Wednesday, August 31, 2016

எழும்பும் நீர் ஆணை விழும் வாழ்வணை

ஒரு அணை கட்டனும்னா... லோக்கல் விஎஒ , தாசில்தார்,கலெக்டர்,ஊராட்சி தலைவர், மாநில அமைச்சர்கள்,முதல் அமைச்சர்,முதல் அமைச்சர் தலைமையில் கூடிய அனைத்து கட்சி
மற்றும் அமைச்சரவை கூட்டம்..
மத்திய சுற்றுசூழல்,மத்திய நீர் வள ,மத்திய வனத்துறை,மத்திய ஊரக வளர்ச்சி ,மின்துறை, பிரதமர்.
மற்றும் பிரதமர் தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டம்..
இப்படி இவங்க எல்லாரும் இணைந்துதான் ஒரு அணையை கட்ட திட்டம் போடுறாங்க.. இந்த திட்டம் போடவே சுமார் குறைந்தது முன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை ஆகும்..
பிறகு பொதுப்பணித்துறை டெண்டர் மூலம் ஆணை கட்டப்படுகிறது ... ஆணையின் அளவை பொறுத்து இதற்க்கு சுமார் ஐந்து ஆண்டுகள் வரை ஆகும்...
கட்டி முடித்த பின் அணைக்கு சுண்ணாம்பு பெயிண்ட் பூசுவார்கள்... பூச்சு வேலை முடிந்து அணைக்கு பெயர் பலகை எழுதுவார்கள்...
அப்போதுதான் தமிழக மக்களை விழித்து கொள்ளும்படி
அரசியல் தந்திரவாதிகள் அழைப்பார்கள்...
உடனே மக்கள் கொடியை பிடித்துகொண்டு தெருவில் இறங்கி போராடுவார்கள்...
உச்ச நீதிமன்றத்தில் வேடிக்கையாக ஆயுள் காலம் முழுவதும் வழக்காடுவார்கள்,
பிறகு ஆணை அப்போதைய பிரதமரால் இனிதே திறந்து வைக்கப்படும்
அந்த விழாவை தமிழக அரசியல்வாதிகள் புறக்கணித்து எதிர்ப்பார்கள்
ஆனால் அதற்க்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பே பிரதமர் தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் ..அணைக்கு ஒப்புதல் கையெழுத்து போட்டுவிட்டு லம்ப்பாக அமௌன்ட் வாங்கி நான்கு கல்லூரிகள் கட்டி இருப்பார்கள்..
அதில் விவசாயின் பிள்ளைகள் டோனேசன் கொடுத்து சீட் வாங்கி படித்து வருவார்கள்.
என்னைப்போல் முட்டாள் மக்கள்
இறுதியில் நீர்யின்றி
வளமிழந்து
ஏமாந்து போவார்கள்
Krishna Kumar G