமக்கள் இது தான் உண்மையான செய்தி என்று நம்பி விடுவார்கள் .
எனக்கு இணையதள வடிவமைப்பு தெரியும் என்பதால் இதனை எளிதில் கண்டு பிடித்து விடுவேன் .
இருந்தாலும் ஒரு சில இணைய தளங்களை கண்டு பிடிக்கவே முடியாத படி இருக்கும் .
நீங்கள் பொதுவாக செய்திகளை Reputed or Registered நியூஸ் தளங்களில் இருந்து மட்டுமே பார்ப்பதும் படிப்பதும் நல்லது ..அதன் ஆசிரியர் செய்தி எழுதியவர் என்று அனைத்து விவரங்களும் அதில் இருக்கும் , அவர்கள் உண்மை தன்மையை ஒரு கூகுள் தேடலில் நாம் உறுதி செய்து விடலாம் , அல்லது சமுக வலைதளத்தில் உறுதி செய்து விடலாம் ..
இதனை ஏன் சொல்கிறேன் என்றால் பலர் தவறான செய்திகளை உண்மை என்று ஷேர் செய்கிறீர்கள், அது பெரும்பாலும் போலி கணக்குகளில் இருந்து வரும் இணையதள செய்தியாக இருக்கிற படியால் இதை உங்களுக்கு சொல்கிறேன் .
நான் சொன்னது புரியவில்லை என்றால் ... என்னிடம் மேலும் விளக்கம் கேட்டால் சொல்லுவேன்.
14 November at 21:50 )

List out the few main fake sites which people read today through social media :

http://postcard.news
Indiaraising
Indiaagainstcorruption (Social media page)

Will update ...

Krishna Kumar G



Tuesday, November 15, 2016

Demonetisation and Life Certificate

என் அம்மாவை வங்கிக்கு தனியாக நான் அனுப்புவது கிடையாது . வங்கிக்கு அவர் வந்தே ஆகா வேண்டும் என்ற சூழ்நிலை வந்தால் நானும் கூடவே வருவேன் .
ஒவ்வொரு நவம்பர் மாதத்திலும் பென்ஷன் Life Certificate தர வேண்டும் அதற்க்கு நேரில் வர வேண்டும் ..
நானே அழைத்து வருவேன்.அவருக்கு சிரமமின்றி வேலையை முடித்து கொடுப்பேன் .
ஆனால் பலர் பெற்றோருக்கு ஒரு 20, 50 ரூபாய் பஸ்சுக்கு காசு கொடுத்துவிட்டு ... சென்று வர சொல்லிவிடுவார்கள்..
அங்கே ஒரு இளைஞரையும் காண முடியாது .
இது நவம்பர் மாதம் இன்னும் வங்கியால் Life Certificate கொடுக்க முடியவில்லை - காரணம் இந்த Demonetisation சூழ்நிலை .
கால அவகாசம் கொடுத்து இருக்கிறார்கள்
இருந்தாலும் தற்போதைய கூட்ட நெரிசலை பார்த்தால் .
இது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது..
இந்த மாதம் நாடு முழுவது பென்சன் வாங்குவோர் சிரமப்படுவார்கள்.

Krishna Kumar G


Monday, November 14, 2016

One Life One Heart

இந்த இரண்டு நிகழ்வுக்கு நடுவுல ஒரு அற்ப்புதமான ஒரு நிகழ்வு நடந்து போச்சி ..

நான் youtube ல "One Time" justin bieber பார்த்துகிட்டே அதை fbல இப்படி ஷேர் பண்ணேன் ...
One Life One Heart என்று

கடைசில அது எனக்கு வேற மாதுரி ஆப்பு வச்சிடுச்சி ...

1 Block வாங்கி கொடுத்தது முதல் Block Whats app ல் .

அது எனக்கு யாரோ செய்யாத தப்புக்கு தண்டனை கொடுத்தது போல் இருந்தது .

நான் மன்னிப்பு கேட்டுப்பார்த்தும் கிடைக்கவில்லை .

அது அந்த நபரின் தலைகனத்தை  வெளிபடுத்தியது ..

இருந்தாலும் பொறுத்துக்கொண்டேன்






Sunday, November 13, 2016

காசு இல்லை காரியம் செய்ய

என்னை வாழ வைத்த தெய்வம் (2010 மார்ச் 19ல்) .என் அப்பா காலமானார்.
காசு இல்லை காரியம் செய்ய
என் தந்தை இறந்தபோது கூட நான் அழவே இல்லை
காரணம் இருதிசடங்கின்  அனைத்து  பொறுப்புகளும்  என் தலையில் ..
அடித்து அழுவ கூட நேரமில்லை ...வாய்ப்பில்லை ...
ஏன் என்று யாரும் என்னை கேட்கவுமில்லை ....
இறுதியாக ஒருவன் வந்து என்னை கட்டி அணைத்துவிட்டான்
கண்ணிர் வந்துவிட்டது .
கதறி அழுதுவிட்டேன் .
விடுடா அழுவட்டும் என்று விட்டுவிட்டார்கள்.

இது வார்த்தைகளால் சொல்லி புரிவதில்லை
உணர்வுகளால் உணரப்படுவது.


Cashless India .

Cashless
and
I've been called as fool
by the
same
Cashless people
who is bearing
Cashless like a fool
India is running on Cashless Economy
with Cashless Bank ,Cashless ATM's and Cashless People .
Cashless India .

Krishna Kumar G


ஜாதிகளுக்கு எதிரான Surgical strike.

ஒரே இரவில் ஒரே அறிவிப்பில்
ஜாதிகளை ஒழித்தால் .
நான் பாராட்டுவேன்

ஜாதி சான்றிதழ்கள் இனி செல்லாது
ஜாதி சங்கங்கள் கலைக்கப்படும்
ஜாதி அமைப்புகளின் உரிமம் ரத்து செய்யப்படும்

அனைவரும் சமம்
அனைவரும் ஒரே குடும்பம்
ஒரே இந்தியா
ஒரே தேசம்
இது எப்போது
இந்த ஜாதிகளுக்கு
எதிரான Surgical strike.

இதனால் மக்களுக்கு எந்த கஷ்டமும்மில்லை
நாட்டுக்கு நஷ்டமும்மில்லை

சகோதரத்துவம் வளரும்
சமத்துவம் செழிக்கும்

ஆவலுடன்
Krishna Kumar G


Saturday, November 12, 2016

Google Map Maker is closing

We need Map Maker please don't close it .

Its one of the greatest product of Google

This is very important product of Google

The final out form of Google Map Maker is Google Maps
Which is Widely used by people all over the world and its used in many GPS devices.

If there is no Google MapMaker then there is no reason of using Google Maps
It will be considered as blind in woods
There will be no routes for the destination .
No one will mark the distance for the destination .

https://mapmaker.google.com/mapmaker
I'm unhappy about it 안🙀

Google Map Maker is closing in March 2017

If it was closed then we will find many problems while travelling to unknown places.

I guess only 30 to 40 % of the places only have been marked in Google maps since it was started.
Still there is long way to go but before that closing the main product Map Maker is not the good idea .



Honour Badges


There is no further news about it from Google whether they're switching to new products related to it or not

@Krishna Kumar G

Thursday, November 10, 2016

நீ முன்னே வந்தால் போதும்

Che Guevara படத்தை T-Shirtல் அச்சடித்து சுற்றி திரிய தெரியும்
Marxism புஸ்தகத்தை கையில் பிடித்துகொண்டு சுற்ற தெரியும் ..
ஆனால்
எல்லையை தாண்டி சிந்திக்க தெரியாது .. .
தெரிந்தாலும் அதை பற்றி ஒரு வார்த்தை கூட பேச தெரியாது ....
பயம்
நேற்றைய தலைமுறைக்கு
அதுபோல்
இந்த தலைமுறையும் அப்படி இருந்துவிட கூடாது
இது அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்.

நீங்கள்
Che Guevara படத்தை T-Shirtல் அச்சடித்து சுற்ற வேண்டாம்
Marxism புஸ்தகத்தை கையில் பிடித்து சுற்ற வேண்டாம்.

உலக வாசல் திறந்து கிடக்கு
நீ முன்னே வந்தால் போதும்
புதிய பாதைகள் பிறக்கும்

Krishna Kumar G


Sunday, November 6, 2016

Solutions for Top issues in India 2016

Who is Anti national and What is Anti national ?
It should be decided only  by the court according to the constitution but not by a single political party .
Now even an individual person from a political party or organization  decides who is anti national and this not democratic way to face this issue .

Are you theist or atheist it doesn't matter
but one thing that you need is tolerance

Krishna Kumar G


Saturday, November 5, 2016

இரவுகள் தூக்கமின்றி கழிகிறது

அய்யய்யோ விடிஞ்சிடுச்சா
கதை முடிஞ்சது போ
இன்னும் கொஞ்ச நேரத்துல பால்காரர் வந்துடுவார் ...
அப்பறம் வழக்கம் போல ஒரு நாளின் வேலைகள் தொடங்கிவிடும்...
சங்கித ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா என்னவோ மயக்கம் .
இணையத்துடன்னான உறவு வர வர இப்படிதான் போகுது

Krishna Kumar G


நேரங்கள் போதவில்லை வேலைகள் பலவிதம்

காலையில் எழுந்ததும் சில நண்பர்களுக்கு போன் செய்யலாம்ன்னு நினைப்பேன்
சரி அப்பறம் பண்ணலாம்
அப்பறம் பண்ணலாம்
என்று தொடர்ந்து நினைத்து கொண்டே இறுதியாக
போனை கையில் எடுக்கும் போது
இரவு மணி 12 ஆகிவிடுகிறது...
சரி தூங்குவாங்க விட்டுடுலாம்
நாளைக்கு பண்ணலாம்...என்று
இப்படியாக ஒரு மாதம் போகிடுச்சி.
அவ்வளவு வேலை


Krishna Kumar G


Friday, November 4, 2016

மன்னரின் தியாகமும் மக்களாட்சியும்

மன்னர் ஆட்சியில் நன்மை அடைந்தவர்கள்
மன்னரை புகழ்வார்கள்
மன்னர் ஆட்சியில் கெடுதல் அடைந்தவர்கள்
மன்னரை இகழ்வார்கள்
இது இயல்பு
ஆனால் அது குறித்து
மக்களாட்சியில் சண்டையிட்டு முட்டி மோதி கொள்வது
அறியாமையின் உச்சம்.
இந்த அறியாமையை அறுவடை செய்கிறது ஊடகம்.
மக்களாட்சியில்
மன்னரும் தியாகி அல்ல அடிமையும் தியாகி அல்ல.
---------------------------------------------
இந்தியா என்ற நாடு உருவாகுவதற்கு முன்
யாரும் இந்தியாவிற்காக போராடவில்லை
அவரவர் நாட்டையும் இனத்தையும் காக்கவே போராடினர்.
-----------------------------------------------
இந்தியா என்ற நாட்டை கட்டமைத்ததே பிரிட்டிஷ்காரர்கள் தான்
அதுவரை சமஸ்தனமாகவும் ,பளையமாகவும் ,நாடுகளாகவும் செல்வா செழிப்போடு எந்த பாகுபாடுமின்றி வாழ்ந்து வந்தார்கள்.
இவர்களை ஒருங்கிணைத்து ஒரே வரி வசூலிக்க
ஒரு நாட்டை உருவாக்கினார்கள் பிரிட்டிஷ்காரர்கள் .
அது தான் இந்தியா.
அது பிற்காலத்தில் அவர்களுக்கே பெரும் தலைவலியாக மாறியது.
உலக யுத்தத்தின் அழுத்தம்,மக்களிடம் பிரிவினை,
நிர்வாக சீர்குலைவு பொருளாதார சிக்கலால் இந்த நாட்டை விட்டே ஓடினார்கள்
----------------------------------------------
இதில் தியாகி என்பனுக்கும் போர் புரிபவனுக்கும் வித்தியாசம் இருக்கிறது..
தியாகி என்பவன் எதோ ஒன்றை இழந்தவன்/ துறந்தவன்.
போர் புரிபன் எதையும் இழக்காமல் இருக்க சண்டை இடுபவன் அல்லது எதோ ஒன்றை கை பற்ற முயல்பவன்..
இப்ப உங்களுக்கு
தியாகி என்கிற பட்டம் வேண்டுமா
போர்புரியும் வீரன் என்கிற பட்டம் வேண்டுமா.
---------------------------------------------
Krishna Kumar G


Thursday, November 3, 2016

கசையடி வசையடி

சவூதி அரேபியாவில்
தவறு செய்தால் கை கால் தலை துண்டிக்கப்படும்
இல்லையேல் கசை அடி தரப்படும்.
இதியாவில்
தவறு செய்தால் என்கவுண்டர் செய்யப்படும்
இல்லையேல் லாக்கப் டேத் நிகழ்த்தப்படும்
இது சட்டவிரோதம் என்றாலும்
இரு நாடுகளிலும்
இதை நியாப்படுத்த பல வழிகள் வைத்திருக்கிறார்கள்

வசையடி
Krishna Kumar G


Wednesday, November 2, 2016

அன்புக்கு வந்த சோதனை காலம்.


அன்பை வெளிபடுத்த
பணமும் பதவியும் தேவை இல்லை என்றாலும்

சிலர்
அன்பை பெறுவதற்கு
அதை தருபவரிடம்
பணமும் பதவியும் இருக்கிறதா என்று கூட எதிர்பார்க்கிறார்கள்
யார் யார்
நம்மேல் அன்பு செலுத்த வேண்டும்
யார் யார்
நம்மேல் அன்பை செலுத்த கூடாது
என்று ஒரு வரையறை வைத்திருக்கிறார்கள்

அதை வைத்துதான்
அவர்களிடம்மிருந்து அன்பை பெற்றுகொள்வார்கள்
அதேபோல் அன்பையும் வெளிபடுத்துவார்கள்

இது அன்புக்கு வந்த சோதனை காலம்.

என்னை போன்றோர்கள்
யார் செலுத்தினால் என்ன
அன்பு கிடைத்தல் போதும்
என்று ஏங்குகிறோம்
அதுவும் இதே காலகட்டத்தில்.


Tuesday, November 1, 2016

3 years after the accident a coincidence

What a coincidence unknowingly/fate Today morning went to same hospital
for my friend Balaji.K who came for me on that day and helped me .
This is the day I got into two bike accidents .
Now only saw this post in fb memories
No words
God is Great
Krishna Kumar G


மக்கள் ஆசையும் பயமும் வியாபாரம்

2011 கடலூரில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய தானே புயலின் தாக்கம் மக்கள் மனதில் ..அதுக்கும் அடுத்த வருடம் 2012 வந்த நீலம் புயலின் போதும் இருந்தது.. ஆனால் அந்த புயல் கரையை கடப்பதற்கு முன்பே வலுவிழந்தது .
புயல் வருவதற்கு முந்தைய நாள் ஆட்டோவில் ஸ்பீக்கர் வைத்து (announce) அறிவிப்பு செய்தார்கள்.. அத்தியாவாசிய பொருட்களை வாங்கி வைக்கவும் என்று ..செய்தி தாள்களும் அதே சொல்லியது..
மக்கள் பீதியில் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கினார்கள்...
மாலை 7 மணிக்குள் என் வீட்டு அருகே இருந்த கடைகளில் (Super Market ல்) ஒரு பொருளுமில்லை அனைத்தும் காலியானது... எந்த கடையிலும் மெழுவர்த்தி மற்றும் பால் பிஸ்கட் இல்லை..
அடுத்த நாள் விடிந்தது புயல் சென்னையை நோக்கி நகர்ந்தது ...
அங்கே லேசாக காற்று வீசி வெறும் மழையாக மட்டுமே பொழிந்தது...
மாத கடைசியில் கடைகளில் முழு வியாபாரம் நடந்து முடிந்தது.

மக்கள் ஆசையை தூண்டியும் வியாபாரம் செய்யலாம்
அதே போல்
மக்களை பயமுறுத்தியும் வியாயாபாம் செய்யலாம்

என்று இந்த நிகழ்வு உணர்த்தியது.

+krishna kumar G



During Thane cyclone Cuddalore 2011

During Nilam Cyclone 1 Nov 2012 satellite Pictures

Nilam cyclone in Chennai was compared to Sandy in US by me in this pic (same day pictures)


தமிழகம் ஒரு குப்பை தொட்டி

தமிழ்நாட்டுல இருக்கிற அரசியல்வாதிகள் தாது மணலை கடத்தி ..
வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்றாங்க ..
அவங்க அதை பயன்படுத்தி அணு உலை , அணு ஆயுதம் செய்யுறாங்க.
பிறகு அதை நம்ம நாடு ஒப்பந்தம் போட்டு காசு கொடுத்து வேற வாங்குறாங்க
அணு கழிவுகளை நம்ம மண்ணுலையே மறுபடியும் சேமித்து வைக்குறாங்க
குறிப்பா தமிழகம் இப்ப ஒரு குப்பை தொட்டி
(ஏன் 2001 US Twin Tower கழிவு கூட இங்க தான் இறக்குமதி செஞ்சாங்க)
இது யாருக்கு லாபம் யாருக்கு நஷ்டம்

Krishna Kumar G