Friday, September 30, 2016

நான் எதிர்பார்க்கும் அரசியல் வாதிகள்

சும்மா படித்த இளைஞர்கள் வடித்த இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று சொல்வதே மூடர்தனம்,

உதாரணத்துக்கு:
டெல்லி ஆம் ஆத்மி கட்சியில் ஊழல் செய்தவர்கள் , பாலியல் வழக்கில் சிக்கியவர்கள் , எல்லாம் படித்த வடித்த இளைஞர்கள் தான்.

படிப்பு ஒரு Criteria தான் அது Compulsory இல்லை
இங்கே படிப்பு முக்கியமில்லை நல்ல ஒழுக்கமும் பண்பும் நிறைந்த நல்ல மனிதர்கள் தான் , அரசியலுக்கு தேவை,


இரண்டாம் வகுப்பு பாம்பு

ஒரு கிராமத்து பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்துகொண்டிருந்தேன் ...
தொலைக்காட்சியில் வரும் மாஹபாரதம் ராமாயணம் பார்த்துவிட்டு..
தினமும் மதியம் மாணவர்கள் அதை அப்படியே வகுப்பறைக்குள் விளையாடுவார்கள்,
ஒருநாள் மதிய உணவு உண்ட களைப்பு அசதியில் .
வகுப்பறைக்குள் வந்தேன் .
அப்போது மஹாபாரத போர் நடந்து கொண்டிருந்தது...
ஒரு பெஞ்ச் வரிசையில் இருக்கும் மாணவர்கள் இன்னொரு பெஞ்ச் வரிசையில் இருக்கும் மாணவர்களோடு போர் செய்து கொண்டிருந்தார்கள்...
வில்லும் அம்பும் பேப்பர் ராக்கெட்டில் பறந்து கொண்டிருந்தது..
நான் உள்ளே வந்ததும் கிருஷ்ணர் வந்துவிட்டார் ..
என்று நான் அமரும் பெஞ்ச் வரிசையில் இருக்கும் மாணவர்கள் சத்தம் போட்டார்கள்...
எனக்கோ உண்ட களைப்பு.. நேராக பெஞ்சில் ஏறி படுத்துவிட்டேன்...
டேய் பாம்பு டா என்றான் ஒருவன்...
திடுக்கிட்டு எழுந்து பார்த்தேன்...
ஏமாந்துட்டியா என்றான்...
வாடா விளையாட என்றார்கள்..
அதற்குள் இன்னொருந்தன் உண்மையாலும் பாம்பு என்றான்...
அனைவரும் பயத்தில் டெஸ்க்க்கு அடியில் இருந்த பை மூட்டைகளை எடுத்து மேலே வைத்து விட்டோம்...
அதே வேலையில் டீச்சர் உள்ளே வந்துவிட்டார்...
வந்ததும்
ஏன் எல்லாரும் பையை மேலே வைத்துள்ளிர்கள் என்றார்..
நாங்கள் பாம்பு என்றோம்...
அலறி அடித்து ஓடிவிட்டார்
பிறகு சும்மா சொன்னோம் மிஸ் என்று அழைத்து வந்தோம்..
வந்தவர் அனைவரும் பைகளை கிழே வையுங்கள் என்று சொன்னதும் அனைவரும் பைகளை கிழே வைத்தோம்..
Attendance எடுத்து முடித்து
வகுப்பு எடுக்க சரி பாடம் நடத்த தொடங்கினார்..
அந்த வகுப்புக்கான புஸ்தகத்தை பையில் இருந்து எடுக்க கிழே குனிந்தேன்...
அவ்வளவு தான் ..
அலறி அடித்து வகுப்பறையை விட்டு ஓடினேன்...
என் பின்னால் வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் வெளியே ஓடி வந்துவிட்டார்கள்...
மிஸ் வந்து டேய் உண்மையா பாம்பு பாத்தியா என்றாகள் ..
அமாம் மிஸ் என் காலுக்கு அடியில் இருந்தது என்றேன்...
உடனே அருகில் இருந்த இரண்டு ஆட்களை அழைத்து வந்து ... உள்ளே தேட சொன்னார்கள்..
அவர்கள் நான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து இரண்டு பெரிய பாம்புகளை பிடித்து அடித்து கொன்றார்கள்...
அது சார பாம்பு நல்ல பாம்பு என்றார்கள்
எனக்கு நல்ல சகுனம் என்றார்கள்..
இதை கேள்விபட்ட என் பெற்றோர் அடுத்த வருடம் என்னை வேறு பள்ளிக்கே மாற்றிவிட்டார்கள்...
என் கவலை எல்லாம் ஒரு Co-ed பள்ளியில் இருந்து வெறும் ஆண்கள் மட்டுமே படிக்கும் பள்ளிக்கு மாற்றிவிட்டார்கள் என்பதுதான்...
--- அப்பறம் சொல்லுறேன்---
(இதன் விளைவு... அந்த பள்ளியில் என்னுடன் படித்த பிள்ளைகள் ... கல்லூரியில் எனக்கு சீனியர்களாக இருந்தார்கள் அவர்களது தம்பிகள் என்னுடன் வகுப்பறையில் இருந்தார்கள்..
அக்காவும் தொஸ்த்துதான் தம்பியும் friend தான்..)

(இன்று  அந்த  பள்ளி  இல்லை  இடிக்க  பட்டுவிட்டது)

Thursday, September 29, 2016

When I met facebook

முதன் முதலில் facebook கை 2005ம் ஆண்டுதான் பார்த்தேன்...
ஹிந்து நாளிதழில் இப்படியாக செய்தி வந்திருந்தது .
அமெரிக்காவில் facebook என்ற இணையதளம் கல்லூரி மனவர்களுக்குகேன்று ஒரு வலை அமைப்பை உருவாக்கி உள்ளது, இதன் முலம் நண்பர்களுடன் தொடர்பில் இருக்க முடியும் என்று படித்தேன்,
படித்த் இடம் சோமு வீடு .. உடனே கம்ப்யூட்டரை ஆண் செய்து facebookகை open செய்தேன் ...
சோமு ஓடி வந்து என்னடா செய்ற ...
டேய் புதுசா facebookன்னு ஒன்னு வந்து இருக்கு டா என்றேன்..
மெதுவாக facebook திறந்தது ..
அதன் முகப்பே எனக்கு பிடிக்கவில்லை....
அவ்வளவு கேவலமாக இருந்தது...
yahoo home page யில் இருக்கும் பல விசியங்கள் அதில் இருந்தது
ஏற்கனவே hi5 இணையதளம் பயன்படுத்தியதால் இது எனக்கு பிடிக்கவில்லை..
சும்மா பேருக்கு ஒரு அக்கௌன்ட் ஆரம்பித்தேன்...
பிறகு 2007ல் தான் அதை திறந்து பார்த்தேன்..
நான்கு ஐந்து நண்பர்கள் இருந்தார்கள்...
எத்தனை நபர்களை சேர்த்து விடுகிறோமோ அந்த அளவுக்கு நமக்கு points கொடுத்து நம்மை பிரபலப்படுத்துவார்கள்..
இதுபோல் மெல்ல வளர்ந்தது facebook..
(இடையே orkut என்று ஒருவன் இருந்தான்..)

தற்போது  நான் பயன்படுத்தும் facebook அக்கௌன்ட் 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது ..
ஏற்க்கனவே நான் வெவ்வேறு காலகட்டங்களில் வைத்திருந்த மூன்று accountகளை facebook முடக்கிவிட்டது...
அதிலுள்ள புகைப்படங்கள் எல்லாம் தொலைத்துவிட்டேன்..

Krishna Kumar G


Online Chat Rooms from India 2016

2002 அம் ஆண்டு வாக்கில் இணையத்தில் Yahoo chat கள் பிரபலம்...
அதை பயன்படுத்தும்போது
பல chat ரூம்கள் இருக்கும் அதில் இந்தியர்கள் chat ரூம்மில்,
பல பாகிஸ்தானியர்களை பார்க்க முடியும்
அவர்கள் எதையோ யாரையோ தேடிக்கொண்டே இருப்பார்கள் (ஆண்கள் தான் இருப்பார்கள்)
அவர்கள் நம்மிடம் chatல் பேசுவார்கள்
அவர்கள் பேசும்போது முக்கிய கருவாக கிரிக்கெட் இருக்கும்
எங்களுக்கு சச்சின் பிடிக்கும் என்பார்கள்
உங்களுக்கு யாரை பிடிக்கும் என்று கேட்பார்கள்..
Wasim Akram என்றது ஏன் உங்களுக்கு Shoaib Akhtar
பிடிக்காதா என்பார்கள்..
இப்படியாக தொடங்கி விவாதம் பாலிவுட் பக்கம் இட்டு செல்லும் ..
அவர்களுக்கு பிடித்த
நடிகர் நடிகைகள் பெயர்களை பட்டியலிடுவார்கள்.
நான் தமிழன் எனக்கு பாலிவுட் பற்றி அந்த அளவுக்கு தெரியாது என்றதும்
அவர்களுக்கு வியப்பாக இருக்கும்.
பக்கத்து நாட்டில் உள்ள தனக்கு தெரிந்த விசியம் கூட இந்தியாவில் இருக்கும் உங்களுக்கு தெரியவில்லையே என்பார்கள்..
----------------------------------------------------
இடையில் ஒரு nigerian வருவான் ... பாஸ் இந்தியாவில் பெண்கள் மலிவாக எங்கு கிடைப்பார்கள் என்பான்...
தூ போடா .... என்று கடந்து செல்லவும் விடமாட்டான்.
என்னிடம் பணம் உள்ளது இதை இந்தியாவில் முதலிடு செய்ய வேண்டும் என்பான்..
அசை வார்த்தைகளாக பேசுவான்.


-----------------------------------------------------
நம் கவனம் எல்லாம் Philippines நாட்டில் இந்தியர்களுக்காக காத்து கிடக்கும் பெண்கள் மீதுதான் இருக்கும்..
மற்ற நாட்டு பெண்கள் போல் அல்லாமல்
வழக்கமாக வீடியோ chat யில் தான் பேசுவார்கள்..
நாம் கேட்கும் விசியங்களுக்கு மிகவும் வெள்ளோந்தியாக பதில் அளிப்பார்கள்,
ஒரே நேரத்தில் நான்கு வீடியோ chatகள் ஸ்க்ரீனில் ஓடி கொண்டிருக்கும்,
யார் யாருக்கு என்ன பதில் அளித்தோம் என்பதே மறந்து போய்விடும்.
-------------------------------------------------------
அப்படியே chat ரூமை US பக்கம் மாற்றினால்
Anunties அண்ட் கிழவிகள் வருவார்கள் , அவர்கள் உடனே தொலைபேசியில் அழைத்து விடுவார்கள்..
நாம் பேசுவது அவர்களுக்கு புரியாது என்பதால் ..அந்த விவாதம் நெடுநேரம் நீடிக்காது .
---------------------------------------------------------
தமிழ் chat ரூமில்
மலேசியா சிங்கப்பூர் பெண்கள் இருப்பார்கள்.. மிக நன்றாக பேசுவார்கள்.. தொடர்ந்து ஈமெயில் செய்வார்கள்,
சென்னையில் இருந்து ஒர் இரு பெண்கள் chat ரூமில் இருப்பார்கள், மிகவும் போலியாக பேசுவார்கள் அகவே அவர்களும் நம்மை போல் பல chat ரூம்களில் இருப்பார்கள் என்று எளிதில் கணித்து விடலாம்.
-----------------------------------------------------------
தற்போது yahoo chat ரூம்கள் இல்லை...
----------------------------------------------------------------
facebook, whatapp யில் யாருடனும் chat செய்வதில்லை,
போலி உருவம் நிறைந்துள்ளதால்
தெரிந்தவர்களுடன் மட்டுமே பேசுகிறேன்.
chat உலகம் பல வடிவம் பெற்றுள்ளது.
இன்னும் பல தகவல்கள் இருக்கிறது..
போக போக
நேரம் வரும்போது சொல்கிறேன்
---------------------------------------------------------------
ASL
33 M India
?
18 F Japan
இதுதான் yahoo chatன் code
இப்படிதான்  chatகள் பெரும்பாலும்  தொடங்கும்

Krishna Kumar G


வெள்ளிக்காரன் கட்டிய கட்டமைப்பு நம்மை காக்கிறது

வெள்ளிக்காரன் கட்டிய அருங்காட்சியகம் மட்டுமே தமிழ் நாட்டில் இருந்துள்ளது..
வெள்ளைக்காரன் எடுத்த புகைப்பட ஆவணம் தான் இன்று திருடப்பட்ட சிலைகளை கண்டு பிடித்தபின் reference சாக பயன்படுகிறது.
வெள்ளைக்காரன் கட்டிய சிறை , அலுவலகம், கோட்டை, ரயில் நிலையம், கல்லூரி, பள்ளிக்கூடம், சாலை ..
அவன் அளந்து விட்ட பட்டா சிட்டா
இப்படி எல்லாம் அவன் செய்தது மட்டுமே மீந்து தேய்ந்து இருக்கிறது
....
நாம என்னதான் செய்தோம்...
திருமணம் செய்தோம் பிள்ளைகள் பெற்றோம் கடமையாக கருதி


Wednesday, September 28, 2016

Naked US Election

Until yesterday(27 Sep 2016) American celebrities Posts were like this :
If you vote for Trump i'll get naked
If you vote for hillary I'll get naked

From Yesterday it was like this :
come to Vote and get naked
Katy Perry started it & many were started to follow it.


"Im voting naked with Katy Perry!! Vote for Hillary. She's the Best we got!🇺🇸🇺🇸🇺🇸. Nude Voting series # 1" -Madonna.



I think this is why people always wants to live in America .
(In India: if India wins in cricket match we can see these type of acts)

World is changing so fast we've to cope with that .I mean Internet world .
(next u will google now)

Tuesday, September 27, 2016

Learnig from African American How to break slavery

நாம் African-American னிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டி யுள்ளது அவர்கள் எப்படி தங்களுக்கான போரட்டங்களை முன்னெடுத்தார்கள்,
தங்கள் அடிமை தனத்தை எப்படி ஒழித்தார்கள்..
நிறவெறி அதிகம் இருந்த காலகட்டத்திலே எப்படி மார்டின் லூதர் கிங் தோன்றினார் ,
இன்று நாட்டை ஆளுகிற ஒபாமா வரை - எப்படி வென்றார்கள்.
இது போன்ற பல கேள்விகளின் விடை
நம் நாட்டில் உள்ள சாதி அமைப்புகளை உடைப்பதற்கு எதோ ஒரு வகையில் இது உதவியாக இருக்கும்...,
இன்னும்  இந்தியாவில்  கிட்டதட்ட 25% மக்களுக்கு மேல் சாதியினால் அடிமைகளாக  இருக்கிறார்கள்.
இவர்கள் இந்த  மண்ணின் பூர்வ குடிகளாகவும்  இருக்கிறார்கள்.
இவர்களின் விடுதலைக்கு இந்த ஆப்ரிக்கன் அமெரிக்கன் செய்த அமைதி புரட்சிகள் ஏதோவொரு வகையில் பதில் சொல்லும் என்று  கருதுகிறேன்.

African American broke the Slavery and Got their Civil rights from their long struggle ..Many have scarified their life diginity to achieve it .
Want to learn more about it to break my people slavery in my nation

National Museum of African American History and Culture : Sign of Victory ,
Victory bell has been ringing .
ஆப்ரிக்கா அமெரிக்கர்களின்  தேசிய அருங்காட்சியகம் ஒரு வெற்றியின் சின்னம்.
வெற்றியின் மணி ஓசை (Openend in 24 September 2016 )



Krishna Kumar G

Continue ........

அமெரிக்க மக்களால் நேசிக்கப்படும் கறுப்பின தலைவர்கள்

Monday, September 26, 2016

வதந்திகளை நம்பாதிர்கள்

வதந்திகளை போகிற போக்கில் போகட்டும் என்று விட்டுவிடுங்கள்
அல்லது உண்மையை சொல்லிவிடுங்கள் அப்போதே வதந்தி அழிந்துவிடும்
தேவை இல்லாமல் அதை பகைத்து கொள்ளாதிர்கள்
அதனுடன் வாதமோ சண்டையோ இட்டால்
அது மறைந்துகிடக்கும் உண்மையை பிரசவித்துவிடும்.

Krishna Kumar G


உள்ளாட்சி தேர்தலும் உள்குத்தும்

சென்னைக்கு இரண்டு மாநகராட்சி அந்தஸ்த்து கொடுத்திருக்கனும்
200 வார்டுகள் - மிக அதிகம், இதை எப்படி ஒரு மாநகராட்சி மட்டுமே நிர்வாகம் செய்யும்.

தேர்தல் தேதி அறிவிப்புக்கும் அதை தொடர்ந்து வேட்புமனு தாக்கல் தேதிக்கும் குறைந்தது ஒரு வாரம் அவகாசம் இருக்க வேண்டும் என்று சட்ட திருத்தம் கொண்டுவரவேண்டும்.
தலைமை தேர்தல் ஆணையத்திடம் அனைத்து கட்சிகளும் மனு தர வேண்டும்.
இதை இப்போதே செய்யாமல் விட்டால் இதே நிலை வருகிற இடை தேர்தல்களிலும் பிரதிபலிக்கும் .

Krishna Kumar G


Sunday, September 25, 2016

Trade unequality in india

யாருக்காவது திறமை இருந்தா Apple மொபைல்க்கு குறைந்த விலையில் ஒரு Wireless Headset போட்டு Amazonல,Alibaba,eBay Sale பண்ணுங்க... பாப்போம்...
முடியாது... இந்த மாதுரி விசியம்லாம் சீனாவால மட்டும் தான் முடியும்...Govt is providing free trade zone for all.
அமெரிக்க ஒரு நூற்றாண்டில் கண்ட வளர்ச்சியை மூன்றே வருடத்தில் எட்டி பிடித்திருக்கிறது சீனா (2011 - 2013)Infrastructure .
போதாத குறைக்கு அமெரிக்காவிலே ரயில்வே லைன் போடுகிறது சீனா..
இந்தியாவிலும் ரயில்வே லைன் போடுகிறது.
India only promoting Gujarathi only Trade Zone .
Where is the Free Trade Zone ன்னு கேட்டா SEZ யை காட்டுறாங்க , அங்கே சாதாரன மக்கள் போய் வியாபாரம் செய்ய முடியுமா...?
பன்னாட்டு நிறுவனம் தானே அங்கே கடைகளை திறந்து வைத்து கொள்ளை லாபம் பார்க்கிறார்கள் .
அங்கேதானே நமது பிள்ளைகள் வேறுவழி இல்லாமல் பிழைப்புக்காக கௌருவ அடிமைகளாக ஓடுகிறார்கள் .
மருத்துவத்துக்காக SEZ , விவசாய உற்பத்திக்காக ஒரு SEZ , Global Trading க்காக ஒரு SEZ (Financial ) இங்கே போட்டா அந்த சென்னை Trade centerல உட்ட உடான்சு நமது லாபம் முன்று லட்சம் கோடி நம்ம நாடு தேடி வரும்ல .
( L̶o̶b̶b̶y̶i̶n̶g̶ ̶i̶s̶ ̶l̶e̶g̶a̶l̶ ̶i̶n̶ ̶m̶a̶n̶y̶ ̶c̶o̶u̶n̶t̶r̶i̶e̶s̶ ̶.̶ இத பத்தி அப்பறம் பேசுவோம் )
என்னடா குறைகள் மட்டும் பேசுறேன்னு நினைக்க வேண்டாம் வெறும் குறைகள் மட்டும் தான் இங்கே இருக்கிறது, நிறைகள் எல்லாம் வேறு எங்கோ இருக்கிறதை நம்மால் உணர மட்டும் தான் முடிகிறது .



Saturday, September 24, 2016

What is Ladies night ?

ladies night : இங்க பாதி பேருக்கு ladies nightனா என்னானே தெரியாதுல... ?
தெரியாமலே இருங்க அதுதான் நல்லது. தெரிஞ்சிக்கனுமா..?
ஒண்ணுமில்லப்பா ... வெள்ளி சனி ஞாயிறுகளில் Pubகளில் சரக்கு அடிக்க கூட்டம் அலைமோதும்... வியாபாரம் கலைக்கட்டும்..
அடுத்து வரும் திங்கள் செவ்வாய் புதன் கிழமைகளில் யாரும் சரக்கு அடிக்க வர மாட்டாங்க ...
அப்ப என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சவங்க : பசங்களை இங்க வர வைக்கணும்னா , பெண்களை முதல்ல இங்க வரவைக்கனும்னு முடிவு பண்ணாங்க .
அதுதான் ladies night அன்னைக்கு மட்டும் பெண்களுக்கு சரக்கு கம்மி விலையில் தருவாங்க இல்லன்னா freeயா தருவாங்க .. அவங்க கூட வருற பசங்களுக்கு வழக்கமான விலைதான்..
(குறிப்பு : வார இறுதி நாட்களில் தான் உண்மையான ladies night, பசங்க ஓசில சரக்கு வாங்கி தருவாங்க, ladies nightல் பாதி விலைக்கு வாங்குவதற்கு பதில் ஓசி சரக்கு in Weekends )
இது தாங்க ladies night ..
நம்ம சென்னை கோவை போன்ற தமிழக நகரங்களில் கூட இது நடக்கிறது ,
இந்தியாவில் இதுக்குலாம் செமத்தியான ஊரு பெங்களூர்,மும்பை,டெல்லி தான், அப்பறம் தான் சென்னை,
புதுவைல கூட இல்லைன்னா பாத்துக்கோங்க..
(Open ladies night in TASMAC க்குன்னு உங்க உள்மனசு சொல்லுமே)
(குடி குடியை கெடுக்கும்)

Rave Parties 

Krishna Kumar G


Friday, September 23, 2016

மருத்துவ சாலை

Greams road Apollo எனக்கு நல்ல பழக்கப்பட்ட இடம், அந்த குட்டி சாலையில் .... இரவு நேரத்தில் அங்கே விற்கிற சுண்டல் எனக்கு இரம்போ பிடிக்கும்,
அங்கே ஒரு ரூம் போட்டு நிரந்தராமாக தங்கிவிட வேண்டும் என்று கூட யோசித்துபார்த்திருக்கிறேன்..
அது ஒரு கடுமையான முன்று வருடம் .... அங்கே தவமாய் உருண்டோடிய நாட்களை ..எண்ணிப்பர்க்கிறேன்.
ஒவ்வொரு தளத்திலும் என் தடம் பதித்திருக்கிறேன்.
எப்போதும் மரண ஓலம் ஒலித்துக்கொண்டே இருக்கும்
அது போக போக பழகிவிடும்....
பணத்தை தண்ணியாக செலவு செய்வோர்களை அங்கே பார்க்கலாம்,
கண்ணெதிரே ஒரு உயிர் போகும் , கோட் சூட் போட்டுக்கொண்டு வரிசையாக வருவார்கள் வந்து, சார் உங்களுக்கு எப்படி பார்சல் கட்டி டெலிவரி செய்யவேண்டும் என்று ஹோட்டல் சர்வர் போல் ஆர்டர் எடுத்து செல்வார்கள்,
12 மணிநேரம் வேலை செய்யும் உழியர்களுக்கு உட்கார கூட நேரம் இருக்காது... அவர்களை அழைத்து நம் திரைமறைவில் இளைப்பாற இடம் கொடுத்தால் ...அவர்கள் கவலைகளை கொட்டி தீர்ப்பார்கள்..
இன்னு நிறைய ....சொல்லணும்... (எழு ஆண்டுகளாக நினைவில் கிடக்கும் நினைவுகளை.)
(சாதாரனமாக யாரையும் உள்ளே பார்க்க விடமாட்டாங்க )

(கூடுதல் தகவல் : நம்ம எப்போ டிஸ்சார்ஜ் கேட்க்கிறோமோ அது வரைக்கும் இந்த ஆஸ்பித்திரில டிஸ்சார்ஜ் தரமாட்டாங்க,எம்மா நாள் வேணும்னாலும் தங்கிக்கலாம் அவ்வளோ நல்ல hospital - என்ன பணம் தான் அதிகமா செலவு ஆகும் - ஒரு மாதம் இருந்த போது டாக்டரிடம், சார் எப்போ டிஸ்சார்ஜ் பண்ணுவிங்க - அது உங்க இஷ்டம் நீங்க எப்போ விரும்ப்ரின்களோ அப்போ என்று casualலாக சொல்லிவிட்டு செல்வார்கள் )
Continue ..........


Saturday, September 17, 2016

காதலிக்கு வந்த காதல் கடிதம்

அவள் யாரை காதலிக்க போகிறாள் என்பது
எனக்கு முன்பே தெரியும்.
அவளுக்கு வந்த காதல் கடித்தத்தை முதலில் நான் தான்
படித்தேன் என்கிற உரிமையில்
இதை சொல்கிறேன்
அந்த கடிதம் ஆயிரம் ரோஜாக்களால் நிரம்பி இருந்தது.
அதை விட ஆச்சர்யம் அதில் கோர்த்து அனுப்பப்பட்ட செய்தியில் இருந்தது .

என்று அவள் தோழி என்னிடம் சொல்லி கொண்டிருந்தாள்.

அது  என்ன  ஆச்சர்யம் என்று  கேட்டேன் , அது ஒரு இரகசியம் அது  தெரிந்தால் நீ வேறவொரு பெண்ணுக்கு அதேபோல் செய்து பார்ப்பாய் என்றாள்.

அப்படியா என்று  சிறிது  நேரம்  அமைதியாக  உள்ளுக்குள் சிரித்த்துவிட்டு
ஆமா அந்த இரகசியம்  இதுதானே என்று  அந்த  இரகசியத்தை  அவளிடம் சொன்னேன்

ஆச்சர்யமாக அவள் அந்த  இரகசியம் எனக்கும் அவளுக்கும் மட்டும்  தான்  தெரியும் பிறகு  உனக்கு  எப்படி தெரிந்தது  என்றாள்

நான் உங்களுக்கு  முன்பாகவே  அந்த காதல்  கடித்தத்தை படித்துவிட்டேன் பிறகு  அதை கிழித்தெறியாமல் மீண்டும் உங்களிடமே அதை அனுப்பி வைத்துவிட்டேன்.

ஏன் இப்படி  செய்தாய் என்று வினவினாள்

நான் அவள் விதியை என் மதியால் சோதிக்க விரும்புகிறேன் என்றேன்

எப்படி என்றாள்

அது உனக்கு புரியாது புரிந்துகொள்ளவும் முடியாது என்றேன்.

அவள் குழம்பி போய் நின்றாள் பேதையாக...

இப்பொழுது  உன்னை  நான்  சோதிக்க போகிறேன் என்றேன்

எப்படி  என்றாள்

இந்தா உனக்கான என் காதல் கடிதம் என்று ஒரு காதல் கடிதத்தை நீட்டினேன்..

ஏற்கனவே குழம்பி நின்றவள் மீண்டும் மரண நடுக்கத்தில் உறைந்து நின்றாள்..

அவள் அந்த கடிதத்தை வாங்கவே இல்லை.

ஒன்று பேசாமல் என்னைவிட்டு திரும்பி நகர்ந்தாள் .

கொஞ்சம் நில்லு என்றேன் , மீண்டும் திரும்பி என்னை பார்த்தாள்..

அவளுக்கு  கொடுக்க கையில் வைத்திருந்த காதல் கடிதத்தை அவள் முன்பாக பிரித்து காண்பித்தேன் அதில் ஒன்றும் எழுதவில்லை என்று .

அந்தவேளையில் அவள் மூச்சி இறைத்துகொண்டிருந்ததை அவள் மார்பு வெளிபடுத்தியது.

நீ என்ன என் காதலியா கண்டவன் கொடுக்கும் காதல் கடிதங்களை எல்லாம் வாங்கி படிக்க என்று அவளை ஆசுவாச படுத்தினேன்.

பிறகு ஏதும் பேசாமல் என்னைவிட்டு கடந்து சென்றுவிட்டாள்..

மீண்டும் இரவில் தொலைபேசியில் அழைத்தாள்..

அப்பறம் சொல்லு என்றாள்....................... காதலாக



(தொடரும்)

+krishna kumar G 


Friday, September 16, 2016

அரசியல் விதை

நான் புரிதுகொண்ட அரசியல் மிக மட்டமானது.
இந்த மட்டத்திலிருந்து மிக காட்டமான அரசியலை விதைக்கிறேன்.சற்று காரமாகத்தான் இருக்கும்.
மாற்றத்திற்கான விதை இங்கே விதைக்கப்படுகிறது
...!
Krishna Kumar G


அரிசி விலை உலை வைக்கிறது

அரிசி விலை கிலோ 50 ரூபாயை கடந்துவிட்டது..
அதை வங்கி வந்த பிறகு ஒருவேளை இது சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்ட பிளாஸ்டிக் அரிசியாக இருந்துவிட்டால் என்ன செய்வது.. என்ற பயத்தில் சில சோதனைகள் செய்து அதை சோதித்து பார்த்தேன் ... நல்லவேளை நல்ல அரிசிதான்... வழக்கம் போல் ரசாயனம் மட்டுமே கலந்து பாலிஸ் செய்துள்ளனர்..
விரைவில் அரிசி சாப்பிடுவதையே குறைத்து வேண்டும்..என்ற யோசனையில் .
Krishna Kumar G


Thursday, September 15, 2016

நல்லவர் வரவேண்டும்

ஒரு நல்லவர் தான் ஆட்சி பொறுப்பில் வர வேண்டும் என்பது அணைவரது விருப்பமாக இருக்கிறது
ஆனால்
இவர்கள் நல்லவர்களை தேர்வு செய்வதில்லை
மாறாக அதிகம் சலுகைகளை நிறைவேற்றுவதாக வேற்று வாக்குறுதி தருபவர்களுக்கே வாக்கை செலுத்துகிறார்கள்.
நல்லவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்கிற இவர்களது முந்திய நினைப்பை இவர்களே லஞ்சம் பெற்று கொண்டு தகர்த்து எறிகிறார்கள்
சமிப காலங்களில் வரும் தேர்தல் முடிவுகளை பார்த்தால் இப்படி தான் தோன்றுகிறது.
இனி நல்லவர்கள் ஆட்சிக்கு வருவார்களா ? என்கிற சந்தேகமும் வருகிறது..

Krishna Kumar G


Monday, September 12, 2016

அறுதல் கூட ஏமாற்றத்தின் வெளிப்பாடே

பாதிக்கப்பட்ட நாம் அந்த சூழ்நிலையை கடப்பதைவிட
நமக்கு அறுதல் சொல்பவர்களால் அதை கடந்து வர முடியவில்லை...
எதோ ஒரு வகையில் அவர்களும் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள்..

அறுதல் அன்பின் வெளிப்பாடாக  இருந்தாலும்
மறுமுனையில்
அறுதல் கூட ஏமாற்றத்தின் வெளிப்பாடே

Krishna Kumar G


Friday, September 9, 2016

தொழில்நுட்ப மனிதன்

இந்த உலகத்துலே அதிக பட்ச தொழில்நுட்பத்தோடு (technology)  செய்யப்பட்ட பொருள் ஒன்னு இருக்கு..
அது வேற எதுவுமில்லை அந்த பொருள் நாம தான்..
நம்மளால share it இல்லாமலே ஒரு விசியத்தை share செய்ய முடியும்..
அன்பு இரக்கம் பாசம் காதல் காமம் கோவம் சண்டைன்னு நிறைய ப்ரோக்ராம்கள் நமக்குள் இருக்கு.
உடனே நம்ம OS என்னான்னு கேட்காதிங்க...
(ஆண், பெண் OS )
சும்மா ஒரு பேச்சிக்கு சொல்லுறேன்..



Thursday, September 8, 2016

No Job

In English :

What will you call the person who has 'no job' ?
Useless

Any other answer ?
The greatest person in this world

who has the best job in this world its called 'no job'

An useless fellow is
used in most ways as possible
As possible the fellow gets richer than others .

Useless
Krishna Kumar G

(Now did u call me useless right now ? Yes !., that's the shit I expected from your mouth )

Tuesday, September 6, 2016

பேஸ்பூக் லைக்கும் கமெண்ட்டும்

லைக்கும் கமெண்ட்டும் போட்டே சில நபர்களை நல்ல ஏத்தி விடுறாங்க facebook மக்கள்...
ஒரு கட்டத்துக்கு அப்பறம்...
ஏத்தி விட்டு உயர அனுப்புனவங்களையே
கேலி கிண்டல் பண்ணி
அசிங்கபடுத்தி அவமானபடுத்தி
தரை டிக்கெட் லெவல்க்கு கிழே கொண்டுவந்து விட்டு
விடுகிறார்கள்...
இந்த facebook மக்கள்.(VIP -)
கெட்டவனை நல்லவனா மாத்துறாங்க
நல்லவனா கெட்டவனா சித்தரிக்கிறாங்க...
இங்கே உலாவும் எந்த கதையையும் உண்மைய பொய்யா என நியாயம் தீர்க்கவே முடியாது....
இங்கே நாம் எந்த நோக்கத்துக்காக வருகிறோம் என்பது மிக முக்கியம்...
அது எதுவாக இருப்பினும் அதோடு முடித்து கொண்டு விலகி செல்லுதல்.. நல்லது.
------- எதோ சொல்லனும்ன்னு தோணுச்சி------


Saturday, September 3, 2016

No one follows the Pledge - Respect and follow it

நீ என்ன மதம்,நான் என்ன மதம், நீ என்ன ஜாதி ,
, நான் என்ன ஜாதி , நீ என்ன மொழி, நான் என்ன மொழி,
நீ என்ன நிறம் , நான் என்ன நிறம், நீ என்ன மாநிலம் , நான் என்ன மாநிலம்...நீயும் நானும் ஒண்ணா ?.
இப்படி தான் போகுது இன்றைய மீள் உறுதிமொழிகள்...

India is Union of States or Council of States .then its called so called nation.
There is diversity and there is also union in diversity .
We have to respect it .
We have to treat everyone equal in all basis .

Krishna Kumar G



பெண்கள் பாதுகாப்பு நாடகம்

பெண்ணுரிமை,பெண்கள் பாதுகாப்பு - சமுக பிரச்சனை - நீதி சமுகத்தின் மூலமே பெறப்படும்...
இதை அரசியலாக்குவது அரசியல்வாதிகளின் பிரச்சனை..இது வாக்கு வங்கியை கூட்ட ..நிகழ்த்தும் நாடகம்....
"பெண்கள் பாதுகாப்பு நாடகம்"
இதை ஜாதி ரீதியில் அணுகுவது தேவையற்ற செயல்...
ஏன் இத பற்றி பேச மாட்டிங்களா.... ?
இல்ல உங்களுக்கு என்ன நடக்குதுன்னே தெரியலையா..?
#தமிழ்நாடு #அரசியல்

krishna kumar G


Our innovations & discoveries

Dear Indians,

 Our innovations & discoveries ends with by finding out right Schools and Colleges for our children's ..
(even we are incapable to find out right bride and groom-dependant)
(We have been trapped - by some mysterious system)

Krishna Kumar G


Reliance 4G to Jio life money has been sucked

உங்களுக்கு சொல்லாமல் விட்டது
நான் இதுவரை (until August 12th 2016)
Reliance 3G netconnect + Rs 999, 25 GB, 28 days
தற்போது (September 1 ,2016)
Reliance 4G (not jio) Rs 999 , 10 GB , 28 days.
Same is Jio Rs 999 , 10 GB , hotspot 20 GB, night free (2 to 5 am) 28 days.
Here were we can get this hotspot ....? million dollar question .
Actually I've been ruined .. I was using 25 GB until Aug from now they allot only 10 GB ....for the same price .. little different is its 4G connection.
i'm also using BSNL ,Airtel to compensate it ...........
and doing chotta pack recharges to others Aircel and Vodafones..
Everybody lives by destroying my money .........
in the name of spectrum.


Friday, September 2, 2016

Young Indians come out and Change the future

China will be the next Global marketing leader after this G20 summit .
China's infrastructure is rapidly growing .
They will attract the investors even from India ..
China is also investing in India .
So ultimately now we can't go a war with China .
China may become the deciding factor in Asia.
What we have to do......?
We have to still talk more about caste,religion and something like that.
We have to favour all the tenders and projects to the friendly companies who provide large funds to the ruling government .
According to the world we Indians are from 3rd world ...workers and Slaves.
(you have been used because you are in H1B .
that's the slave's number .)
We younger generation have to change the future of India ...
or we have to be a modern slave to their innovations and intellectual properties .

Krishna Kumar G


Value added Home Cooking

வீட்டில் சமைக்கும்போது சிறு சிறு மதிப்பு கூட்டுதல் செய்யுறதும் ஒருவகை தந்திர யுக்கிதிதான்....
குழந்தைகள் (பெரிய (30 வயதுவரை) குழந்தைகள்) சாப்பிட விரும்பாத நல்ல உணவுகளை வேறுவிதமாக சிறு மாற்றம் செய்து சிறிது சுவையும் மணமும் கூட்டி....சாப்பிட வைப்பது ... சமையல் செய்போரின் தனி சிறப்பு ,,,,,.

to be continued..........


Thursday, September 1, 2016

Remove your WiFi Password during disaster time

ஏதாவது இயற்க்கை பேரிடர் நிகழ்ந்தால்
அந்த இடத்தில் நீங்கள் நலமாக வசிக்கும் பட்சத்தில்.
உங்களிடம் உள்ள Wifi password பாஸ்வோர்ட்களை நீக்கி விடுங்கள்.. (இயல்பு நிலை வரை - குறைந்தது ஒரு வாரம்)
இது நீங்கள் செய்யும் சிறு உதவியாக இருக்கும்.
(சமிபத்திய இத்தாலி பேரிடரில் - இதை மக்கள் பின்பற்றினார்கள்)

If you were completely safe after any natural calamities or any disaster ,Please take away/Remove your WiFi passwords ,
Let others use it for free .
At least for one week .
This will be a little help by you at that time.
#Earthquake #Tsunami #Cyclone #floods #TerrorAttacks #Disaster


காலியாகும் விளயாட்டு மைதானங்கள்

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வார விடுமுறைகளில் பொது விளையாட்டு மைதானங்களில் கடைசியாக கிரிக்கெட்டாவது விளையாடிய கடைசி தலைமுறை இருந்தது...
தற்போது மைதானங்கள் ஆண்டு விடுமுறைக்கு மட்டுமே பயன்படுத்தபட்டு வருகிறது..
தற்போதைய தலைமுறை மைதானங்களில் விளையாடுவதையே தவிர்க்கிறார்கள்....
தெருக்களில் கூட அவர்கள் விளியாடுவதை பார்ப்பது அரிதாகிவிட்டது...
ஒருபுறம் பள்ளிகளிலவது விளையாடுகிறார்கள் என்று சந்தோசமாக நினைத்து கொள்ள வேண்டியது தான்
மறுபுறம் ........................
வீட்டிலே  கிடக்கிறார்கள் வெளியே  அவர்கள்  வருவதில்லை... வைட்டமின் டி, குறைபாடு  வர  கூடும் .

பிள்ளைகள்  வெயிலில்  ஓடி  விளையாட  வேண்டும்... அதற்க்கான  சுழலை  பெற்றோர்கள்  ஏற்படுத்த  வேண்டும்.


குழந்தைகளின் உலகம் - பகுதி - 1

சந்தோஷமான சூழலே குழந்தைகளின்
அறிவை வளர்க்கும் தருணங்களாக
அமையுமாம்....
இது தற்போதுள்ள இந்திய குடும்ப அமைப்புகளில் சாத்தியமா...?

தொடர்ந்து  பேசுவோம்....
Krishna Kumar G