Friday, September 30, 2016

இரண்டாம் வகுப்பு பாம்பு

ஒரு கிராமத்து பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்துகொண்டிருந்தேன் ...
தொலைக்காட்சியில் வரும் மாஹபாரதம் ராமாயணம் பார்த்துவிட்டு..
தினமும் மதியம் மாணவர்கள் அதை அப்படியே வகுப்பறைக்குள் விளையாடுவார்கள்,
ஒருநாள் மதிய உணவு உண்ட களைப்பு அசதியில் .
வகுப்பறைக்குள் வந்தேன் .
அப்போது மஹாபாரத போர் நடந்து கொண்டிருந்தது...
ஒரு பெஞ்ச் வரிசையில் இருக்கும் மாணவர்கள் இன்னொரு பெஞ்ச் வரிசையில் இருக்கும் மாணவர்களோடு போர் செய்து கொண்டிருந்தார்கள்...
வில்லும் அம்பும் பேப்பர் ராக்கெட்டில் பறந்து கொண்டிருந்தது..
நான் உள்ளே வந்ததும் கிருஷ்ணர் வந்துவிட்டார் ..
என்று நான் அமரும் பெஞ்ச் வரிசையில் இருக்கும் மாணவர்கள் சத்தம் போட்டார்கள்...
எனக்கோ உண்ட களைப்பு.. நேராக பெஞ்சில் ஏறி படுத்துவிட்டேன்...
டேய் பாம்பு டா என்றான் ஒருவன்...
திடுக்கிட்டு எழுந்து பார்த்தேன்...
ஏமாந்துட்டியா என்றான்...
வாடா விளையாட என்றார்கள்..
அதற்குள் இன்னொருந்தன் உண்மையாலும் பாம்பு என்றான்...
அனைவரும் பயத்தில் டெஸ்க்க்கு அடியில் இருந்த பை மூட்டைகளை எடுத்து மேலே வைத்து விட்டோம்...
அதே வேலையில் டீச்சர் உள்ளே வந்துவிட்டார்...
வந்ததும்
ஏன் எல்லாரும் பையை மேலே வைத்துள்ளிர்கள் என்றார்..
நாங்கள் பாம்பு என்றோம்...
அலறி அடித்து ஓடிவிட்டார்
பிறகு சும்மா சொன்னோம் மிஸ் என்று அழைத்து வந்தோம்..
வந்தவர் அனைவரும் பைகளை கிழே வையுங்கள் என்று சொன்னதும் அனைவரும் பைகளை கிழே வைத்தோம்..
Attendance எடுத்து முடித்து
வகுப்பு எடுக்க சரி பாடம் நடத்த தொடங்கினார்..
அந்த வகுப்புக்கான புஸ்தகத்தை பையில் இருந்து எடுக்க கிழே குனிந்தேன்...
அவ்வளவு தான் ..
அலறி அடித்து வகுப்பறையை விட்டு ஓடினேன்...
என் பின்னால் வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் வெளியே ஓடி வந்துவிட்டார்கள்...
மிஸ் வந்து டேய் உண்மையா பாம்பு பாத்தியா என்றாகள் ..
அமாம் மிஸ் என் காலுக்கு அடியில் இருந்தது என்றேன்...
உடனே அருகில் இருந்த இரண்டு ஆட்களை அழைத்து வந்து ... உள்ளே தேட சொன்னார்கள்..
அவர்கள் நான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து இரண்டு பெரிய பாம்புகளை பிடித்து அடித்து கொன்றார்கள்...
அது சார பாம்பு நல்ல பாம்பு என்றார்கள்
எனக்கு நல்ல சகுனம் என்றார்கள்..
இதை கேள்விபட்ட என் பெற்றோர் அடுத்த வருடம் என்னை வேறு பள்ளிக்கே மாற்றிவிட்டார்கள்...
என் கவலை எல்லாம் ஒரு Co-ed பள்ளியில் இருந்து வெறும் ஆண்கள் மட்டுமே படிக்கும் பள்ளிக்கு மாற்றிவிட்டார்கள் என்பதுதான்...
--- அப்பறம் சொல்லுறேன்---
(இதன் விளைவு... அந்த பள்ளியில் என்னுடன் படித்த பிள்ளைகள் ... கல்லூரியில் எனக்கு சீனியர்களாக இருந்தார்கள் அவர்களது தம்பிகள் என்னுடன் வகுப்பறையில் இருந்தார்கள்..
அக்காவும் தொஸ்த்துதான் தம்பியும் friend தான்..)

(இன்று  அந்த  பள்ளி  இல்லை  இடிக்க  பட்டுவிட்டது)