Monday, August 8, 2016

இந்திய விவசாயி 2016

இது விவசாயம் செய்வது பற்றிய  பதிவு  அல்ல..
விவசாயிகள் பிரிவு பற்றிய  பகிர்வு

விவசாயிகளை நான் முன்று  விதமாக  பிரிக்கிறேன்.....
விவசாயம் என்றாலே நமக்கு  மண் சார்ந்த  தொழில்  தான்  நினைவுக்கு  வரும்.
விவசாயம்  என்பது  பல துறை  சார்ந்தது.. இதில் பிரதானமாக விளங்குவது மண் செடி கோடி மரம் சார்ந்த  தொழிலே..
ஒருங்கிணைந்த  விவசாயம் செய்வது சால  சிறந்தது பெரும் பலனை இரட்டிப்பாக  செய்யும்..
விவசாய  முறைகளை  விட்டுவிட்டு  விவசாய நண்பர்களை பற்றி பார்ப்போம்.

முன்று  விதமான  விவசாயிகள் என் பார்வைக்கு தெரிகிறார்கள்.

விவசாய முதலாளி
விவசாய நடுநிலையாளி
விவசாய தொழிலாளி

விவசாய முதலாளி :- (நல்ல நிலம்) நான்கு ஏக்கருக்கு மேல் வைத்துள்ளவர்களை விவசாய முதலாளிகள் என்று  தான்  சொல்ல வேண்டும், இவர்களுக்கு பொதுவாக வீடு தோட்டம் tractor, கார் , மாற்று தொழில்  என ஏக போகமாக  வாழ்பவர்கள்.



விவசாய நடுநிலையாளி : (நல்ல நிலம்) ஒரு ஏக்கரில்லிருந்து அதிக பட்சம் நான்கு ஏக்கருக்கு  குள்  வைத்துள்ளவர் ,சுமாரான  வாழ்க்கை வாழும் நடுத்தர  குடும்ப வர்க்கத்தை சேர்ந்தவர்.


விவசாய தொழிலாளி : ஒரு ஏக்கருக்கும் குறைவாகவும் அல்லது நிலம் இல்லாமலும் இருப்பவர், ஆனால் தொடர்ந்து விவசாய தொழிலில் இடுபடுபவர்.விவசாயத் தொழிலை மட்டும் நம்பியே குடும்பத்தை நடத்துபவர்..
பரம ஏழையாக  இருப்பவர் ..விவசாய தொழில் இல்லாத  நாட்களில் ஒருவேளை உணவுக்கே திண்டாடுபவர்.



இந்த முன்று விதமான சொந்த நிலம் மற்றும் பொருளாதார வேறுபாடுகள்  இவர்களுக்குள் இருந்தாலும் நாம் இவர்களை பொதுவாக விவசாயி என்றே அழைக்கிறோம்..

நான்காவதாக ஒருவர்  இருக்கிறார் இவரை நாம் பெரும்பாலும் நாம் அடையாள  படுத்துவதில்லை , நிலம் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்பவர். இவரை இந்த பட்டியலுக்குள் தற்போது சேர்க்க வேண்டாம்..
இவரை சேர்த்தால் இது பெரும் குழப்பத்தை  ஏற்படுத்தும்.. ஏன் என்றால் நிலம் குத்தைக்கு எடுப்பவர் அந்த முன்று விதமான விவசாயிகளில் ஒருவராகத்தான் இருக்க கூடும் அல்லது ...விவசாய துறை சாரதவராகவும் இருக்க கூடும்.

ஐந்தாவதாக ஒரு நபர் இருக்கிறார் அவர்தான் விவசாய பொருட்களை கொள்முதல் செய்பவர் இவர்தான் கொள்ளை லாபம் பார்ப்பவர்.. இவர் சில நேரங்களில் விவசாய முதலாளியாக கூட இருக்க வாய்ப்பு உண்டு..
அரிசி ஆலை சக்கரை ஆலை சொந்தகாரராகவோ அல்லது பங்குதாரர்களாகவோ இருக்க வாய்ப்பு உண்டு.

விவசாய முதலாளி பெரும் பணக்காராக இருப்பவர் அவர் வசிக்கும் ஊர்ளில் மிகவும் மதிப்பும் மரியாதையும் நிரைந்தவர்.. பெரும்பாலும் அரசியல் செல்வாக்கும் அல்லது அரசியலில் இடுபடுபவராகவும் இருக்க கூடியவர்..
இவர்களது குடும்பத்தினர்கள் பெர்ம்பாலும் நகரத்திலோ அல்லது வெளிநாடுகளிலோ நாகரிகமாக சுகமாக வசிக்க கூடியவர்களாகவும்.பெரும் படிப்பு படித்திருப்பார்களாகவும்.சொந்த ஊருக்கு வருடத்தில் முக்கியாமான விசேஷ நாட்களில் வந்து செல்பவர்களாகவும் இருப்ப்பார்கள்.அரசின் அனைத்து துறைகளிலும் இவர்களுக்கு சலாம் போடா ஆட்கள் இருக்கும்.வங்கியில் கை நீட்டினால் கடன் தருவார்கள்.அதை அடைக்க மாற்று வழிகளையும் அதிகாரிகள் சொல்லித்தருவார்கள்.


விவசாய நடுநிலையாளிகள் நேரடியாக இல்லாமல் மறைமுகமாக
விவசாய முதலாளிலியை சார்ந்தே வாழ்பவர்கள் .விவசாயமாகட்டும் அரசியலாகட்டும் அவர்கள் காட்டும் திசையை நோக்கி செல்ல கூடியவர்கள்..இவர்கள் அவர்களை போல் ஆகா வேண்டும் என்று பெரும் ஏக்கத்தோடு வாழ்பவர்கள். இவர்கள் பிள்ளைகள் முதல்  தலைமுறை பட்டதாரிகளாகவும் இருப்பவர்கள்.நகர சுழலுக்கு மெல்ல நகர்ந்து செல்பவர்கள்.
பெண்பிள்ளைகளை திருமணம் செய்து கொடுக்க  காலமெல்லாம் காசு சேர்ப்பவர்கள்.வாங்கிய விவசாய கடனை அடைப்பதும் அதை அரசு தள்ளுபடி செய்ய சொல்லி போராடுவதும்,அதை அரசு செய்ய தவறும்போது இவர்கள் கடனாளியாகவும் வாய்ப்பு உண்டு அல்லது நிலத்தை விற்று வேறு வேலைக்கு செல்லவும் வாய்ப்புகள் உண்டு.


விவசாய தொழிலாளிகள்  அந்த இருவரிடமும் கூலியாக வேலை செய்பவர்கள்.இவர்கள் பெரும் கனவு காணவே உரிமை இழந்தவர்கள்,விவசாய வேலை இல்லாத நாட்களில் நூறுநாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்து அந்த வருட நாட்களில் பசியை விரட்டுபவர்கள்.இவர்கள் பிள்ளைகள் பெரும்பாலும் அரசு பள்ளிகள் அரசு கல்லூரிகள் என அரசை நம்பியே காலம் கடத்துபவர்கள், மது பழக்கம் இவர்கள் வாழ்வில் ஒரு இருளாக விளங்குகிறது.
இவர்களால் விவசாய கடன் பெற இயலாது காரணம் சொந்தமாக நிலம் கிடையாது.இவர்கள் அரசியலில் விவசாய முதலாளிக்கு கொடி பிடிக்கவே பயன்படுவார்கள்.ஆனால் இவர்கள் இல்லையேல் விவசாய தொழிலே இல்லை.

அரசு மானியம் கடன் என்று பல்வேறு முறைகளில் விவசாய தொழிலை ஊக்குவிக்கிறது.
இருந்தபோதும்  இந்த தொழிலை விட்டுவிட்டு வேறு தொழிலுக்கு செல்லவே இவர்கள் விரும்புகிறார்கள் ..காரணம் குறைந்த கூலி/சம்பளம் மற்றும் இந்த தொழிலில் ஒட்டுமொத்தமாக ஏற்படுகிற பெரும் இழப்பே இதற்க்கு காரணம்\..

மறுபுறம் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி சரியா முறையாக தொழில் செய்து முன்னேருபவர்களும் இருக்கிறார்கள்.. ஒருவகையில் பார்த்தால் விவசாயம் கொள்ளை லாபம் தருகிற தொழிலாகவும் இருக்கிறது..அந்த தொழில் நுட்பம் இங்கே பலருக்கு தெரிவதில்லை ...
தெரிந்தவர்கள் பெரும்பாலும் விவசாயம் செய்வதில்லை.

நான் மேலே கூறிய விவசாய பிரிவுகள் கால சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும் , அதே போல் நில அளவுகள் வெவ்வேறு பகுதிக்கும் வேறு படும்.
இயற்கை பெர்ரிடர் போன்ற காலங்களில் அரசு  தரும் இழப்பிடுகள் போதாமல் போகவும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. 


தொடர்ந்து அரசால் தரப்படும் மானியமும் விவசாய கடன் தள்ளுபடியுமே தான் இந்த தொழிலை அழிவில் இருந்து காக்கிறது .

இதற்க்கு நவீன கட்டமைப்பை உருவாக்க வேண்டும் அதாவது தொழில் முறையில் இயற்க்கை சார்ந்த நவீனம் புகுத்துதல் (மாற்று சக்தி) மற்றும் உற்பத்தி செயப்படும் பொருட்களின் வியாபார கட்டமைப்பை உருவாக்குவது  (Direct Sale) அதன் மூலம் விவசாயிகளுக்கு நேரடி லாபம் என சில மாற்றங்களை செய்ய வேண்டும்.

Krishna Kumar G