Wednesday, August 3, 2016

வெளிநாட்டில் புலி உள்நாட்டில் எலி

நம்ம பசங்க எப்புடின்ன
இங்க இருக்கும்போது அமைதியா இருப்பானுங்க...
அப்புடியே கிளம்பி வெளிநாட்டுக்கு போன பிறகு...
அங்க இருக்கிற உதவாத மத சங்கம், ஜாதி சங்கம் , இன சங்கம்ன்னு இப்படி ஏகபட்ட சங்கம் இருக்குல அதுல ஏதாவது ஒண்ணுல சேர்ந்து புதுசு புதுசா கத்துப்பானுங்க...
கத்துகிட்டு நம்ம நாட்டு எதிரா நிம்மதியை கெடுக்குற மாதுரி வேலையை இணையதளம் வழியா செய்ய ஆரம்பிப்பானுங்க.... அதுவும் வெவரமா செய்வானுங்க .
பெரும்பாலும் போலி இணையதள கணக்குகளை பயன்படுத்துவாங்க.
இதுக்கு அந்த நாட்டுல கிடைக்கிற ஓசி wifi யை பையன் படுத்துவானுங்க...
இவனுங்களால மத கலவரம்,சாதி கலவரம், இன கலவரம்.... நம்ம நாட்டுல அரங்கேறும்...
தப்பான ஆளை ஆதரிச்சி மணி கணக்கா சமுக வலைதளத்துல பதிவுகளை போடுவானுங்க....
போட்டது யாருடான்னு பார்த்தா வெளிநாட்டுல இருந்து வருற போலி கணக்கா இருக்கும்.
நல்லவங்க போடுற பதிவுக்கு அசிங்க அசிங்கமா மிரட்டல் கமெண்ட் போடுவானுங்க...
இவனுங்க பெரிய குரூப்பா நெட்வொர்க்கா ஒரு அமைப்பா செயல் படுவானுங்க...
இவனுங்க அந்த நாட்டுல வேலை செய்யுற காலம் முடிஞ்சி தாய் நாடு திரும்பும் போது ....
இவனுக கிறுக்கு செயல்பாட்டை அங்கே கிழட்டி வச்சிட்டு வந்துடுவானுங்க...
இங்க வந்த பிறகு ஒண்ணுமே தெரியாதது போல அமைதியா இருப்பானுங்க...
எந்த வம்பு தும்புக்கும் போக மாட்டானுங்க...
இணையதளத்துல இவனுங்க நடவடிக்கையே குறைஞ்சிடும்...
இங்க காசு கொடுத்து தான் இணைத்தளம் பயன்படுத்த முடியும்... (இது இவனுங்களுக்கு பிடிக்காத ஒரு விசியம்)
அதுமட்டுமில்லாமல் இங்க அதுமாதுரி பதிவு போட்ட நம்ம எங்க மாட்டிப்போமோன்னு பயம் வேற இருக்கும்...
வெளிநாட்டுல இருக்கும் போதும் பின்பற்ற தொடங்கின அமைப்பு தலைமையை இங்கே பார்த்து தங்கள் ஆதரவை தெரிவிக்க தவறவே மாட்டாங்க...
வெளிநாட்டுல அவங்களுக்கு ஆதரவா செயல்படுறத பற்றி பெருமையா அவுங்க கிட்ட சொல்லி பொலம்பி தான் கஷ்ட்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அந்த அமைப்புகளுக்கு நன்கொடையாய் கொட்டி தீர்ப்பானுங்க..
இதை பெருமையா வேற நினைப்பானுங்க...
திரும்பவும் வெளிநாட்டுக்கு போனபிறகு இணையதளத்துல தங்கள் கடமையை / சேவையை ஆற்ற தொடங்கிடுவானுங்க.
-------------------------------------------------------------------
நீங்க யாரவது இது மாதுரி இருந்தா கொஞ்சம் சிந்திச்சி பாருங்க....
நம்ம நாட்டுக்கு எதிராக சமுக ஒற்றுமைக்கு எதிராக நீங்க செய்ற காரியங்கள் சரியான்னு..
இல்லை நான் இப்படிதான் இருப்பேன்னு நீங்க சொன்னா..
அது உங்க இஷ்ட்டம்...
--------------------------------------------------------------------

நீங்க இருக்கிற எந்த நாடும் சாதாரண நாடுகள் கிடையாது
இந்தியாவை போல் மன்னித்துவிட../

இணையதள குற்றங்களுக்கு
அவுங்க கண்காணிப்பே வேறு மாதுரி இருக்கும்

Krishna Kumar G