Saturday, August 20, 2016

இந்திய பெண்களே 33 போதாது

இந்திய பெண்கள், குறிப்பாக தமிழக பெண்கள் ஏதோ இப்போதுதான் (golf) கோல்ப் விளையாடுகிறார்கள் குதிரை பந்தயத்தில் கலந்து கொள்கிறார்கள்
என்ற எண்ணம் முதலில் எனக்கும் இருந்தது...
(உடனே ஜான்சிராணி காலத்துக்கு சென்று விடாதிர்கள்-ஆங்கில ஆட்சியில் இருந்து தொடருங்கள்)
14 ஆண்டுகளுக்கு முன்பு அந்த அறியாமையின் எண்ணம் என்னிடமிருந்து தகர்த்தெறியப்பட்டது.
கபாலி படத்தில் ரஜினி தன் மனைவியை தேடி சென்னையில் ஒரு அரண்மனை போன்ற வீட்டுக்கு வருகிறார் அல்லவே.... அந்த வீடுதான்...இதற்க்கு பதில் தந்தது..
அது அடையாரில் Greenways சாலையில் உள்ள செட்டியார் palace, தற்போது செட்டிநாடு பள்ளிக்கூடம்,
அந்த வீட்டில் இருக்கும் புகைப்படங்கள், அங்கே குவிந்து கிடக்கும் சுழல் கோப்பைகள் , எல்லாம் இதற்க்கு பதில் சொல்லும்,
அங்கே இருக்கும் புகைப்படங்களை பார்த்தால் அசந்து போய்விடுவோம்...
அவர்கள் குடும்ப பெண்கள் golf விளையாடுவது குதிரை பந்தயத்தில் பரிசு பெறுவது என ஏராளமான புகைப்படங்கள் இருக்கும், இவை அனைத்தும் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு எடுக்கப்பட்ட கருப்பு வெள்ளை புகைப்படங்கள்..
இவர்கள் வசதிபடைத்தவர்கள் ஆகையால் இது சாத்தியம்.. என்று நம் மனதில் தோன்றலாம்...
ஆமாம் அது உண்மைதான்..
ஏழ்மை கூட பெண்  விடுதலைக்கு தடையாக இருந்திருக்கிறது என்பது உண்மைதான்.
ஆனால் இன்று அப்படியல்ல ...கடந்த அரை நுற்றாண்டில் கல்வி பெண்களின் ஏழ்மையை உடைத்திருக்கிறது... சமுகத்தில் பெருமாற்றம் நிகழ்ந்திருக்கிறது....
பெண்கள் எப்போதோ விடுதலை அடைந்து விட்டார்கள்
அதை அவர்கள் இன்னும் உணரவில்லை...அது தனிக்கதை.
நாட்டை சீர் அமைப்பதிலும் சமுக மாற்றத்திலும் அவர்களின் பங்கு பெருமளவில் தேவைப்படுகிறது,
இடஒதுக்கீடு  33% சதவிகிதத்தை அவர்களால் இன்னும் முழுமையாக பெற முடியவில்லை...
என்பது வியப்பாக உள்ளது...
இதை சொல்லி சொல்லியே நான்கு ஆட்சிகள் மத்தியில் உருண்டோடி விட்டது..
வீட்டில் ஆட்சி செய்பவர்களால் நாட்டில் ஆட்சி செய்வதில் சில சிக்கல்கள் இருப்பதை இது காட்டுகிறது...
அது என்ன சிக்கல் அதை எப்படி களைவது என்பதில் கவனத்தை செலுத்த வேண்டும்...
அங்கே மாற்றம் நிகழ்ந்தால் தான் நாட்டில் மற்ற துறைகளில் மாற்றம் நிகழும்..
------------------- ஏதோ சொல்லவந்து ஏதோ சொல்லிக்கிட்டு இருக்கேன்-----------------
புரிஞ்சா சரி....
Krishna Kumar G