Sunday, October 30, 2016

தமிழ்நாடு ஓய்வில்

தற்போது இரண்டு ஓய்வுகள்
ஒன்று வேலை செய்து கொண்டே ஓய்வு எடுக்கிறது
மற்றொன்று
ஓய்வு எடுத்துக்கொண்டே வேலை செய்கிறது

இரண்டுக்கும் ஓய்வு தேவை
என்பதை புரிந்து
ஏற்க்கனவே
ஓய்வை தர தவறியது
இந்த
தமிழ்நாடு

தற்போது
காலம் அதை
செவ்வென செய்கிறது
"தமிழ்நாடு ஓய்வில்"


Krishna Kumar G


உளவாளி சகுனிகள்

நண்பர்கள் யாருன்னு தெரியலைன்னாலும் பரவாயில்லை
எதிரிகள் யாருன்னு தெரிஞ்சி வச்சிக்கணும்னு சொல்லுவாங்க
அதுமட்டும் போதாது
கூடவே இருந்து சகுனி வேலை பார்க்கிறவன் யாரு
உளவாளி யாருன்னு கண்டிப்பா தெரிஞ்சி வச்சிக்கணும்.
எதிரியை கூட விட்டுடலாம்
but this bastard விடவே கூடாது கண்காணிச்சிகிட்டே இருக்கணும்
ஒன்னும் செய்யமாட்டான் நம்ம நல்ல இருக்கிறதை பாத்து வயத்தெரிச்சல் தாங்காம கூடவே இருந்து கவுத்துடுவான்.

இது பெண்களுக்கும் பொருந்தும்

@Krishna Kumar G


விடுமுறை பிள்ளைகள்

தீபாவளிக்கு வீட்டுக்கு வந்து

(அவர்களுக்காக காத்துகிடந்த
பெற்றோரின் அன்பினை இனிப்பாய் சுவைத்து
புது ஆடை உடுத்தி
பட்டாசுகளை மகிழ்வாய் வெடித்து )

இப்ப பிள்ளைங்க ஊருக்கு கிளம்பிய  பின்பு ..
பெற்றோர்கள் காலண்டரை புரட்டுறாங்க
அடுத்து பிள்ளை எப்ப திரும்ப ஊருக்கு வருமென்று /// :) <3

தற்போது அவர்களின் அன்பின் வெளிபாடு அந்த காலண்டருக்கு மட்டும் தான் தெரியும்...
அகவே அது சிக்கிரம் உதிர்ந்து விழும்

Krishna Kumar G

(இது கவிதை இல்லை)

இந்திய பெற்றோர்களின் தற்போதைய நிலை
பொதுவாக பிள்ளைகள் நகரங்களில் வேலை செய்வதால்..
அங்கேயே நிரந்தரமாக தங்கி விடுகிறார்கள்
விடுமுறைக்கு  தான் வீட்டுக்கு வருகிறார்கள்

அவர்கள் வரும் நாளை பெற்றோர்கள் ஏக்கத்துடன்
தினம் தினம் எண்ணி பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.


Thursday, October 27, 2016

காத்திருக்கும் அன்பு

நாம் பெரும் அன்பு வைத்திருக்கும் நபர் நம்மை எதிரியாக பார்த்தால் என்ன செய்வது.....?
அவருக்கு மீண்டும் அன்பினால் தொந்தரவு கொடுக்காமல்
அமைதியாக ஒதுங்கி செல்வது தான் சரியாக இருக்கும்.
காலம் அவர்களுக்கு பதில் சொல்லும்.....பின்னாளில் இதுபோல் ஒருவர் கூட நம்மிடம் அன்பு செலுத்த யாரும் இல்லையே என்று அவர்கள் கருதினால்
அன்று நம்மை தேடி வரக்கூடும்.....

அப்பொழுது அதே அன்பு அவர்களுக்காக அன்பாய் காத்துகொண்டு இருக்கும்  என்ற நம்பிக்கையை நாம் அன்பாய் ஊட்ட வேண்டும் .


Krishna Kumar G


பாமரனின் பால் குடமும் அரசியலின் போலி பக்தியும்

திருவிழா காலங்களில் கோவில்களுக்கு பால் குடம் எடுக்க நாம் தான் காசு கொடுத்து ரசிது வாங்க வேண்டும் ,அதற்காக  புது குடம் வாங்க வேண்டும், 4-5 லிட்டர் பால் வாங்க வேண்டும் பூ மாலைகள் வாங்க வேண்டும் ..முடிந்தால் புது ஆடைகள் வாங்க வேண்டும் ..அப்படி இப்படி என்று சுமார் 2000 முதல் 5000 வரை செலவு வைத்து விடும்.
இதுவே அரசியல் கட்சி பால் குடம் என்றால்.இலவசமாக புது குடம் ,இலவசமாக புது ஆடை , கைல 500 முதல் 1000 ருபாய் துட்டு , இலவச சாமி தரிசனம்... அப்போ பாலு ?
பத்து குடம் தண்ணிக்கு அரை லிட்டர் பால் பாக்கெட்..போதும்.

மண் சோறு சாப்பிட்டால் அது தனி கணக்கு ..இதில் அடங்காது.

இது எதுக்கும் அடங்காது

Krishna Kumar G


ஒன்றுபட்டால் வெற்றி நிச்சயம்

ஆங்கிலேயர்களை எதிர்க்க பயந்திருந்தால்
சுதந்திர காற்றை சுவாசித்திருக்க முடியுமா...?

அன்றிருந்த முப்பது கோடி மக்களுக்காக
எவனோ செய்த தியாகங்களால் தான்
இன்று
நூற்று முப்பது கோடியாய் மலர்ந்து நிற்கின்றோம்.

நியாயம் என்றால் எதிர்ப்புகளை கண்டு அஞ்சாமல்
எதிர்த்து நின்று போராடுங்கள்.

இன் நாட்டில் மக்கள் சக்தியே பெரியது
மக்கள் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
வெற்றி நிச்சயம்


மாறியது வாட்ஸ் அப்பின் நோக்கம்

ஒரு வாரம் கழித்து வாட்ஸ் ஆப்ல என்ன செய்தி ஓடுதுன்னு பார்க்கலாம்ன்னு போய் பார்த்தா..
சவூதி அரேபியாவில் மன்னர் மகன் தலையை வெட்டியா வீடியோ
வருண் காந்தியின் தேன் பொறி காவியம் .
இப்படி செய்தி ஓடிகிட்டு இருக்கு ...
இதுக்குதான் வாட்ஸ் அப் பக்கமே வருறது இல்ல ...
ஆரம்ப காலத்துல வாட்ஸ் அப்ல நல்ல குரூப்க்கள் இருந்தது ...
குரூப்பில் இருப்பவர் ஒருவருக்கு விபத்து நடந்த போது இரத்தம் கொடுத்தார்கள் ...ஐம்பதாயிரம் பணம் சேகரித்து மருத்துவ செலவுக்கு உதவி செய்தார்கள்..
இப்படி பல சேவைகள் செய்தார்கள்..
தற்போது அது அப்படியே தலை கீழாக இருக்கிறது
எதை எதற்கு பயன்படுத்த வேண்டும் என்று
புரியாமல் இருக்கிறார்கள்.

நாட்டின் தலையெழுத்தையே மாற்ற கூடிய சாதனத்தை
கைகளில் வைத்துகொண்டு

ஆபாச வீடியோக்கள்
சாதி வெறி ஆடியோக்களை பரிமாற்ற பயன்படுத்தியவர்கள் தான் அதிகம்

வர வர வாட்ஸ் அப் மக்களுக்கு தொல்லை தரும் சாதனமாக மாறி வருவதால்,
எனது கணிப்பு படி விரைவில் வாட்ஸ் அப் அழியும்


Wednesday, October 26, 2016

நம்மவர்களின் பழக்க வழக்கங்கள்

நம்மவர்களுக்கு ஒரு பழக்கம்
மேடையில் ஒருவர் மைக் பிடித்து பேசுகிறார் என்றால்
அவருக்கு பின்னல் நாற்பது பேர் நிற்ப்பார்கள்
கை தட்டி விசில் அடித்து நகைத்து கொண்டிருப்பார்கள் .
மேடைக்கு முன்னால் நாலு பேர் மட்டுமே அமர்ந்திருப்பார்கள் ..
--------------------------------------
ஒரு முக்கியப் புள்ளி நடந்து வருகிறார் என்றால்
அவருக்கு வழி விடாமல் சூழ்ந்து கொள்வார்கள் .
கைக் கொடுப்பார்கள் கட்டிப்பிடிப்பார்கள் செல்பி எடுப்பார்கள்..
அதை தடுத்தால் செய்தியாக்கி விடுவார்கள்.
---------------------------------------
தன்னை விட பெரிய ஆள் என்றால் கொஞ்சம் கூட கூச்சப்படாமல் காலில் விழுந்து விடுவார்கள் .
---------------------------------------
பேருந்தில் இருக்கைக்கு அடித்து கொள்வதைவிட
இரு இருக்கைக்கு நடுவே இருக்கும் கைபிடி மேல் யார் கையை வைப்பது என்பதில் முட்டி கொள்வார்கள் .
----------------------------------------
எல்லாத்துக்கும் அவசர படுவார்கள்
அவசரத்துக்கு போக கழிவறைகள் இல்லை என்பதை குறித்து கண்டுகொள்ள மாட்டார்கள்.
---------------------------------------
இப்படி
இன்னும் நிறையவே இருக்கு
என்னை போல் உள்ள நம்மவர்களை பற்றி சொல்ல ....

Krishna Kumar G


சூழல் கவிதை : அப்போலோவும் கோபாலபுரமும்

ஒருபுறம் அப்போலோவும்
மறுபுறம் கோபாலபுரமும்
ஒவ்வாமை
செய்திகள்
-------------------------------------------------------------------
அப்போலோவும்
கோபாலபுரமும்
நலம்பெற வேண்டிக்கொள்வோம்
மேடை காலி என்றாலும்
அதை நிரப்புவதற்கு யாருமில்லை
முரசு இருக்கிறது
அதை தட்டி ஒலி எழுப்ப யாருமில்லை
கார்டன் இருக்கிறது
அங்கு பூக்கும் பூக்களை பறிக்க யாருமில்லை
இடையே இடை தேர்தல் வேறு
இரண்டுக்கும் இடையே போட்டி வேறு
யார் வெல்வது
யார் ஆள்வது
மூன்றாவது ஆணி
ஒதுங்கி இருந்தாலும்
356
ஒதுங்கி இருக்காது போலும்
மேலிருந்தும்
மத்தியிலிருந்தும்
துரத்துது சனி

Krishna Kumar G


Tuesday, October 25, 2016

சமுக வலைதளத்தில் தான் மக்களின் நாடி துடிப்பு பிடிக்கப்படுகிறது

தற்போது மக்களின் நாடி துடிப்பை ஊடகமும் அரசியலும் வர்த்தக நிருவனங்களும் சமுக வலைதளங்களில் தான் பிடித்து பார்க்கிறார்கள் ...
இதில் அவர்களுக்கு ஆதாயமும் இருக்கிறது
அதே சமையம் இவைகளை தவிர்த்து வாழ்பவர்களின் நிலையையும் எண்ண ஓட்டத்தையும் காண தவறி விடுகிறார்கள் .

இதை விளக்கி சொல்லலாம் முடியாது டைப்பிங் செஞ்சி கை வலிக்குது ..
புரிஞ்சா சரி

Continue......

Krishna Kumar GIgnorance is Ignorant

Ignorance is bliss என்பார்கள்
அது தவறு என்று சொல்லவில்லை
நீங்கள் ignore செய்து விலகி இருக்கும் விசியங்கள்
சில நேரங்களில்
உங்களை தேடி வந்து பாதிக்கும்
அப்போது தெரியும்
Ignorance is Ignorant என்று

Krishna Kumar G


பள்ளிகளில் பாலியல் கல்வி முறை

பள்ளிகளில் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பாடங்களும் கிடைத்து விட்டால் முழு திருப்திதான் .
மாறாக நமது பள்ளி பாட திட்ட முறைகளில் நிஜ வாழ்வியலுக்கு உகந்ததை நாம் கற்பதில்லை .
உதரணத்துக்கு சமையல் செய்வது,,துணி துவைப்பது கூட பள்ளிகளில் கற்று தர வேண்டும்..
கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கும்...
இதில் உள்ளார்ந்த அர்த்தங்கள் இருக்கிறது...
இதை எல்லாம் பெற்றோர்கள் தான் சொல்லித்தர வேண்டும் என்றில்லை..
ஆசிரியர்களே கற்று தர வேண்டும்.
இன்றைய அவசர உலகில் பெற்றோர்களுக்கு இதற்க்கெல்லாம் நேரம் இருப்பதில்லை... இருந்தாலும் பிள்ளைகளை வேலை வாங்க விரும்புவது இல்லை..
தனியாக வேலைக்கு ஆள் இருப்பதால் பிள்ளைகள் ஏன் இதை செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்புவார்கள்...
வேலை வாங்குவது வேறு ஒரு விசியத்தை கற்று தருவது என்பது வேறு என்று பெற்றோர்கள் அவ்வளவு எளிதில் புரிந்துகொள்ள மாட்டார்கள்.

ஆகவே இதனை பள்ளிகளில் ஆசிரியர் செய்யும் பொது மாணவர்களுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது..

ஒரு மாணவன் ஒரு விசியத்தை ஆசிரியரிடம் இருந்துதான் முறையாக கற்றுக்கொள்ள முடியும்..
உதரணத்துக்கு
Sex Education எனப்படும் பாலியல் கல்வி முறையை இங்கு குறிப்பிட விரும்புகிறேன் .
செக்ஸ் என்பது வாழ்வியலோடு தொடர்புடையது.
SEX இது ஒரு ஆபாசமான வார்த்தை என்று இந்திய அரசு பள்ளி பாட திட்டத்தில் தடை விதிக்க முயல்கிறது.
இது பெரும் பின் விளைவுகளை ஏற்ப்படுத்தும்
எது மதுரியான விளைவுகள் என்றால்..
ஒரு மாணவன் இதனை பள்ளிகளில் கற்க தவறும்போது , தனது பதின் பருவத்தில் சில அறியாமை சிக்கல்களோடு போராட நேரிடும்.
அதை அறிந்துகொள்ள தவறான பழக்கங்களுக்கு ஆட்பட வாய்ப்பு உண்டு.
ஒரு வேலை பெற்றோர்கள் அந்த மாணவருக்கு இது குறித்து விழிப்புணர்வு செலுத்தி இருந்தால் நல்லது விட்டுவிடலாம்...
ஆனால் அதுபோல் இது குறித்து எளிதில் பேச கூடிய சூழலில் பெரும்பாலான பெற்றோர்கள் இல்லை ..
ஆகவே இதனை குறித்து பெரும்பாலும் மாணவர்கள் பள்ளிகளில் தான் கற்க நேரிடும்.
இல்லை என்றால் நேரடியாக களத்தில் இறங்கி அது  குறித்து  தேட  நேரிடும்,
தேடுகையில் பெரும்பாலும்  தவறான  பழக்கங்களுக்கு ஆட்பட்டு  விடுவார்கள்.

இணையத்தில்  தேடினால்  ஆபாச  செக்ஸ்  வீடியோக்களை (படங்கள்)  பார்க்க  நேரிடும் , ஒருவேளை அந்த  ஆபாச  செக்ஸ்  வீடியோக்களில் முறை  இல்லாத  பாலியல்  காட்சிகளை  பார்க்கும் பொது  அது  தான் சரி  என்று  எண்ணத் தோன்றும் .

இது போல்  ஆபாச  செக்ஸ் வீடியோக்களை பார்த்தாலும்  அதில்  எது  சரி எது  தவறு  என்று  புரிந்துகொள்ளும்  பக்குவம் மாணவரிடம்  இருக்காது, ஒருவேளை  பாலியல்  கல்வி  கற்று  இருந்தால்  இது  குறித்த  ஒரு  தெளிவு  இருக்கும். அந்த  தெளிவு மாணவரை  எந்த  தவறான  செயல்களிலும்  ஆட்படாமல்  பாதுகாக்கும்

செக்ஸ் கல்வி  பள்ளிகளில்  மிகவும்  அதி  முக்கியமானது .

அதை தவறுகையில் பல  பின் விளைவுகளை  சமுகத்தில்  சந்திக்க  நேரிடும்

உதரணத்துக்கு  (Aids) எயிட்ஸ் நோயின்  தாக்கம் அதிக அளவில் மக்களிடம்  பெருக   வாய்ப்பு  இருக்கிறது


பள்ளிகளில்  பாலியல்  கல்வியின் முக்கியம்  குறித்து  புரிந்து  செயல்  படுகிற  அரசு  இதுபோல்  தவறுகளில்  ஈடுபடாது .

அரசின்  கொள்கைகள்  எதுவாக  வேண்டுமென்றாலும்  இருக்கட்டும் அதை  பற்றி  கவலை  இல்லை

அவர்கள்  காமம்  தவறு  என்று  இருந்தால்
அவர்களுக்கு  சிறு  செய்தி  சொல்ல  விரும்புகிறேன்
அவர்கள்  நோக்கம்  புரிந்து  இதனை  சொல்கிறேன்

மதம்  தளைத்தோங்கிய காலங்களில் கோவில்களில் தான்  மாணவர்கள்  கல்வி  கற்றார்கள் , அந்த  கோவில்களில் ஆபாசமான பாலியல்  சிற்ப்பங்கள்  நிறைந்து  இருக்கும், அந்த  சிற்ப்பங்கள்  ஆபாசம்  என்றால்  அதனை  கோவில்களில்  அதுவும்  மாணவர்கள்  கல்வி கற்கும் இடங்களில்  அமைத்து  இருக்க  மாட்டார்கள்..

அது  ஒரு  காரணத்துக்காகவே  தான்  பாலியல்  சிற்ப்பத்தை  கோவில்களில்  வடித்து  இருக்கிறார்கள்..

சங்க  காலங்களில்  பாலியல்  கல்வி  இலக்கியங்களில்  இருந்தே  தொடங்குகிறது . இலக்கியங்களை  கடந்து பின்பு  அது சிர்ப்பங்களில் வடிவம் அடைந்தது,

அது  அன்றைய  மாணவர்களுக்கு  பாலியல்  பாட  நூலாக  இருந்தது ..

தற்போதைய  கல்வி பாட  திட்டத்தின்  படி  அது  பள்ளிகளில் கற்று  தரப்படுகிறது..

மாறாக  அரசு  அறியாமையினால் அதனை  தடை  செய்வது  தவறு .கீழ்லடியில் தமிழகம் மறைக்கப்பட்டது வரலாறு

கீல்ழடியை யார் அழிக்கப் பார்க்கிறார்கள் ..
யார் அவர்கள் என்பது கூட நமக்கு தெரியவில்லை....
நான் தான் தமிழன்
நான் தான் தமிழன் என்று மூச்சுக்கு முந்நூறு தடவை மார்தட்டிய சாதிய அமைப்புகள்
தமிழரின் அடையாளமான சுவடை பாதுகாக்க முன்வரவில்லை.
இது எல்லாம் வியப்பு...
ஒருவேளை இந்த ஆராய்ச்சி இன்னும் ஒரு படி முன்னோக்கி சென்றிருந்தால்
தமிழன் சாதிகள் அற்றவன் என்று முடிவு வெளி வந்திருக்குமோ....?
(யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று இருந்தவனாயிட்றே)
உலகில் வேற் எங்கும் இதுபோல் காண இயலாது .
ஒரு இனத்தின் வரலாறு மீண்டும் கீழ்லடியில் புதைக்கப்பட்டுவிட்டது

வரலாற்று செய்திகள் சொல்லும் தமிழரின் கிழடியை மூடிவிட்டு, ரிக்வேதத்தில் சொல்லப்பட்ட காணாத சரஸ்வதி நதியை சிறப்பு நீதி ஒதுக்கி தேடி கண்டுப்டித்தது காவி அரசாங்கம் .
இன்னும் சஞ்சீவி மலையை தேடுகிறார்கள்
அவர்கள் Priority எப்போதும் பிரோஜனம் இல்லாதது .

பழைய  பதிவுhttps://goo.gl/aiiAv2

Krishna Kumar G


Friday, October 21, 2016

இராஜகுருக்களும் மக்களாட்சியும்

தற்ப்போதுள்ள மக்களாட்சியில் இராஜகுருக்கள் நிறைந்து இருக்கிறார்கள்.
அரசன் இருந்தாலும் இல்லாவிட்டாலும்
ஆட்சி அதிகாரம் அவர்கள் கைகளில்தான்
இராஜகுருக்களை தவிர்த்து இதுவரை இம்மண்ணில் எவரும் அரியணை ஏறி ஆட்சி செய்ததில்லை
(இராஜகுருக்களை புறம் தள்ளிவிட்டு நேரடியாக மக்களிடம் ஆலோசனை கேட்டு அதன்படி தலைவன் சுயமாய் ஒரு முடிவு செய்து செயல்படுத்தும் ஆட்சியே மக்களாட்சி)
@krishna kumar GMonday, October 17, 2016

All Airport Wi-Fi passwords

All Airport Wi-Fi passwords
by
Anil polat
blogger and computer security engineer who’s been traveling around the world
and providing Airports Wi-Fi passwords in this map
உணவு மதம்

உணவு என்பது நாவோடும் உடலோடும் தொடர்புடையது
உணவை உண்டபின் அது ஜிரனிக்கப்பட்டு அதில் உள்ள சத்துக்கள் பிரித்தெடுக்கப்பட்டு உடலை கடந்து வெளியேற்றப்படுகிறது

உணவுக்கும் மனதிற்கும் நேரடி தொடர்பு கிடையாது.
ஆனால் நாவு உணவின் சுவையை பொறுத்து நம் மனதை அதன் பக்கம் நாடி செய்ய  செய்யும். அதேபோல் வெறுக்கவும் செய்ய செய்யும்.

இவை தானே தவிர உணவுக்கும் மதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை .
அவர் அவர் வாழ்ந்த ஊர்களில் கிடைக்கும் உணவுகளை சுவைத்து வந்தனர்
அது காலப்போக்கில் அவர் அவர் பின்பற்றிய மதங்கள் மூலம் பிற இடங்களுக்கு எடுத்து சென்றனர் , அவ்வளவே தவிர மாதங்களுக்கும் நாம் உண்ணும் உணவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

உணவு உடலோடு தொடர்பு யுடையது மட்டுமே.
உணவே மதம்
உணவு மதம்

#Krishna Kumar G


கால மாற்றம் நம்மை மாற்றும்

இன்றைய நிலை
அன்றைய காலச்சாரமில்லை
அதுபோல்
அன்றைய நிலை
இன்றைய கலாச்சாரமில்லை
கலாசாரம் என்பது கால மாற்றத்துக்கு உட்பட்டது

இது கால ஓட்டத்தில் மாறிக்கொண்டே இருக்கும்
மாறுதலுக்கேற்ப்ப நாமும் ஓடிக்கொண்டே தான் இருக்க வேண்டும்

இல்லை  நான் பழைய கலாச்சாரத்தை சேர்ந்தவன் என்று
தற்போதைய சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தங்களை மாற்றிக்கொள்ள முடியாதவர்கள்
இன்றைய கலாச்சாரத்தால் சற்று பின்னுக்கு தள்ளப்படுவார்கள்.

ஆங்கிலத்தில் Culture என்று ஒரே சொல்லாக  இருந்தாலும் தமிழில்
கலாச்சாரம், பண்பாடு என இரு சொல்லாக இருக்கிறது.

கலாச்சாரம் என்பது வேறு பண்பாடு என்பது வேறு.

நீங்கள் உடுத்தும் உடை,அணிகலன்கள்,பாடும் பாடல்,ஆடும் நடனம்,கலை   கலாச்சாரத்தை குறிக்கிறது,

நீங்கள் மற்றவரிடம் பழகும் விதம் ,தொன்றுதொட்டு செய்து வரும் நன்மைகள்,தனி மனித ஒழுக்கம் பண்பாட்டைக் குறிக்கிறது

காலச்சரத்துக்கும் பண்பாட்டுக்கும் ஒரு சிறு இடைவெளி இருந்தாலும் இது ஒன்றோடு ஒன்று பிணைந்தே பயணிக்கிறது . இது ஒரு ஒட்டுமொத்த சமுக அமைப்பின் பிரதிபலிப்பாகவே விளங்குகிறது.

to be continued ...........

#Krishna Kumar Gஎடுப்புச்சோறு Eduppusoru

என் தந்தை 1969 ஆம் ஆண்டு  முதல் 1981 வரை சென்னையில் வேலை செய்து  வந்தார் ,தற்போது அவர் இவ்வுலகில் இல்லை என்றாலும். அவர் எனக்கு கூறிய சில  தகவல்களின் அடிப்படையில் இதை எழுதுகிறேன்.

சென்னை மரினா கடற்கரை : 70களில் தினமும் மதிய வேளையில் ஏழை மக்கள் மரினா கடற்கரையில் எடுப்புச்சோறுக்காக  காத்திருப்பார்களாம் 
எடுப்புச்சோறு  என்றால் என்ன ? : அந்த காலத்தில் அலுவலங்களில் வேலை செய்பவர்கள் மதிய உணவை வீட்டில் இருந்து  தான்  எடுத்து வருவார்கள்,
இது காலையே செய்யப்பட்ட உணவு எனபதால் மதிய வேளையில் உணவு ஆறி போய் இருக்கும்,ஆகவே சிலர் சுட சுட உணவு வேண்டி மதிய உணவை நேரடியாக வீட்டில் இருந்தே மதிய வேளையில் எடுத்து வர  வைப்பார்கள்  .
அதை எடுத்து வருவதற்கென்றே தனியாக  ஒரு  நபரை வைத்திருப்பார்கள்,
அந்த  நபர் அதே அலுவலகத்தில் உள்ள பலருக்கும் மதிய  உணவை அவர் அவர் வீடுகளில் இருந்து எடுத்துவருவார் ,பிற அலுவலங்களில் வேலை செய்பர்களுக்கும் எடுத்துவருவார், அந்த நபருக்கு இதற்க்கென்ற தனியாக கூலி கொடுத்து  விடுவார்கள்.


வீடுகளில் உள்ள பெண்கள் காலை 11 மணிக்கெல்லாம் உணவை தயார் செய்து அதை டப்பாகளில் அடைத்து ஒரு கூடை பையில் போட்டு  வைத்து விடுவார்கள், வீடுகளில் தயார் நிலையில் இருக்கும் அந்த உணவு டப்பாவை கூடையுடன் எடுத்துகொண்டு , சைக்கிளிலோ அல்லது  நடந்தோ அதை சுமந்து வந்து மதியம் 12 முதல் 12:30 மணிக்கெல்லாம் அலுவலகத்தில் வேலை செய்யும்  உரிய நபரிடம் சேர்த்துவிடுவார். இதுபோல் அனைத்து நபர்களிடமும் அவர்  அவர் உணவு டப்பாக்களை சேர்த்துவிடுவார் , 
அவர்கள் உண்டு முடித்தபின் அந்த டப்பாக்களை மீண்டும் வந்து 
2 மணிக்கெல்லாம் வாங்கிக்கொள்வார் , வாங்கியவர் அதை அவர்  அவர் வீடுகளில் மீண்டும் கொண்டு பொய் சேர்த்துவிடுவார் . இந்த இடைப்பட்ட காலத்தில் டப்பாக்களில் மீந்த உணவை அவர் மரினாவில் காத்து நிற்கும் ஏழைகளிடம் எடுப்புச்சோறு என  மிகவும் குறைந்த சில்லறை விலையில் விற்றுவிடுவார்.
அந்த எடுப்புச்சோறு வாங்குவதற்க்கென்றே நிறைய ஏழை மக்கள் காத்து   இருப்பார்கள். பலரது வீடுகளில் இருந்து வரும் மீந்த  உணவை ஒரு கலவையாக செய்து உண்பார்கள் .

அன்று சென்னை மரினா கடற்கரையில் ஏழைகளின் பசியாற்றிய  எடுப்புச்சோறு இப்போது  வழக்கத்தில் இல்லை என்றாலும்
இன்று இது உருமாறி மும்பையில் உள்ள டப்பாவாலாக்கள் அங்குள்ள ஏழைகளுக்கு இதே போல்  டப்பாக்களில் மீந்த மதியம்  உணவை இலவசமாக வழங்கி  வருகிறார்கள்.
https://www.facebook.com/aljazeera/videos/10154760918323690/

எடுப்புச்சோறு ஏழைகளின் பசியாற்றிய உணவு 


தற்போது சென்னையில் Food Bank என்ற ஒரு அமைப்பை  சிநேக மோகன்தாஸ் என்கிற ஒரு இளம் பெண் நடத்தி  வருகிறார் ,இதில் அவர் பலரது வீடுகளில் தினமும் மீந்த  உணவுகளை வாங்கி  வந்து வீதிகளில் உணவின்றி இருப்போருக்கு வழங்கி வருகிறார்.
( சென்னை மற்றும் பிற நகரங்களில் உள்ளவர்கள் அவரிடம் மீந்த உணவை ஒப்படைக்கலாம்,அவர் அதை FOOD BAnk மூலம் ஏழைகளுக்கு விநியோகம் செய்து விடுவார் )
வாழ்த்துவோம், வளரட்டும் அவர்களது தொண்டு .
For other enquires or doubts pls cal 044-24331522, foodbank4chennai@gamil.com
https://www.facebook.com/sneha.mohandoss

இதுபோல் இன்னும் பலர் சேவை செய்து வருகிறார்கள்
அவர்களுக்கு என் நன்றிகள்

உலகில் சுமார் 100 கோடி மக்கள் பசியால் அவதிப்படுவதாகக் கூறுகிறது ஐ.நா. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு. அதே வேளையில் உலகின் மொத்த தானிய உற்பத்தியில் 30% தானியங்கள் யாருக்கும் பயனின்றி நுகர்வோரால் வீணடிக்கப்படுவதாக தெரிவிக்கிறது புள்ளி விவரங்கள்.

( தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்
 பாரதியார் )

#Krishna Kumar G


Sunday, October 16, 2016

ஆயுதங்கள் ஆபத்தே.

அளவுக்கு அதிகமாக ஆயுதங்களை வாங்கி குவிப்பது
பிற்க்காலத்தில் அது அந்த நாட்டுக்கே பெரும்  ஆபத்தாக கூட அமையும்
,
ஆயுதங்கள் ஆபத்தான காலங்களில் உதவும் என்றாலும்.
அதிகம் செலவு செய்து அவ்வகை ஆயுதங்களை வாங்கி அந்த நாட்டின் பொருளாதாரத்தை சீர் அழித்து விட்டு நாட்டை ஆபத்தான சூழ்நிலைக்கு தள்ளுவதும் ஒரு வகை கேடு தான்.
மற்றொன்று அந்த ஆயுதங்களை உள்நாட்டு போராளிகளுக்கு எதிராக திசை திருப்பி .உள்நாட்டு போர் செய்வது,
அதே காரணத்தை காட்டி அப்பாவி மக்களை இன மத மொழி பகைமை ரீதியாக அதிகார வர்க்கம் உள்நாட்டில் போர் செய்யும். இன அழிப்பை அரங்கேற்றும்.
ஆயுதங்கள் எந்நாளும்  ஆபத்தே.

இந்த உலகத்தில் பல போர்களுக்கு
எண்ணையும்
வைரமும்
தங்கமும்
வெள்ளியும்
பிரதான
காரணக்காரணிகள்

என்பது  தான்  மறுக்கப்பட  முடியாத  உண்மை.


எனக்கு நூறு ஆயுசு

கிருஷ்ணா
உனக்கு  நூறு  ஆயுசு என்று
நான் வந்ததும்

உன்னை  பற்றிதான்  பேசி கொண்டிருந்தோம்
நீ சரியாக  வந்து  விட்டாய்  என்பார்கள்

மாறாக  அவர்கள்  என்னைப்பற்றி என்ன பேசி  இருப்பார்கள்
என்ற  யோசனை  வரும்  முன்பே  தெரிந்துவிடும்
ஒருவர் இல்லாத  பொது அவரை பற்றி  கண்டிப்பாக
நல்ல விதமாக  அந்த  நாலு  பேர்  பேசி  இருக்க  மாட்டார்கள்

இவன்  எல்லாம்  ஏன் தான்  இன்னும்  உயிரோடு  இருக்கானோ  ?.
என்று  மிகவும்  இழிவாக  பேசி  இருப்பார்கள்

நாம்  வந்ததும்  வாய்யை  மூடிக்கொண்டு
வியப்புடன்  பதட்டமாய்
வேறு  என்ன சொல்வது  என்று  தெரியாமல்

கிருஷ்ணா
இப்பதான்  உன்னைப்பற்றி  பேசிக்கொண்டிருந்தோம்
நீ  சரியை  வந்துவிட்டாய்
உனக்கு  நூறு  ஆயுசு
என்று
பக்குவமாய்
உள்ளுணர்வில்
உண்மை இல்லாமல்
அப்பட்டமாக
பொய் பேசுவார்கள்

போக்கத்தவர்கள்

#krishna Kumar G


கருத்து முடி

மற்ற நாட்களில் கூட்டமிருக்கும்
நேற்று புரட்டாசி கடைசி சனி என்பதால் யாருமிருக்க மாட்டார்கள்
என்று சலூன் கடைக்கு முடி வெட்ட சென்றேன்.
எப்போதும் கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் பேசும் சலூன் கடைக்காரர் தற்போதைய சூழலில்
என்னை பார்த்ததும் ஆரம்பத்திலே அரசியலை பேச தொடங்கிவிட்டார்.
ஏதும் பேசக்கூடாது என்று
நான் எவ்வளோவோ என்னை கட்டுபடுத்தி பார்த்தேன்
சலூன் கடைக்காரர் என்னிடம் பல தகவல்களை தொடர்ந்து கேட்டு கொண்டே இருந்தார்
நான் என்னையறியாமல் அனைத்தையும் சொல்லிவிட்டேன்.
இறுதியில் அவர் முழு நிறைவடைந்தார் என்று அவரது அமைதி உணர்த்தியது.
ஆனால் பேச்சுவாக்கில் கவனசிதரில்
இறுதியில் தான் கவனித்தேன் எனக்கு அவர் Machine போட்டு மிலிடரி கட்டிங் அடித்து விட்டார் என்று.


Hey What Happened ? Are you all right ?

Hey What Happened ? Are you all right ?
இதுபோல் நம்மை கேட்க யாருமில்லையே
என்று நாம் ஏங்கும் வேளையில்.
{ Hey what hapnd ? r u alright ? (Y) }
இப்படி கேட்போரை பாரபட்சமின்றி வெறுக்கும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அந்த மனம் எவ்வளவு கொடியதாய் இருக்கும்.
இல்லை ஒருவேளை அதுதான் நல்ல மனமாக இருக்குமோ.
இப்படி கேட்போரின் உள்நோக்கத்தை புரிந்து புறம் தள்ளி இருக்கக்கூடுமோ.
இதில் எது சரியோ என்பது இன்னும் தெரியவில்லை
அனால் அப்படி கேட்ட மனம் பல வழிகளில் பல வலிகளை கடந்து வந்து இருக்கும்
எதோ ஒரு ஆறுதல் தேடி வந்து , வந்த இடத்தில் தன்னிடம் மீதம் இருந்த ஆறுதலை தாராளாமாய் அள்ளி கொடுத்திருக்கும்.
அதை பெற அந்த மனம் மறுக்கவே..இந்த மனம் ஒடிந்து நொடிந்து போய் இருக்கும்.
ஆறுதல் தேடி அலையும் உலகில்
ஆறுதலை வெறுக்கும் மனங்களும்
இருக்கத்தான் செய்கிறது.
Krishna Kumar G


Friday, October 14, 2016

1968 ரகசிய போலிஸ் 115 படத்தில் வரும் வசனம்

சினிமா பாக்காத லைப்பும்
சிங்காரிச்சிக்க தெரிஞ்சிக்காத wifeபும்
இருந்து என்ன பிரோஜனம்
RP115 - 1968

லவ்வர்ற நடிக்கிறது தாங்க கஷ்டம்
அதைவிட உண்மையாவே
லாவ் பண்றது ரம்போ சுலபம்
What?
அப்படின்னு அனுபவ பட்டவங்க சொல்லுறாங்க
ஆமா நீங்க யாரையும் காதலிச்சதே இல்லையா...?
ச்ச ச்ச்ச ச்ச கேட்ட வரத்தை எல்லாம் பேசாதிங்க.
அட்லீஸ்ட் காதல்ன்னா என்னனாவது உங்களுக்கு தெரியுமா..?
ம்ம் ஹு
எங்க
காதல்னா என்னாங்க...?
காதல்னா
ஆண்னுடைய இதையத்தை எடுத்து பெண்கிட்ட கொடுத்தடனும்
பெண்ணுடைய இதையத்தை எடுத்து ஆண்கிட்ட கொடுத்தடனும்
எப்பப்பா அய்யய்யோ....!
ஒரு கோடி முல்லை பூ விளையாடும் கலை என்ன
வா என்பேன் வர வேண்டும் தா என்பேன் தர வேண்டும்

(பாடல்)
கண்ணே கனியே முத்தே மணியே
அருகே வா


Thursday, October 13, 2016

வதந்திக்கும் கருத்துக்கும் உள்ள தூரம்

வதந்திக்கும் கருத்துக்கும் உள்ள தூரம் வெகுதூரம்
எவ்வளவ்வு தூரம் ?
வதந்திக்கு தண்டனை சட்டத்தில் சிறையும்
கருத்துக்கு கருத்துரிமை சட்டத்தில் பாதுகாப்பும் 19(1) ஏ
தரப்படுகிறது
இப்பொழுது அவரவர் எவ்வளவு தூரத்தில் இருக்கிறோம் என்பதை அறிந்திருப்பீர்கள் .

அப்படியானால் அனுமானத்தின் அடிப்படியில்
சொல்லப்படும்  தகவல்களுக்கு ?

அனுமானம்  என்றால்  யூகம் என்றும் சொல்லலாம்

யூகத்தின் அடிப்படையில் சொல்லப்படும்  தகவல்கள்
நேரடியாக நம்பதன்மையற்றது என்பதால்
அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

Wednesday, October 12, 2016

பின் மாறிய முகம்

முன்பெல்லாம் அந்த முகத்தை புகைபடங்களில் பார்த்தால் மகிழ்ச்சியுடன் கூடிய ஆணவம் தெரியும்.
பிறகு சமிபகாலங்களில் வரும் அதே புகைப்படங்களை பார்க்கையில், அதில்
எதோ ஒரு இனம் புரியாத சோகமும் ஏக்கமும் அழுகையும் இருப்பது தெளிவாக தெரிகிறது..
எத்தனை இன்னல்களை அது கடந்து இருக்கும்
தனிமையில்

ஆடி அடங்கி இருக்கிறது....

பிறப்பில் வந்த குணமா
பிறகு வந்த குணமா
அல்லது
புகழ்ச்சியால் இரத்த முழுவது ஊறிய குணமா.


அழகை சுமந்து திரிந்து
ஆணவ
ஆசையால் ஆட்களை அடிமை செய்தது


அடிமையானவர்கள் இறுதிவரை அடிமுட்டாளாகவே மாறினார்.
ஆசை என்னும் ராஜ போதையில் பெற்ற தாய்யையே மறந்தனர்


ஒரு நூற்றாண்டில் ஒருவர் தான் இப்படி தோன்றுவார் ..


அது நம் காலத்தில் நம்மிடத்தில் தோன்றி மறைகிறது என்பது ஒரு வியப்பு.


( அந்த நாற்காலி போதை இன்னும் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறது .
அடுத்து வேறு யாரை கவுக்க போகிராதோ..)Tuesday, October 11, 2016

பெயர் சொல்லாமலே வரும் போன் கால்கள்

நேற்று மதியம் ஒரு போன் கால் : பெயர் சொல்லாமலே பேசிக்கிட்டு இருந்தான்...
எதோ வேலைக்கு இன்டர்வியூ செய்வதுபோல் என்னை பற்றி தகவல்களை கேட்டுகிட்டே இருந்தான்
நானும் எல்லாத்தையும் சொல்லிட்டேன்..
(அதுதான் ஏற்கனவே நெட்டில் இருக்கே)
கடைசியா நீங்க எங்க இருந்து கால் பண்றிங்கன்னு கேட்டேன்...
வெளிநாட்டுல இருந்து பேசுறேன்னு லோக்கல் Airtel நம்பர்ல இருந்து பேசிகிட்டே பொய் சொல்லுறான்..
அப்பறம் நான் அவன இண்டர்வ்யூ செய்ய ஆரம்பிச்சேன்.
இதுமாதுரி தினமும் ஒன்னு இரண்டு போன் கால் வருது..
நானும் ஜாலியா பேசிகிட்டே தான் இருக்கேன்..


சுத்தம் சுகாதாரம்

உலகத்திலே சக்தி வாய்ந்த ஆயுதம் துடைப்பம் (தொடப்பம்) : சுத்தம் செய்யும்

Monday, October 10, 2016

போலி போர் சூழல்

ஒரு நாட்டில் போர் சுழலை உருவாக்கி விட்டுவிட்டால் மக்களுக்கு வேறு எந்த சிந்தனையும் இருக்காது..
பயமும் பீதியும் அவர்களிடம் தொடர்ந்து கொண்டே இருக்கும்..
இங்கே அங்கே ஓடு என்றால் ஓடுவார்கள்.
சொல்வதை எல்லாம் செய்வார்கள்.
இன்னொரு வகையில் நாட்டின் வர்த்தகம் பாதிக்கும்..
ஏற்றுமதி இறக்குமதி தடை படும்.
கலை பண்பாட்டு அழிப்புகள் அரங்கேறும்.

அதுவே போலி போர் சூழல்லாக இருந்துவிட்டால்

(தொடரும்)


Sunday, October 9, 2016

Conversation in Seducing Mr.Perfect

Girl : I've been dumped 3 times
Man : Because you don't know the rules
rules of the love game
Girl : Love is not just like playing starcraft , you know .
Man : Yes it is
Man : Its actually a game that requires
even greater precision planing
A game of Power
Mannipulations of emotions to control the mind ..
That's the game
Oh, it is a game
Its a Game where the one who displays affection first ,
gives up total control and goes around like a dog on a collar.
In a relationships, you were the one to call first ,and
he was the one to hang up first, right ?
Girl : Right.
Man : And when you got together, you'd always run to him and
you always give him gifts on anniversaries , only you,right ?
Girl : Right!,How did you know that ?
Man : I know because these are the consequences of dating without any self respect,Miss .
That's how I know .
So take my advice and listen to it .
If you continue acting like this , being so ... pathetic,
you'll always be treated like a trash by men .
and you will grow old... all by yourself .
Girl : Apologize
Man : What would I be apologizing for ?
I've never apologized for anything in my life
Girl : gets anger .Screams .
Man : If you succeed I'll apologize on my knees .
Girl : A women who was just dumped needs a shouder to cry on , not a critic.

------------------------------------------------------------------------------------------------------
Man : Truth always seems to be bitter
Its not the fault of you
He just wasn't the right guy for you .
A friend who can say this .


Friday, October 7, 2016

வந்துட்டேன் வாடா

டேய்
தனியா அடையாறு பக்கம் வந்து பாருடா - வந்துட்டேன்
நீ இப்ப முடிஞ்சா திருவான்மியூர் பக்கம் வாடா- வந்துட்டேன்
இல்ல நீ பெசன்ட் நகர் பீச்க்கு வாடா- வந்துட்டேன்
அங்க வேணாம் அந்த உடைஞ்ச பாலத்துக்கு வாடா - வந்துட்டேன்
வந்துட்டியா - வந்துட்டேன்
முடிஞ்சா என்ன புடிடா பாப்போம் - டேய் இதுதான் என் வேலையா , பொழப்ப கெடுத்தவனே (xyz) .
கைல மாட்டிடாத சிரிச்சே சாகடிச்சிடுவேன் .
Thursday, October 6, 2016

கூகுள் பல தேடல்

கடலூரில் : மிக சாதரணமாக இருக்கும் ஹோட்டலில் ஒரு நாள் மூன்று வேலை சாப்பிட குறைந்தது 150 ருபாய் தேவை.
இதற்கும் குறைவாகவும் சாப்பிடலாம் ஆனால் உடல் உபாதைகள் வரும் .
மிக மிக குறைவாக 50 ரூபாய்க்கும் சாப்பிடலாம்.
(7 ரூபாய்க்கு ஒரு அம்பலேட் சேர்த்து )
(டீ,காப்பி - இதை கணக்கில் கொள்ளவில்லை )
கிருஷ்ணா தேவை இல்லாமா போஸ்ட் போடுறான்னு நினைக்கலாம் ஆனா இதுதான் தகவல்.... இந்த தகவல்கள் எல்லாம் அனுபவத்தில் தான் கிடைக்கும் , இங்கு அந்த அனுபவத்தை தவிர்த்து கிடைக்கிறது,
இதை தான் காலையில் ஒரு நண்பனிடம் பேசிகொண்டிருந்தேன்,
கூகுள்லில் எதை தேடினாலும் கிடைக்கிறது என்றான்..
நான் சொன்னேன் கூகுள் ஒன்றும் தெரியாதவன் .. அதில் இருக்கும் தகவல்கள் எல்லாம் அவனுக்கு சொந்தமில்லை,
என்னைப்போல் உலகில் எவனோ ஒருவன் இணையத்தில் தகவல்களை பதிவு செய்கிறான் , எவனோ ஒருவன் உலக வரைபடத்தில் வழி காட்டுகிறான்,இடங்களை குறிக்கிறான், இது ஒரு தன்னார்வ செயல் (Contributing act).
இதில் திரைமறைவில் வியாபராமும் இருக்கிறது அது நீண்ட கதை சொல்வதற்கு நேரம் போதாது .
இப்படி அனைவரது தகவல்களையும் ஒன்று சேர்த்து அந்த தகவல்கள் இருக்கும் இடத்தை நொடியில் தேடி காட்டுகிறான் கூகுள் அவ்வளவே .
கூகுள் ஒரு தளம் மட்டுமே
ஆனால் இப்போது கூகுள் விரிவடைந்து இருக்கிறது , அதை பற்றி உனக்கு இப்போது சொன்னால் புரியாது என்று முடித்தேன்.
உங்களுக்கு நான் சொல்வது புரிந்ததா...?
Krishna Kumar G


Wednesday, October 5, 2016

Disparate Indian House wifes who live in US

" Disparate Indian House wifes who live in US "
A sea of broken dreams
or
A Sky of Achievement

A century ago Indian wifes started to settle in US ,
In begining it seems to be mostly a no return back journey .

Unpaid maid

H4

H1 to H1 B

In India they pursued a engineering degree and in US they are just a house wife , Their dreams have been locked in an US average home  . They only try to acheive atlest US citizenship for their children and bring a better life for them .


Continue ........
(I gave the idea - rest is someone have to fill up it )


Sunday, October 2, 2016

ஆறு மாத காதலி

தன் கை மணிக்கட்டில் கட்டி இருந்த
கருப்பு பேண்டை கிழட்டி

விரிந்து கிடந்த தன்
தலை முடியை வாரி கோர்த்து இழுத்து
அதை அந்த பேண்டின் உள்ளே சொருகி
உச்சந்தலைக்கு கீழாக மத்தியில் நேர் நிறுத்தினாள் .

அதை வாயை திறந்து பார்த்து கொண்டிருந்த என்னை திரும்பி பார்த்து,
ஒற்றை புருவத்தை தூக்கினாள்
பிறகு வாயை மூடிகொண்டு அவளிடம் ஒன்றுமில்லை என்று தலை ஆட்டினேன் .

டேய் உனக்கு வண்டி ஓட்ட தெரியுமா என்றாள்
தெரியாது என்றேன்...

அப்படியா.... என்று ராகம் இழுத்தாள்,

சரி வா என் கூட என்றாள் .

பூங்காவில் இருந்து வெளியே வந்து , வண்டி பார்க்கிங்  செய்யும் ஏரியாவுக்கு வந்தோம்,

அவள் அங்கிருந்த அவள் ஸ்கூட்டி வண்டியை எடுத்தாள்,
நின்று கொண்டிருந்த என்னிடம்
வா டா ஏறிக்கோ என்றாள் ,

அவள் அமர்ந்த பிறகும் பின் இருக்கையில் போதுமான இடம்மிருந்தது , அவளுக்கு பின்னால் நான் அமர்ந்தேன்.

அவள் வண்டியை ஓட்டத் தொடங்கினாள் ,

....................... தொடரும்


அமெரிக்க தேர்தலில் கோமாளி

ஒரு கோமாளியை அமெரிக்க தேர்தலில் நிறுத்தி வேடிக்கை செய்கிறார்கள்...
இவர்கள் தற்போது பெண் வேட்பாளர் ஹிலாரியை ஆதரிக்கிறார்கள்
ஆனால் ஒபாமாவுக்கு போட்டியாக சாரா பாலின் நின்ற போது ... பெண்கள் ஜனாதிபதி தேர்தலில் நிற்க கூடாது என்று அந்த பெண்ணை தோற்க்கடித்தார்கள்...
ஒருவேளை மீண்டும் அப்படி நிகழ்ந்து விட கூடாது என்பதற்காகவே ... ஹிலாரிக்கு எதிராக ஒரு கோமாளியை களத்தில் வைத்தார்கள்..
ஹிலாரியை அனைத்து ஊடகங்களும் போற்றியது
அந்த டிரம்ப்பை கோமாளியாக்கியது
பிறகு வேறு வழி இன்றி மக்கள் மனம் மாறியது.
இன்னும் விரிவாக சொல்கிறேன் ....(தொடரும்)

Link : https://www.buzzfeed.com/andrewkaczynski/donald-trump-appeared-in-a-2000-playboy-softcore-porn?bffbuknews&utm_term=.mw14k1y6mN#.uiPk53ZLN1


காந்திக்கு இன்று பிறந்த நாள்

நேற்று காந்திக்கு தெரிந்தும்
இன்று காந்திக்கு தெரியாமலும்
மதுக்கடை ஷட்டருக்கு அடியில்
காந்தி நோட்டுக்கு
பிராந்தி கை மாற்றப்படுகிறது
காந்தி இன்று பிறந்தார்
குடிகாரன் ___________?
(அடுத்த வரியை நான் எழுத மாட்டேன்)
(பிறகு ஊரில் உள்ள அனைத்து நல்ல குடிகாரர்களும் என்மேல் கோவித்துக் கொள்வார்கள் )
(அவர்கள் சாபம் எனக்கெதற்கு அவர்களாலே இன்நாடு முனேற்றமடைகிறது )
Krishna Kumar G


Saturday, October 1, 2016

தினம் தினம்

ஆமாம் எவ்வளவு வலை பின்னலான வார்த்தைகள் அந்த கடிதத்தில்... (அழைப்பிதழில்)
அந்த கிரிக்கெட் போட்டி நடக்கும்
கிரிக்கெட் மைதானத்துக்கு சென்றேன்
அங்கே கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் விளையாடிகொண்டிருப்பதாக.
அந்த மைதானத்தின் உரிமையாளர் மைதானத்தின் மத்தியில் நின்று விளக்கி கொண்டிருந்தார்,
அவரது விளக்கம் உண்மையாகவே அங்கு கிரிக்கெட் போட்டி நடப்பது போன்றே இருந்தது .
அந்த போட்டி முடிந்தவுடன் அவர் நீங்கள் தான் விளையாட்டு வீரர்களுக்கு பரிசு தரவேண்டும் என்று கேட்டுகொண்டார்..
யாருமில்லாத மைதானத்தில் யாருக்கு நான் பரிசளிப்பேன் என்று எனக்கு கேட்க்க தயக்கமாக இருந்தது...
இதுதான் நீங்கள் தர வேண்டிய பரிசு என்று வெறும் காற்றில் கை அசைத்து கொண்டிருந்தார்.
நானும் அதை வாங்குவதை போல் வாங்கி இல்லாத விளையாட்டு வீரர்களுக்கு காற்றை பரிசாக வழங்கி கொண்டிருந்தேன்..
பிறகு அங்கு நடந்த விளையாட்டு போட்டி பற்றி சிறப்பு உரை ஒன்றை ஒரு மணி நேரம் வாசித்தேன்..
யாருமில்லாத அரங்கில் பலத்த கர ஒலி எழுந்தது..
பிறகு மைதானத்தின் உரிமையாளர்..
என்னை வாழ்த்தி பேசி வழி அனுப்பி வைத்தார்..
மைதனைத்தை விட்டு வெளியே வந்து காரில் ஏறும் முன்பு
காருக்கு அருகில் கல்வெட்டுடன் அவருக்கு நினைவு தூண் ஒன்று வைக்கப்பட்டிருந்த்தை கண்டேன்..
அவரும் மிக அமைதியானவர் என்று புரிந்து கொண்டேன்.
அந்த மைதானம், அங்கு நடந்த கிரிக்கெட் போட்டி, விளையாடிய வீரர்கள் , அந்த மைதானத்தின் உரிமையாளர், அரங்கில் கை தட்டியவர்கள் என்று அனைவரையும் நினைத்து கொண்டே காரில் வீடு வந்தேன்.
வீட்டில் நுழைந்ததும் வாசல் எதிரே
என் புகைப்படத்தில் யாரோ மாலை அணிவித்திருந்தார்கள் .
வீட்டில் கிடந்த செய்திதாளில் நான் 'கிரிக்கெட் போட்டிக்கு பரிசளிக்க சென்றவர் கார் விபத்தில் பலி' என்று நசுங்கிய என் காரின் புகைப்பட்டம் அதில் பதியப்பட்டு இருந்தது .
இந்த ஒரே செய்தியை தினமும் கிரிக்கெட் போட்டிக்கு சென்று பரிசளித்து விட்டு வீடு திரும்பிய பின் 33 ஆண்டுகளாக படித்து வருகிறேன்.கீல்ழடியில் தமிழகம்

தற்போது தமிழகத்தில் வாழும் தமிழர்கள் நல்லவர்களே இல்லை
ஒரு தமிழன் என்ற முறையில் இதை சொல்கிறேன்.
அரசு முன்வராதபோது
ஒரு Crowd funding செய்து மதுரை கீல்ழடியில் (சிவகங்கை) தொல்பொருள் ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்தவற்றை பாதுகாக்க ஒரு கூடம் அமைத்து இருக்கலாம்...
எனக்கு இந்த யோசனை இன்று காலைதான் வந்தது...
இணையத்தில் உள்ள தமிழர்கள் நினைத்தால் இதை செய்ய முடியும்...
இதை பொது மக்கள் தொடங்குவதைவிட தொல்பொருள் துறையை சார்ந்தவரே இதை செய்ய வேண்டும்...
அப்போதுதான் வருகிற நிதியை சரிவர நிர்வகிக்க முடியும்..
இதை விரைந்து செய்யுமாறு தகுதியானவர்களை கேட்டுகொள்கிறேன்..

தொடர்புடைய  பதிவு  : https://goo.gl/BGUBY8


தமிழச்சியும் தமிழக அரசும்

"தமிழச்சியும் தமிழக அரசும் "
இந்த தலைப்பின் கீழ் ஒரு கட்டுரை வரைக
(10 மதிப்பெண்கள்)
உமா என்கிற தமிழச்சி , தனி ஒருவராய் , அயல் தேசத்திலிருந்து துயில் கலைத்து நம் துயில் கலைக்க அனுதினமும் போராடி வருகிறார்..
நாம் இன்னும் தூங்குவதை போல் நடித்து கொண்டிருக்கிறோம் .
( இந்த நான்கு வரிக்கு 1/2 மதிப்பெண்கள் கூட போட முடியாது)
Krishna Kumar G
தமிழச்சி
மிகவும் தைரியமானவர்
அவர் பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர்
ஏற்றுமதி துறையை சார்ந்தவர்
பிரஞ்ச் நாட்டு அரசியல்வாதி (சோசியலிஸ்ட்)
இந்தியாவில்
புதுவை மாநிலத்தை சேர்ந்தவர் (அரியாங்குப்பம்)
நன்கு கற்றவர்
இவர் பெரியாரிய கொள்கையை பின்பற்றுபவர்
பல ஆண்டுகளாக இணையத்தில் எழுதி வருகிறார்.
2010க்கு பிறகு இவர் பெஸ்பூக்கில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
இவரது கணக்கு பலமுறை முடக்கப்பட்டுள்ளது
பெரும்பாலும் மதம் மற்றும் சாதிய கருத்துக்களால் அதிகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
கேட்ட வார்த்தைகளில் யாரவது திட்டினால் பின்வாங்க மாட்டார் பதிலுக்கு செமையாக வசை வீசுவார்..
தற்போது சுவாத்தி கொலைக்கு பின்பு தொலைக்காட்சி செய்திகளில் வருமளவுக்கு பிரபலம் ஆனார்...
ஆனால் ____________________
(கோடிட்ட இடங்களை நிரப்புக) (5 மதிப்பெண்கள்)
தமிழச்சியை கைது செய்ய இயலுமா ?
(15 மதிப்பெண்கள்)
-----------------------------------------------------
(எத்தினை பேரு என் விடைத்தாளை பாத்து காப்பி அடிக்க போறாங்களோ)
தொலைகாட்சிகளில் அவர் செய்தி வந்த பிறகு
நண்பர்கள் அடிக்கடி யார் இந்த தமிழச்சி என்று என்னிடம் கேட்பார்கள் ... அவர்களுக்கு பதில் சொல்லிமாளாது, (என்னை தமிழ் கூகிள்லாக நினைத்து)
அவர்களுக்கு இந்த பதிவு உபயோகமாக இருக்கும்
என்று கருதுகிறேன்
(எனக்கு இவரது Attitude மிகவும் பிடிக்கும் .)
பொண்ணுனா சும்மா இது மாதுரி இருக்கணும் என்று அடிக்கடி நினைத்ததுண்டு .

Facebook : https://www.facebook.com/tamizachi.Author


இலவச ஆபாச ஜியோ

இலவச ஜியோ (Jio sim) வாங்கியவர்கள் இலவச இன்டர்நெட்டில் இரண்டு மாதமாகியும் இன்னும் Porn சைட்டில் இருந்து வெளியே வரவே இல்லை,
64 கலைகளையும் தாண்டி 88 வது கலைகள் வரை சென்றுவிட்டதாக அறியப்படுகிறேன்.
எப்போது போன் செய்தாலும் டவுன்லோட் ஓடிகொண்டிருக்கிறது என்று தான் சொல்கிறார்கள்...
எவ்வளோதான் பார்ப்பிர்கள் சலிக்கவில்லையா...?
கொஞ்சம் வெளியே வாங்க பாஸ்..
Krishna Kumar G


புதுவையிலும் காந்தி பிறந்தார் மது விலக்கு

இன்று நானும் என் நண்பனும் பாண்டிச்சேரியில் ஒரு மருத்துவமனைக்கு சென்று ஒருவரை பார்த்துவிட்டு பேருந்தில் வீடு திரும்பி கொண்டிருந்தோம்...
புதுவை எல்லையில் உள்ள கன்னிக்கோவிலில் சுமார் இருபது குடிக்காரர்கள் ஏறினார்கள்.
எப்போதும் மூன்று நான்கு நபர்கள் தான் இங்கு ஏறுவார்கள், வழக்கத்துக்கு மாறாக பெரும் கூட்டம் இங்கு நின்று கொண்டிருந்தது.
பேருந்தில் ஏறியவர்கள் சாராய வாடையை பேருந்தில் பரப்பி விட்டார்கள்...
பேருந்தில் உள்ள பெண்கள் மூக்கை பொத்திக்கொண்டார்கள்...
என் அருகில் இருந்தவருடன் என்ன நாளைக்கு காந்தி ஜெயந்தியா என்றேன்
ஆமம் நாளை கடை கிடையாது அதன் இன்னிக்கே சேர்த்து குடிச்சிட்டேன் என்றார்,
இன்னொரு கிழவர் பேருந்து கூட்ட நெரிசலில் இடுப்பு புடைத்த கர்ப்பிணிப் பெண்போல் நின்று கொண்டிருந்தார்.
அவரிடம் என்ன Tubeபா என்றேன் (சாராயம்) , சிரித்து கொண்டே ஆமாம் என்றார் ,
நாளைக்கு எவளோ கிடைக்கும் என்றேன் , அது ஒரு இரண்டாயிரம் வரும் என்றார் செம போதையில் .
எந்த ஏரியா என்றேன் ...பிள்ளையார் கோவில் அருகில் என்றார் .
கூட வந்த நண்பனிடம் ..
இன்னும் சற்று நேரத்தில் செக் போஸ்ட் வரும் அப்பறம் பாரு ... இவனுங்களை இறக்கி விட்டுடுவாங்க என்றேன்..
செக் போஸ்ட் வந்தது .. பேருந்தை நிருத்தவும்மில்லை சோதனை செய்யவுமில்லை... ஆச்சர்யம்.
எல்லாம் கொடுக்கல் வாங்கல் போலே ..
சென்னையில் அலைந்து திரிந்து
நாம் சோர்ந்துபோய் சும்மா வீட்டுக்கு வரும்போது மட்டும் உள்ளாடையை எட்டி பார்க்குமளவுக்கு சோதனை நடக்கும்.(கால் மணி நேரம் பேருந்து நிறுத்தப்படும்)
(சென்னையில் இருந்து வரும் பேருந்து கன்னிக்கோவிலில் நிற்காது என்பது கூடுதல் தகவல் )
Krishna Kumar G


இளைஞர்கள் எழுச்சியை நோக்கி : பத்திரிகை கருத்து சுதந்திரம்

இங்கிலாந்து பிரான்ஸ் போன்ற நாடுகளில்
அந்த நாட்டு பிரதமர் பற்றி அங்குள்ள பத்திரிக்கைகள் தாறுமாறாக எழுதுவார்கள்... கேலி சித்திரம் போட்டு மிக கேவலமாக (ஆபாசமாக) கிண்டல் அடிப்பார்கள்..
இதை எல்லாம் அந்த நாட்டு அரசியல் தலைவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள்..
ஏன் என்று கேட்டால் அது பத்திரிகை சுதந்திரம் என்பார்கள்..
நம் நாட்டில் கூட வடஇந்தியாவில் ஓரளவு பத்திரிக்கைகள் சுதந்திரமாக இருக்கிறது..
இங்குதான் பிரச்சனையே...
தமிழகத்தில் பத்திரிக்கைகளை பெரும்பாலும் அரசியல்வாதிகள் நடத்துகிறார்கள்
ஆகவே இவர்களுக்கென்று தனியாக ஒரு தர்மத்தை பேணி காப்பதாக அவர்களே எண்ணுகிறார்கள்.
இன்று அவர்கள் சார்ந்த இருக்கும் எதோ ஒரு பத்திர்க்கையில் ஒரு செய்தியை வர செய்துவிட்டு நாளை அந்த செய்தியயையே மேற்கோள் காட்டி அறிக்கை என்னும் வடிவில் தன் கருத்தை மறைமுகமாக நாசுக்காக சொல்கிறார்கள்.
தன் கருத்தை நேரடியாக சொல்ல தைரியம் இல்லாதவர்கள், பத்திரிகைகள் மூலம் பேசிக்கொள்கிறார்கள்.
ஏன் இவர்கள் தங்கள் கருத்தை நேரடியாக சொல்வதில்லை..
ஏன் பத்திரிக்கைகளும் சுதந்திரமாக செயல் படுவதில்லை..
இதற்க்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது..
இதில் முக்கியமானது , ஆளும் அரசுக்கு எதிராக செயல் படுபவர்கள் மீது அவதூறு வழக்கு போடுவது , அராஜகத்தின் மூலம் அடக்குவது, வாய் திறந்து பேசுபவர்களை ஒடுக்குவது என்று பல்வேறு ஒட்டுக்குமுறைகளை கையாளுகிறார்கள்.
தொடரும்... ..