Saturday, August 20, 2016

சமுகவளைதலத்தில் என் கருத்துகள்

சமுகவளைதலத்தில் :
நான் ஒரு வட்டத்துகுள்ளாக சிக்கிகொண்டிருக்கிறேன்...

நான் பகிரும் கருத்துகள்

கொஞ்சம்  கடுமையானதாக இருக்கிறது என்பது எனக்கு தெரியும்..
அதை அதன் உண்மை தன்மையுடன் சொல்லுவதால்..
என் நண்பர்களை கூட அது கோபப்படுத்துகிறது

சிலர் அதற்க்கு விருப்பம் தெரிவிக்கிறார்கள்...பலர் அமைதிகாக்கிறார்கள்...
சிலர்  Unfollow Unfriend Block செய்கிறார்கள்.
அதை பற்றி எனக்கு கவலை இல்லை..

ஒரு பதிவை போட்டுவிட்டு ...அதன் பின்விளைவுகள் எப்படி இருக்கும் என்று சற்று யோசித்து பார்ப்பேன்.

அப்படி ஒன்றும் பெரிதாக ஒன்றும் ஆகாது... அப்படி நிகழ்ந்தாலும் அதை நாம் சமாளிப்போம்
என்று தோன்றும்...
இருந்தாலும் சற்று பயம் கொஞ்சம் இருக்கும்..

பிறகு இதே கருத்தை ..வேறு நபர்கள் அவர்ரவர் பாணிகளில் மீண்டும் பதிவிடும்போது...

தனிமனித கருத்தில் இருந்து
அது ஒரு பெரும் நிகழ்வாக மாறிவிடுகிறது...

சில நேரங்களில் எனக்கு தெரிந்த தெரியாத தகவல்களை  தேடி பிடித்து தருகிறேன்.

முதலில் நான் சொல்லிய கருத்துதானே இது
ஏன் என் பெயரை அவர்கள் பினையவில்லை என்று நான் அவர்களிடம் கேட்க்க வேண்டியதில்லை...
அது அவர் விருப்பம்...

ஆனால் நான் கூறிய சில செய்திகள் கருத்துகள் ...ஒரு நாளேடுகளில்லோ வார ஏடுகளிலோ சற்று வேறுவிதமாக
எழுத்துகள் கூட்டியோ குறித்தோ  பார்க்கும்போது..

இருக்கட்டும் நமக்குள் ஏதோ ஒரு கருப்பு ஆடு ஒளிந்திருக்கிறது...
துரோகத்திலும்
அது நமக்கு ஒரு   நன்மை செய்கிறது..

என் பதிவை அதிகம் ஷேர் செய்து மக்களிடம் முழுமையாக சென்றடைய என்னால் செய்ய முடியாது...

ஆனால் அதை அவர்கள் சுலபமாக செய்கிறார்கள்..
என்  வேலையை  சுலபமாக்குகிரார்கள்

என் கருத்துகளை எனக்கே தெரியாமல் பறித்து சற்று திரித்து பகிர்ந்துகொள்கிறார்கள்...

அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

இதன்மூலம் அந்த நிகழ்வுகள் நின்றுவிட கூடாது ...அது தொடரவேண்டும்....

(உண்மையில் எனக்கு தமிழ் மொழியை பிழை இல்லாமல் சரியாக கூட எழுத தெரியாது..... இருந்தாலும் இங்கே தமிழில் பதிவிடுகிறேன் ...பிழை இருந்தால் பிறகு திருத்திகொள்கிறேன்..)

Krishna Kumar G