Saturday, September 17, 2016

காதலிக்கு வந்த காதல் கடிதம்

அவள் யாரை காதலிக்க போகிறாள் என்பது
எனக்கு முன்பே தெரியும்.
அவளுக்கு வந்த காதல் கடித்தத்தை முதலில் நான் தான்
படித்தேன் என்கிற உரிமையில்
இதை சொல்கிறேன்
அந்த கடிதம் ஆயிரம் ரோஜாக்களால் நிரம்பி இருந்தது.
அதை விட ஆச்சர்யம் அதில் கோர்த்து அனுப்பப்பட்ட செய்தியில் இருந்தது .

என்று அவள் தோழி என்னிடம் சொல்லி கொண்டிருந்தாள்.

அது  என்ன  ஆச்சர்யம் என்று  கேட்டேன் , அது ஒரு இரகசியம் அது  தெரிந்தால் நீ வேறவொரு பெண்ணுக்கு அதேபோல் செய்து பார்ப்பாய் என்றாள்.

அப்படியா என்று  சிறிது  நேரம்  அமைதியாக  உள்ளுக்குள் சிரித்த்துவிட்டு
ஆமா அந்த இரகசியம்  இதுதானே என்று  அந்த  இரகசியத்தை  அவளிடம் சொன்னேன்

ஆச்சர்யமாக அவள் அந்த  இரகசியம் எனக்கும் அவளுக்கும் மட்டும்  தான்  தெரியும் பிறகு  உனக்கு  எப்படி தெரிந்தது  என்றாள்

நான் உங்களுக்கு  முன்பாகவே  அந்த காதல்  கடித்தத்தை படித்துவிட்டேன் பிறகு  அதை கிழித்தெறியாமல் மீண்டும் உங்களிடமே அதை அனுப்பி வைத்துவிட்டேன்.

ஏன் இப்படி  செய்தாய் என்று வினவினாள்

நான் அவள் விதியை என் மதியால் சோதிக்க விரும்புகிறேன் என்றேன்

எப்படி என்றாள்

அது உனக்கு புரியாது புரிந்துகொள்ளவும் முடியாது என்றேன்.

அவள் குழம்பி போய் நின்றாள் பேதையாக...

இப்பொழுது  உன்னை  நான்  சோதிக்க போகிறேன் என்றேன்

எப்படி  என்றாள்

இந்தா உனக்கான என் காதல் கடிதம் என்று ஒரு காதல் கடிதத்தை நீட்டினேன்..

ஏற்கனவே குழம்பி நின்றவள் மீண்டும் மரண நடுக்கத்தில் உறைந்து நின்றாள்..

அவள் அந்த கடிதத்தை வாங்கவே இல்லை.

ஒன்று பேசாமல் என்னைவிட்டு திரும்பி நகர்ந்தாள் .

கொஞ்சம் நில்லு என்றேன் , மீண்டும் திரும்பி என்னை பார்த்தாள்..

அவளுக்கு  கொடுக்க கையில் வைத்திருந்த காதல் கடிதத்தை அவள் முன்பாக பிரித்து காண்பித்தேன் அதில் ஒன்றும் எழுதவில்லை என்று .

அந்தவேளையில் அவள் மூச்சி இறைத்துகொண்டிருந்ததை அவள் மார்பு வெளிபடுத்தியது.

நீ என்ன என் காதலியா கண்டவன் கொடுக்கும் காதல் கடிதங்களை எல்லாம் வாங்கி படிக்க என்று அவளை ஆசுவாச படுத்தினேன்.

பிறகு ஏதும் பேசாமல் என்னைவிட்டு கடந்து சென்றுவிட்டாள்..

மீண்டும் இரவில் தொலைபேசியில் அழைத்தாள்..

அப்பறம் சொல்லு என்றாள்....................... காதலாக



(தொடரும்)

+krishna kumar G