Wednesday, August 31, 2016

திரும்ப திரும்ப பாடும் தேஞ்சி போன ரெகார்ட்

தேஞ்சி போன ரெகார்ட் மாதுரி
திரும்ப திரும்ப ஒரே விசியத்தை நண்பர்களிடம்  சொல்லி கொண்டே  இருக்கிறோம்.....அவர்களும் அதை சளைக்காமல் எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்காமல் கேட்டுகொண்டே இருக்கிறார்கள்....
இதில் நமக்கு என்ன சுகம் இருக்கிறதோ...? அல்லது ஆறுதல் இருக்கிறதோ..? தெரியவில்லை.

இன்று இதை சோதித்து பார்த்தேன்..
ஏற்க்கனவே பலமுறை சொல்லிய கதையை... இன்று மீண்டும் சொல்லி பார்த்தேன்..
உடனே அவன் இது ஏற்க்கனவே சொல்லப்பட்ட கதை ஆனால் இது மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது என்று தெரிந்து கொண்டாலும்....மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் அதை கவனமாக இரசித்து கேட்டுக்கொண்டு இருந்தான்....

இடையே கதையை சற்று மாற்றி சொல்ல தொடங்கினேன்.....
சுதாரித்து கொண்டவன்....
ஏய்  தப்பா சொல்லாத....என்று ....... மீதி கதையை அவன் சொல்லி முடித்தான் மிக சரியாக....

உனக்கு எப்படி இது தெரியும் என்று கேள்வி எழுப்பினேன்..

இதே கதையை எத்தனை வாட்டி என்கிட்ட சொல்லுவா...

என்று  மிக விழிப்பாக இருப்பதை போல நடந்து கொண்டான்...

என் மனதுக்குள் தோன்றிய சோதனை முடிந்தது

முடிவுகள்
எனக்குள்
தற்போது  உங்களுக்குள் அதை செலுத்துகிறேன்.

ஒரே விசியத்தை திருமா திரும்ப சொல்லுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்....

வேண்டாம் அதை சளைக்காமல் இரசிக்க ஆட்கள் இருக்கிறார்கள்.

நாம் இருக்கும் வரை நம்மளால் இந்த கதைகள் சொல்லப்படுகிறது...
நாம் இல்லாதபோது அவர்களால் அது நினைவுட்டப்படுகிறது..

அது எப்பொழுது அழியும் என்பது யாருக்கும் தெரியாது..

(யாராலும் எந்த ஒரு விசியத்தையும் இங்கு மறைத்து வைக்கவும் முடியாது....)

Krishna Kumar G