Monday, August 29, 2016

இந்த முஞ்சிக்கேல்லாம்

இந்த முஞ்சிக்கேல்லாம்
மிகவும் கஷ்ட்டப்படுற குடும்பம்
அவங்களே தேடி வந்து நல்ல படிச்ச பொண்ணு தராங்க ..
இவரு பெரிய பருப்பாட்டாம் ..பொண்ண புடிக்கலைன்னு சொல்லுறாரு..

இந்த முஞ்சிக்கேல்லாம் பொண்ணு கொடுக்குறதே பெரிய விசியம்....
ஆனா இவன் அந்த பொண்ண பாத்துட்டு புடிக்கலைன்னு சொல்லுறான் .....பாரான்..
இவன்னெல்லாம் எங்க உறுப்புட போறான்.......

ஆமாங்க, இந்த முஞ்சிக்கேல்லாம் பொண்ணு கொடுக்குறதே பெரிய விசியம்தான்....
இல்லன்னு சொல்லல...
இப்படி எதுக்கும் உதவாத என்னை நம்பி இந்த பொண்ணு வந்துட்டு .....நாளைக்கு கஷ்ட்டப்பட கூடாது ... (இதுவரைக்கும் வறுமையில் கஷ்ட்டப்பட்டு படிச்ச பொண்ணு இனிமே கஷ்ட்டப்பட கூடாது), அதுனால தான் நான்  இந்த பொண்ண புடிக்கலைன்னு சொல்லிட்டேன்..

அந்த பொண்ணுக்கு வேற நல்ல மாப்பிளை என்னைவிட அழகா வசதியா கிடைக்கணும்.... அந்த பொண்ணு நல்லா இருக்கணும்....சந்தோசமா இருக்கணும்

நான் பொண்ணுனா நாக்க தொங்க போட்டுக்கிட்டு அலையுற நாய் தாங்க .... ஆனா எனக்குள்ளேயும் மனசு இருக்குங்க ...அதுல கொஞ்சம் ஈராமும் இருக்குங்க...


என்ன எனக்குன்னு ஒரு பொண்ணு இந்த உலகத்துல இல்லாமலைய போய்டுவா....
நான் பாத்துக்கிறேன்

Krish