Wednesday, August 10, 2016

போக்கில்லா போக்குவரத்து கழகம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து பேருந்துகள் எல்லாம் மிக மோசமாக உள்ளது...
கதவு திறக்க கை பிடி இல்லாமல்
கதவுகள் இல்லாமல்
படிகள் இல்லாமல்
ஜன்னல் இல்லாமல்
இருக்கை இல்லாமல் (ஓட்டுனர் இருக்கை கூட)
Side Mirror உடைந்து.
எப்போது ஓடும் பேருந்து இரண்டாக பிளக்கும் என்ற பயமே வர தொடங்குகிற அளவுக்கு பேருந்துகள் இயக்கபடுகிறது.
இதில் SETC தான் மோசமான பேருந்து..டிக்கெட் விலைதான் அதிகம் ... ஒரு இருக்காய் கூட சரியாக இருப்பதில்லை
இப்போதெல்லாம் புதுவையிலிருந்து சென்னைக்கு நெடுநேரம் காத்திருந்து புதுவை மாநில பேருந்தில் தான் பயணிக்கிறேன் . அந்த பேருந்துகள் தரமானதாகவும் ...குறித்த நேரத்துக்கு செல்வதாகவும் உள்ளது..
சென்னை to புதுவை தமிழ்நாடு போக்குவரத்து பேருந்துகள் ECRல் நான்கு மணிநேரம் ஓட்டுகிறார்கள்...
இவர்கள் குறிக்கோளே இடையே வரும் உணவு நிறுத்தம்தான்....பயணிகள் அனைவருக்கும் பசி எடுத்துவிடும்...
VOLVO AC பஸ் வேகமாக சென்றாலும் அதில் இருக்கைகள் சரியாக இல்லை...
பஸ் பிரேக் பிடித்தாலோ அல்லது வேகமாக திரும்பினாலோ
தினமும் யாராவது கிழே விழுந்து வாருவார்கள்.இதில்  வயதானவர்களை கூட்டி  செல்வது  மிக கடினம்.

இவங்க வண்டலூர்லையும் பேருந்து நிலையம் கட்ட மாட்டாங்க ....ECR லையும் புதுசா கட்ட மாட்டாங்க...
(ECR-சோளிங்கநல்லூர் வாட்டர் tank, கலைஞர் சாலை அருகே பேருந்து நிலையம் வரும் என்று நினைத்த இடத்தில்... இப்போது இரண்டுபுறமும் 200 Villa அப்பார்ட்மெண்ட் வந்துவிட்டது,இப்போது இடமில்லை-கோவளத்தை தாண்டிதான் கட்ட இடம்கிடைக்கும்)

சென்னை  போக்குவரத்து  நெரிசலில் தவிப்பதால்  வெளி ஊர்களில்  இருந்து  வரும்  பேருந்துகள்  சென்னை  உள்ளே  நுழைந்ததும்  ஊர்ந்து  செல்லும்  நிலை  வருகிறது.. நகருக்கு  வெளியே பேருந்து  நிலையம்  அமைக்கும்  பட்சத்தில்  இது  தவிர்க்க  படும்.

மக்கள் படுற கஷ்டம் கொஞ்ச நஞ்சம் அல்ல..
Krishna Kumar G