Friday, September 23, 2016

மருத்துவ சாலை

Greams road Apollo எனக்கு நல்ல பழக்கப்பட்ட இடம், அந்த குட்டி சாலையில் .... இரவு நேரத்தில் அங்கே விற்கிற சுண்டல் எனக்கு இரம்போ பிடிக்கும்,
அங்கே ஒரு ரூம் போட்டு நிரந்தராமாக தங்கிவிட வேண்டும் என்று கூட யோசித்துபார்த்திருக்கிறேன்..
அது ஒரு கடுமையான முன்று வருடம் .... அங்கே தவமாய் உருண்டோடிய நாட்களை ..எண்ணிப்பர்க்கிறேன்.
ஒவ்வொரு தளத்திலும் என் தடம் பதித்திருக்கிறேன்.
எப்போதும் மரண ஓலம் ஒலித்துக்கொண்டே இருக்கும்
அது போக போக பழகிவிடும்....
பணத்தை தண்ணியாக செலவு செய்வோர்களை அங்கே பார்க்கலாம்,
கண்ணெதிரே ஒரு உயிர் போகும் , கோட் சூட் போட்டுக்கொண்டு வரிசையாக வருவார்கள் வந்து, சார் உங்களுக்கு எப்படி பார்சல் கட்டி டெலிவரி செய்யவேண்டும் என்று ஹோட்டல் சர்வர் போல் ஆர்டர் எடுத்து செல்வார்கள்,
12 மணிநேரம் வேலை செய்யும் உழியர்களுக்கு உட்கார கூட நேரம் இருக்காது... அவர்களை அழைத்து நம் திரைமறைவில் இளைப்பாற இடம் கொடுத்தால் ...அவர்கள் கவலைகளை கொட்டி தீர்ப்பார்கள்..
இன்னு நிறைய ....சொல்லணும்... (எழு ஆண்டுகளாக நினைவில் கிடக்கும் நினைவுகளை.)
(சாதாரனமாக யாரையும் உள்ளே பார்க்க விடமாட்டாங்க )

(கூடுதல் தகவல் : நம்ம எப்போ டிஸ்சார்ஜ் கேட்க்கிறோமோ அது வரைக்கும் இந்த ஆஸ்பித்திரில டிஸ்சார்ஜ் தரமாட்டாங்க,எம்மா நாள் வேணும்னாலும் தங்கிக்கலாம் அவ்வளோ நல்ல hospital - என்ன பணம் தான் அதிகமா செலவு ஆகும் - ஒரு மாதம் இருந்த போது டாக்டரிடம், சார் எப்போ டிஸ்சார்ஜ் பண்ணுவிங்க - அது உங்க இஷ்டம் நீங்க எப்போ விரும்ப்ரின்களோ அப்போ என்று casualலாக சொல்லிவிட்டு செல்வார்கள் )
Continue ..........