Monday, August 15, 2016

புதிர் பிள்ளை

எப்பவும் நண்பர்கள் / தெரிந்தவர்கள் வீடுகளில்தான் இப்படி சொல்லி பாத்திருக்கேன்....
தம்பி என் பயனுக்கு ஒரு பொண்ணு பாருப்பா .... இவன சிக்கிரம் கல்யாணம் பண்ண சொல்லுப்பான்னு சொல்லி நம்ம நிலைமை தெரிஞ்சும் நம்மை ஒரு நொடி நீ யாருடா என்று என்னையே எனக்குள் சிந்திக்க வைத்துவிடுவார்கள்...
இன்று இது கொஞ்சம் வித்தியாசமாய் இருந்தது..

ஊரில் ஒரு விசேஷத்துக்கு சென்றிருந்தேன் ...
நமக்கு ஏன்டா வம்பு என்று ஒரு ஓரமாய் அமர்ந்திருந்தேன்
ஒரு வயதான அம்மா வந்தார்கள்
பாசத்தில் என் கன்னத்தை கிள்ளி முத்தம்மிட்டார்கள்...
எனக்கு யார் என்றே தெரியவில்லை ...ஒருவேளை என்னை அவர்களுக்கு தெரிந்திருக்கும் என்ற நினைப்பில் அவர்கள் சொல்வதை கேட்டுகொண்டிருந்தேன்..

அந்தம்மா தம்பி என் பொண்ணுக்கு ஒரு மாப்பிளை பாருப்பா என்று பேசி முடித்தார்கள்...

எனக்கு திக்கென்று தூக்கிபோட்டது.....
ஒருவேளை இவங்க நம்மல டார்கெட் பண்றாங்களோ ...
இல்லை அப்படி இருக்க வைப்பே இல்லை என்று உள்ளுக்குள் எண்ணிக்கொண்டு...
உங்க பொண்ணு என்ன பண்ணுது ... என்ன வயசு,புகைப்படம் இருக்கா என்று கேட்க தொடங்கிவிட்டேன்...

நல்ல மாப்பிள்ளை வந்தா சொல்லுறேன் என்று முடித்துக்கொண்டு மவுனியானேன்...

என் மவுனத்தை ஊற்றுபார்த்த அந்த அம்மா ........
நல்ல மாப்பிளை பாருப்பா என்று சொல்லிவிட்டு
என்னை விட்டு சென்றுவிட்டார்கள்...

++++++++++++
மனிதர்கள் என்னை சோதிக்க வாய்ப்பே இல்லை என்ற சிந்தனை என்னை சூழ்ந்துகொண்டது.....

வாகனத்தில் வீடு திரும்பும்வரை அந்த பொண்ணுக்கு யார் பொருத்தமாக இருப்பார் என்று யோசித்துக்கொண்டே வந்தேன்...

வீடு வந்தபிறகு என் சிந்தனை மாறியது ....
இந்த காலத்தில் ஒரு மூன்றாவது மனிதன் பார்க்கும் மாப்பிளையை பெண்கள் மனம் முடிப்பார்களா...?

வீணாக நாம் அலைய  தேவை இல்லை ...
யாராவது நம் கண்ணில் தென்பட்டால் சொல்லுவோம்...

இல்லையென்றால் விட்டுவிடுவோம்.....
===================
நம் கதையே இங்கு சந்தி சிரிக்கிறது.....
என்ற எண்ணத்தில்..
தொடர்கிறேன்

Krishna Kumar G