Wednesday, August 31, 2016

Free Trade Zone - India

Special Economic Zone (SEZ)
Export-processing zone (EPZ)
Free trade zone (FTZ)
FTZ இந்தியாவுல எங்க இருக்கு....
எவளோ தான் தேடினாலும் SEZ தான் காட்டுது...
இல்லன்னா EPZ தான் காட்டுது..
FTZ இங்க இருக்கா இல்லையா...?
யாராவது சொல்லுங்க..


திரும்ப திரும்ப பாடும் தேஞ்சி போன ரெகார்ட்

தேஞ்சி போன ரெகார்ட் மாதுரி
திரும்ப திரும்ப ஒரே விசியத்தை நண்பர்களிடம்  சொல்லி கொண்டே  இருக்கிறோம்.....அவர்களும் அதை சளைக்காமல் எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்காமல் கேட்டுகொண்டே இருக்கிறார்கள்....
இதில் நமக்கு என்ன சுகம் இருக்கிறதோ...? அல்லது ஆறுதல் இருக்கிறதோ..? தெரியவில்லை.

இன்று இதை சோதித்து பார்த்தேன்..
ஏற்க்கனவே பலமுறை சொல்லிய கதையை... இன்று மீண்டும் சொல்லி பார்த்தேன்..
உடனே அவன் இது ஏற்க்கனவே சொல்லப்பட்ட கதை ஆனால் இது மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது என்று தெரிந்து கொண்டாலும்....மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் அதை கவனமாக இரசித்து கேட்டுக்கொண்டு இருந்தான்....

இடையே கதையை சற்று மாற்றி சொல்ல தொடங்கினேன்.....
சுதாரித்து கொண்டவன்....
ஏய்  தப்பா சொல்லாத....என்று ....... மீதி கதையை அவன் சொல்லி முடித்தான் மிக சரியாக....

உனக்கு எப்படி இது தெரியும் என்று கேள்வி எழுப்பினேன்..

இதே கதையை எத்தனை வாட்டி என்கிட்ட சொல்லுவா...

என்று  மிக விழிப்பாக இருப்பதை போல நடந்து கொண்டான்...

என் மனதுக்குள் தோன்றிய சோதனை முடிந்தது

முடிவுகள்
எனக்குள்
தற்போது  உங்களுக்குள் அதை செலுத்துகிறேன்.

ஒரே விசியத்தை திருமா திரும்ப சொல்லுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்....

வேண்டாம் அதை சளைக்காமல் இரசிக்க ஆட்கள் இருக்கிறார்கள்.

நாம் இருக்கும் வரை நம்மளால் இந்த கதைகள் சொல்லப்படுகிறது...
நாம் இல்லாதபோது அவர்களால் அது நினைவுட்டப்படுகிறது..

அது எப்பொழுது அழியும் என்பது யாருக்கும் தெரியாது..

(யாராலும் எந்த ஒரு விசியத்தையும் இங்கு மறைத்து வைக்கவும் முடியாது....)

Krishna Kumar G





திரும்ப திரும்ப சொல்லப்படும் கதைகள்

தேஞ்சி போன ரெகார்ட் மாதுரி
திரும்ப திரும்ப ஒரே விசியத்தை நண்பர்களிடம் சொல்லி கொண்டே இருக்கிறோம்.....அவர்களும் அதை சளைக்காமல் எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்காமல் கேட்டுகொண்டே இருக்கிறார்கள்....
இதில் நமக்கு என்ன சுகம் இருக்கிறதோ...? அல்லது ஆறுதல் இருக்கிறதோ..? தெரியவில்லை.
இன்று இதை சோதித்து பார்த்தேன்..
ஏற்க்கனவே பலமுறை சொல்லிய கதையை... இன்று மீண்டும் சொல்லி பார்த்தேன்..
உடனே அவன் இது ஏற்க்கனவே சொல்லப்பட்ட கதை ஆனால் இது மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது என்று தெரிந்து கொண்டாலும்....மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் அதை கவனமாக இரசித்து கேட்டுக்கொண்டு இருந்தான்....
இடையே கதையை சற்று மாற்றி சொல்ல தொடங்கினேன்.....
சுதாரித்து கொண்டவன்....
ஏய் தப்பா சொல்லாத....என்று ....... மீதி கதையை அவன் சொல்லி முடித்தான் மிக சரியாக....
உனக்கு எப்படி இது தெரியும் என்று கேள்வி எழுப்பினேன்..
இதே கதையை எத்தனை வாட்டி என்கிட்ட சொல்லுவா...
என்று மிக விழிப்பாக இருப்பதை போல நடந்து கொண்டான்...
என் மனதுக்குள் தோன்றிய சோதனை முடிந்தது
முடிவுகள்
எனக்குள்
தற்போது உங்களுக்குள் அதை செலுத்துகிறேன்.
ஒரே விசியத்தை திருமா திரும்ப சொல்லுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்....
வேண்டாம் அதை சளைக்காமல் இரசிக்க ஆட்கள் இருக்கிறார்கள்.
நாம் இருக்கும் வரை நம்மளால் இந்த கதைகள் சொல்லப்படுகிறது...
நாம் இல்லாதபோது அவர்களால் அது நினைவுட்டப்படுகிறது..
அது எப்பொழுது அழியும் என்பது யாருக்கும் தெரியாது..
( யாராலும் எந்த ஒரு விசியத்தையும் இங்கு மறைத்து வைக்கவும் முடியாது....)
Krishna Kumar G


எழும்பும் நீர் ஆணை விழும் வாழ்வணை

ஒரு அணை கட்டனும்னா... லோக்கல் விஎஒ , தாசில்தார்,கலெக்டர்,ஊராட்சி தலைவர், மாநில அமைச்சர்கள்,முதல் அமைச்சர்,முதல் அமைச்சர் தலைமையில் கூடிய அனைத்து கட்சி
மற்றும் அமைச்சரவை கூட்டம்..
மத்திய சுற்றுசூழல்,மத்திய நீர் வள ,மத்திய வனத்துறை,மத்திய ஊரக வளர்ச்சி ,மின்துறை, பிரதமர்.
மற்றும் பிரதமர் தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டம்..
இப்படி இவங்க எல்லாரும் இணைந்துதான் ஒரு அணையை கட்ட திட்டம் போடுறாங்க.. இந்த திட்டம் போடவே சுமார் குறைந்தது முன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை ஆகும்..
பிறகு பொதுப்பணித்துறை டெண்டர் மூலம் ஆணை கட்டப்படுகிறது ... ஆணையின் அளவை பொறுத்து இதற்க்கு சுமார் ஐந்து ஆண்டுகள் வரை ஆகும்...
கட்டி முடித்த பின் அணைக்கு சுண்ணாம்பு பெயிண்ட் பூசுவார்கள்... பூச்சு வேலை முடிந்து அணைக்கு பெயர் பலகை எழுதுவார்கள்...
அப்போதுதான் தமிழக மக்களை விழித்து கொள்ளும்படி
அரசியல் தந்திரவாதிகள் அழைப்பார்கள்...
உடனே மக்கள் கொடியை பிடித்துகொண்டு தெருவில் இறங்கி போராடுவார்கள்...
உச்ச நீதிமன்றத்தில் வேடிக்கையாக ஆயுள் காலம் முழுவதும் வழக்காடுவார்கள்,
பிறகு ஆணை அப்போதைய பிரதமரால் இனிதே திறந்து வைக்கப்படும்
அந்த விழாவை தமிழக அரசியல்வாதிகள் புறக்கணித்து எதிர்ப்பார்கள்
ஆனால் அதற்க்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பே பிரதமர் தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் ..அணைக்கு ஒப்புதல் கையெழுத்து போட்டுவிட்டு லம்ப்பாக அமௌன்ட் வாங்கி நான்கு கல்லூரிகள் கட்டி இருப்பார்கள்..
அதில் விவசாயின் பிள்ளைகள் டோனேசன் கொடுத்து சீட் வாங்கி படித்து வருவார்கள்.
என்னைப்போல் முட்டாள் மக்கள்
இறுதியில் நீர்யின்றி
வளமிழந்து
ஏமாந்து போவார்கள்
Krishna Kumar G


Monday, August 29, 2016

இந்த முஞ்சிக்கேல்லாம்

இந்த முஞ்சிக்கேல்லாம்
மிகவும் கஷ்ட்டப்படுற குடும்பம்
அவங்களே தேடி வந்து நல்ல படிச்ச பொண்ணு தராங்க ..
இவரு பெரிய பருப்பாட்டாம் ..பொண்ண புடிக்கலைன்னு சொல்லுறாரு..

இந்த முஞ்சிக்கேல்லாம் பொண்ணு கொடுக்குறதே பெரிய விசியம்....
ஆனா இவன் அந்த பொண்ண பாத்துட்டு புடிக்கலைன்னு சொல்லுறான் .....பாரான்..
இவன்னெல்லாம் எங்க உறுப்புட போறான்.......

ஆமாங்க, இந்த முஞ்சிக்கேல்லாம் பொண்ணு கொடுக்குறதே பெரிய விசியம்தான்....
இல்லன்னு சொல்லல...
இப்படி எதுக்கும் உதவாத என்னை நம்பி இந்த பொண்ணு வந்துட்டு .....நாளைக்கு கஷ்ட்டப்பட கூடாது ... (இதுவரைக்கும் வறுமையில் கஷ்ட்டப்பட்டு படிச்ச பொண்ணு இனிமே கஷ்ட்டப்பட கூடாது), அதுனால தான் நான்  இந்த பொண்ண புடிக்கலைன்னு சொல்லிட்டேன்..

அந்த பொண்ணுக்கு வேற நல்ல மாப்பிளை என்னைவிட அழகா வசதியா கிடைக்கணும்.... அந்த பொண்ணு நல்லா இருக்கணும்....சந்தோசமா இருக்கணும்

நான் பொண்ணுனா நாக்க தொங்க போட்டுக்கிட்டு அலையுற நாய் தாங்க .... ஆனா எனக்குள்ளேயும் மனசு இருக்குங்க ...அதுல கொஞ்சம் ஈராமும் இருக்குங்க...


என்ன எனக்குன்னு ஒரு பொண்ணு இந்த உலகத்துல இல்லாமலைய போய்டுவா....
நான் பாத்துக்கிறேன்

Krish

Friday, August 26, 2016

Indian ruling system has been totally failed due to increase in certain activities 2016

Indian system has been failed in the increase of caste discrimination and increase in religious intolerance .

Very soon India will face a revolution, According to my guess it will be in the next two years,
This is going to be big and it will reflect worldwide.This will change the world.

Increase of bribe in the government system law system also has been failed , There is no right justice in law firms it has been failed,

Lets Talk

Continue..........

Krishna Kumar G


Saturday, August 20, 2016

மொழிகலன்கள் - தமிழ் மொழி யாருக்கு சொந்தம்

தமிழ்  மொழி யாருக்கு சொந்தம் ?
உண்மையில் தமிழ் மொழி யாருக்கும் சொநதமில்லை.

தமிழ் மொழி காலம் கடந்தது
யுகங்கள் கடந்தது
கண்டங்கள் கடந்தது

இந்த இடத்தில்தான் தோன்றியது
இவர்கள்தான் முதன் முதலில் பேசினார்கள் ஆகையால் இவர்கள்தான் சொந்தக்காரர்கள் என்று கணிக்க முடியாத மொழி..

இன்று நாம் பேசுகிற தமிழ் மொழிக்கும்
ஆதியில் பேசிய தமிழ் மொழிக்கும் மிக பெரிய வேறுபாடு இருக்கிறது..

காலத்துக்கு ஏற்றாற்போல் தன்னை உறுமற்றிகொண்டிருக்கிறது....
ஆனாலும் அது தன் சாரத்தை இழக்கவில்லை. அது இன்னும் தன் பயணத்தை தொடர்கிறது..

நான் தமிழன் , ஏன் ஆதி தமிழன் என்று சொன்னால் கூட இந்த தமிழ் மொழிக்கு சொந்தக்காரர்களாக இருக்க முடியாது...

சாதி அடிப்படையில் கூட இந்த மொழியை சொந்தம் கொண்டாட முடியாது...

ஏன்னெனில் இந்த மொழியில் சாதி இல்லை ,மதமில்லை,
இந்த மொழியை ஏற்றுகொண்டவர்களிடம் தான் இது இருக்கிறது..

இந்த மொழி தன்னிகரற்ற தனித்தன்மை யுடையதாய் இருக்கிறது.

இதுவரை தமிழ்  மொழியில் படைக்கபெற்ற இலக்கியங்களை தாண்டி இன்னும் படைக்கபெறாத  இலக்கியங்கள் பல இதன்னுள் முழ்கி கிடக்கிறது.

இந்த மொழியை கற்றுக்கொண்டு அல்லது  பழகிக்கொண்டு ஏற்று கொண்டவர்கள் தான் இந்த மொழிக்கு சொந்தகாரர்களாக மாறுகிறார்கள்..
இந்த மொழியின் உறவை தன் சந்ததிக்கு செலுத்துகிறார்கள்..

இப்படியாகவே இது தொடர்ந்து பயணித்திருக்கிறது...

என்னை ஆதி தமிழன் என்கிறார்கள் தற்போதைய தமிழ் பேசும் மக்கள்
இது என்  சாதியின்  அடிப்படையில் இதை இவர்கள் கணிக்கிறார்கள், இது  அவர்களுக்கு  எட்டிய  தகவல் (அறிவு) அவ்வளவே, இந்த  மொழி  சாதிகள் உருவாகா முன்பே காலம் கடந்தது என்பதுதான் உண்மை, நம்  அறிவுக்கு  எட்டியவரை  இவர்கள்  அவர்கள்  இந்த  மொழியை  பேசி  இருக்கலாம்  என்று  தான்  இதுவரை  கணித்துள்ளார்கள்.இது  அவர்கள்  கணிப்புகளுக்கெல்லாம்  அப்பாற்பட்ட  மொழி.

என் மொழி தமிழ்  மொழி

Krishna Kumar G




இந்திய பெண்களே 33 போதாது

இந்திய பெண்கள், குறிப்பாக தமிழக பெண்கள் ஏதோ இப்போதுதான் (golf) கோல்ப் விளையாடுகிறார்கள் குதிரை பந்தயத்தில் கலந்து கொள்கிறார்கள்
என்ற எண்ணம் முதலில் எனக்கும் இருந்தது...
(உடனே ஜான்சிராணி காலத்துக்கு சென்று விடாதிர்கள்-ஆங்கில ஆட்சியில் இருந்து தொடருங்கள்)
14 ஆண்டுகளுக்கு முன்பு அந்த அறியாமையின் எண்ணம் என்னிடமிருந்து தகர்த்தெறியப்பட்டது.
கபாலி படத்தில் ரஜினி தன் மனைவியை தேடி சென்னையில் ஒரு அரண்மனை போன்ற வீட்டுக்கு வருகிறார் அல்லவே.... அந்த வீடுதான்...இதற்க்கு பதில் தந்தது..
அது அடையாரில் Greenways சாலையில் உள்ள செட்டியார் palace, தற்போது செட்டிநாடு பள்ளிக்கூடம்,
அந்த வீட்டில் இருக்கும் புகைப்படங்கள், அங்கே குவிந்து கிடக்கும் சுழல் கோப்பைகள் , எல்லாம் இதற்க்கு பதில் சொல்லும்,
அங்கே இருக்கும் புகைப்படங்களை பார்த்தால் அசந்து போய்விடுவோம்...
அவர்கள் குடும்ப பெண்கள் golf விளையாடுவது குதிரை பந்தயத்தில் பரிசு பெறுவது என ஏராளமான புகைப்படங்கள் இருக்கும், இவை அனைத்தும் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு எடுக்கப்பட்ட கருப்பு வெள்ளை புகைப்படங்கள்..
இவர்கள் வசதிபடைத்தவர்கள் ஆகையால் இது சாத்தியம்.. என்று நம் மனதில் தோன்றலாம்...
ஆமாம் அது உண்மைதான்..
ஏழ்மை கூட பெண்  விடுதலைக்கு தடையாக இருந்திருக்கிறது என்பது உண்மைதான்.
ஆனால் இன்று அப்படியல்ல ...கடந்த அரை நுற்றாண்டில் கல்வி பெண்களின் ஏழ்மையை உடைத்திருக்கிறது... சமுகத்தில் பெருமாற்றம் நிகழ்ந்திருக்கிறது....
பெண்கள் எப்போதோ விடுதலை அடைந்து விட்டார்கள்
அதை அவர்கள் இன்னும் உணரவில்லை...அது தனிக்கதை.
நாட்டை சீர் அமைப்பதிலும் சமுக மாற்றத்திலும் அவர்களின் பங்கு பெருமளவில் தேவைப்படுகிறது,
இடஒதுக்கீடு  33% சதவிகிதத்தை அவர்களால் இன்னும் முழுமையாக பெற முடியவில்லை...
என்பது வியப்பாக உள்ளது...
இதை சொல்லி சொல்லியே நான்கு ஆட்சிகள் மத்தியில் உருண்டோடி விட்டது..
வீட்டில் ஆட்சி செய்பவர்களால் நாட்டில் ஆட்சி செய்வதில் சில சிக்கல்கள் இருப்பதை இது காட்டுகிறது...
அது என்ன சிக்கல் அதை எப்படி களைவது என்பதில் கவனத்தை செலுத்த வேண்டும்...
அங்கே மாற்றம் நிகழ்ந்தால் தான் நாட்டில் மற்ற துறைகளில் மாற்றம் நிகழும்..
------------------- ஏதோ சொல்லவந்து ஏதோ சொல்லிக்கிட்டு இருக்கேன்-----------------
புரிஞ்சா சரி....
Krishna Kumar G


சமுகவளைதலத்தில் என் கருத்துகள்

சமுகவளைதலத்தில் :
நான் ஒரு வட்டத்துகுள்ளாக சிக்கிகொண்டிருக்கிறேன்...

நான் பகிரும் கருத்துகள்

கொஞ்சம்  கடுமையானதாக இருக்கிறது என்பது எனக்கு தெரியும்..
அதை அதன் உண்மை தன்மையுடன் சொல்லுவதால்..
என் நண்பர்களை கூட அது கோபப்படுத்துகிறது

சிலர் அதற்க்கு விருப்பம் தெரிவிக்கிறார்கள்...பலர் அமைதிகாக்கிறார்கள்...
சிலர்  Unfollow Unfriend Block செய்கிறார்கள்.
அதை பற்றி எனக்கு கவலை இல்லை..

ஒரு பதிவை போட்டுவிட்டு ...அதன் பின்விளைவுகள் எப்படி இருக்கும் என்று சற்று யோசித்து பார்ப்பேன்.

அப்படி ஒன்றும் பெரிதாக ஒன்றும் ஆகாது... அப்படி நிகழ்ந்தாலும் அதை நாம் சமாளிப்போம்
என்று தோன்றும்...
இருந்தாலும் சற்று பயம் கொஞ்சம் இருக்கும்..

பிறகு இதே கருத்தை ..வேறு நபர்கள் அவர்ரவர் பாணிகளில் மீண்டும் பதிவிடும்போது...

தனிமனித கருத்தில் இருந்து
அது ஒரு பெரும் நிகழ்வாக மாறிவிடுகிறது...

சில நேரங்களில் எனக்கு தெரிந்த தெரியாத தகவல்களை  தேடி பிடித்து தருகிறேன்.

முதலில் நான் சொல்லிய கருத்துதானே இது
ஏன் என் பெயரை அவர்கள் பினையவில்லை என்று நான் அவர்களிடம் கேட்க்க வேண்டியதில்லை...
அது அவர் விருப்பம்...

ஆனால் நான் கூறிய சில செய்திகள் கருத்துகள் ...ஒரு நாளேடுகளில்லோ வார ஏடுகளிலோ சற்று வேறுவிதமாக
எழுத்துகள் கூட்டியோ குறித்தோ  பார்க்கும்போது..

இருக்கட்டும் நமக்குள் ஏதோ ஒரு கருப்பு ஆடு ஒளிந்திருக்கிறது...
துரோகத்திலும்
அது நமக்கு ஒரு   நன்மை செய்கிறது..

என் பதிவை அதிகம் ஷேர் செய்து மக்களிடம் முழுமையாக சென்றடைய என்னால் செய்ய முடியாது...

ஆனால் அதை அவர்கள் சுலபமாக செய்கிறார்கள்..
என்  வேலையை  சுலபமாக்குகிரார்கள்

என் கருத்துகளை எனக்கே தெரியாமல் பறித்து சற்று திரித்து பகிர்ந்துகொள்கிறார்கள்...

அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

இதன்மூலம் அந்த நிகழ்வுகள் நின்றுவிட கூடாது ...அது தொடரவேண்டும்....

(உண்மையில் எனக்கு தமிழ் மொழியை பிழை இல்லாமல் சரியாக கூட எழுத தெரியாது..... இருந்தாலும் இங்கே தமிழில் பதிவிடுகிறேன் ...பிழை இருந்தால் பிறகு திருத்திகொள்கிறேன்..)

Krishna Kumar G


Friday, August 19, 2016

Google apps for work promotion codes 20% offer

https://goo.gl/X9oT9Z  Google apps for work

Your existing Google Apps 20% off promotion codes* will expire on 1​5 September 2​0​1​6 – here are two new ones, Use it and  please send to your friends :
 
A6UGXXGQXFG6QXT

 
Q6XPK6X43J9N44R

  You'll keep receiving more promotion codes https://goo.gl/X9oT9Z



Google Apps for Work.

Here are three reasons to give it a try:

You can get custom email and more with Gmail for work.
It helps employees get things done while collaborating more quickly and efficiently.
Millions of businesses large and small have already made the switch.


Indians are racist 2016

Dear other Nations/Countries .Embassies, Institutions ,Industries,Companies,Organisations...
If Indians came to your place.
Please verify your students or staffs social network pages/blogs/webpages before you recruit or place an order .
Check whether they have made a racist post , hate speeches .on it.
Whoever maybe
Just Determine them from that and Terminate them immediately .
no mean to have them right up there if you take risk they will spoil your whole nation.

Only give them up Tourist Visas and chase them away if their valid visa period is over.

Indians are racist they don't treat their country people well. They have higher caste and lower caste among people and behaving like inhuman . They will do the same job wherever they go.They don't have real humanity . They ill treat people with caste differences . Particularly higher caste people ill treat lower caste people in all mean ways .They are the racist.

I'm Indian and I've have been abused by caste discrimination by my own nationalities .
This people won't change until world rejects them

No one in this world will ill treat their own country people like Indians were doing to their same nation people.They carry caste all along with them were ever they travel around this world.

Krishna Kumar G


Thursday, August 18, 2016

1945 World changed Indians never

1945 :
Adolf Hitler Died: April 30, 1945
End of Axis started 8 May 1945. (EU)
Atomic bombings of Hiroshima and Nagasaki : August 6, 1945
Subhas Chandra Bose Vanished on : August 18, 1945,
World war 2 ends : September 2, 1945
 World War II 2.5 million Indians participated beyond any other nation
4 million civilians died in the Bengal region killed  by Japanese .
(history forgot)

British Indian Army and INA , there were two different armies in India .
Large people who went for war have been died because of Climate and Starvation than the bullets .

Japanese army killed BIA for not joining INA .

Japanese may captured India

Meanwhile Gandhi was in discussion of caste, religion on Simla conference .

British decided to Leave India

1945 World changed -

Indians never changed
August 1947 they were focusing on partition.

Mountbatten gave partition order on 15 Aug 1947 with freedom
2 million died during partition of IND & PAK.

Independence means you are independent not dependent, no one can dominate you as a ruler .
There is no bondage .

India is still a bondage for communal violence which was triggered from the day of independence

Sources : Organised this from different Wikipedia pages .


Wednesday, August 17, 2016

Facebook Live Videos‬ AI technology Algorithms

நம்ம தான் போஸ்ட்டே போடுவதே இல்லையே ...
நம் மனதை எப்படி பேஸ்புக் படிக்க முடியும்...
நீங்க போஸ்ட் போட்டாலும் சரி லைக் போடாம இருந்தாலும் சரி... மத்தவாங்க போஸ்ட்டை வெறுக்க பாத்தாலும் சரி...
பேஸ்புக் உங்கள் மனதை படித்துவிடும்....
யார் யார் நம் profile லை தொடர்ந்து கவனிக்கிறார்கள் என்பதை கண்காணிக்க சில வழிகள் இருக்கு... அதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் தற்ப்போதில்லை.
லைவ் வீடியோகளில் தொடர்ந்து பறந்து கொண்டிருக்கும் இந்த எமொஜிகள் நம் மனதை திசை திருப்பவே..
அதில் எந்த emoji வரும்போது நாம் லைக் இடுகிறோம் என்பதே ஒரு Algorithm கணக்குதான் .
அதன் மூலம் உங்களை எப்படி வழிநடத்துவது என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள்..
உங்களுக்கு விருப்பமானவர்கள் பதிவு எப்போது உங்கள் திரையில் வர வேண்டும் என்று முடிவு செய்வார்கள் ..அதை நீங்கள் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றாலும் மீண்டும் அதை உங்கள் திரையில் தோன்ற செய்வார்கள்...
அதேபோல் உங்கள் பதிவுகளையும் அவர்களுக்கு அனுப்புவார்கள்...
உங்கள் நட்பு வட்டத்தில் உங்களது மொத்த நண்பர்களில் 7% நபர்களுடைய பதிவுகளை மட்டுமே நீங்கள் காண்பிர்கள், அதன் பிறகு காண்பவை எல்லாம் மற்றவர்கள் இடும் அதிக லைக்குகள் மூலம் பி ரபலம்மாகும் பதிவுகளாக இருக்கும்..
நாம் நினைத்தால் பேஸ்புக் AI technology யை திசை திருப்ப முடியும்...
அதேபோல் அவர்கள் நினைத்தால் நல்ல உறவுகளை பிரிக்கவும் முடியும்...
அவர்கள் உங்கள் அனைத்து நடவடிக்கையும் கண்காணிக்கிறார்கள் .. ‪#‎Facebook‬ ‪#‎Whatsapp‬ ‪#‎Instagram‬  ‪#‎FacebookLiveVideos‬

Facebook is a marketing place ...even you can sell yourself .
I've never seen this as a social networking page
Here world is wider but not closer to the heart.
இவர்களுக்கெல்லாம் தலைவன் ‪#‎Google‬
பொருளாதார அடிப்படையில் என்னை வாழவைத்த தெய்வம்.. அவனை காட்டிகொடுக்க தற்பொழுது..இப்போது மனமில்லை..

இணையத்தில் எப்போதும் ஒருகண்காணிப்பு வட்டத்துக்குள்ளாகவே தான் நாம் இயங்குகின்றோம் என்பதை சொல்லவே இந்த பதிவு..

Krishna Kumar G


Monday, August 15, 2016

புதிர் பிள்ளை

எப்பவும் நண்பர்கள் / தெரிந்தவர்கள் வீடுகளில்தான் இப்படி சொல்லி பாத்திருக்கேன்....
தம்பி என் பயனுக்கு ஒரு பொண்ணு பாருப்பா .... இவன சிக்கிரம் கல்யாணம் பண்ண சொல்லுப்பான்னு சொல்லி நம்ம நிலைமை தெரிஞ்சும் நம்மை ஒரு நொடி நீ யாருடா என்று என்னையே எனக்குள் சிந்திக்க வைத்துவிடுவார்கள்...
இன்று இது கொஞ்சம் வித்தியாசமாய் இருந்தது..

ஊரில் ஒரு விசேஷத்துக்கு சென்றிருந்தேன் ...
நமக்கு ஏன்டா வம்பு என்று ஒரு ஓரமாய் அமர்ந்திருந்தேன்
ஒரு வயதான அம்மா வந்தார்கள்
பாசத்தில் என் கன்னத்தை கிள்ளி முத்தம்மிட்டார்கள்...
எனக்கு யார் என்றே தெரியவில்லை ...ஒருவேளை என்னை அவர்களுக்கு தெரிந்திருக்கும் என்ற நினைப்பில் அவர்கள் சொல்வதை கேட்டுகொண்டிருந்தேன்..

அந்தம்மா தம்பி என் பொண்ணுக்கு ஒரு மாப்பிளை பாருப்பா என்று பேசி முடித்தார்கள்...

எனக்கு திக்கென்று தூக்கிபோட்டது.....
ஒருவேளை இவங்க நம்மல டார்கெட் பண்றாங்களோ ...
இல்லை அப்படி இருக்க வைப்பே இல்லை என்று உள்ளுக்குள் எண்ணிக்கொண்டு...
உங்க பொண்ணு என்ன பண்ணுது ... என்ன வயசு,புகைப்படம் இருக்கா என்று கேட்க தொடங்கிவிட்டேன்...

நல்ல மாப்பிள்ளை வந்தா சொல்லுறேன் என்று முடித்துக்கொண்டு மவுனியானேன்...

என் மவுனத்தை ஊற்றுபார்த்த அந்த அம்மா ........
நல்ல மாப்பிளை பாருப்பா என்று சொல்லிவிட்டு
என்னை விட்டு சென்றுவிட்டார்கள்...

++++++++++++
மனிதர்கள் என்னை சோதிக்க வாய்ப்பே இல்லை என்ற சிந்தனை என்னை சூழ்ந்துகொண்டது.....

வாகனத்தில் வீடு திரும்பும்வரை அந்த பொண்ணுக்கு யார் பொருத்தமாக இருப்பார் என்று யோசித்துக்கொண்டே வந்தேன்...

வீடு வந்தபிறகு என் சிந்தனை மாறியது ....
இந்த காலத்தில் ஒரு மூன்றாவது மனிதன் பார்க்கும் மாப்பிளையை பெண்கள் மனம் முடிப்பார்களா...?

வீணாக நாம் அலைய  தேவை இல்லை ...
யாராவது நம் கண்ணில் தென்பட்டால் சொல்லுவோம்...

இல்லையென்றால் விட்டுவிடுவோம்.....
===================
நம் கதையே இங்கு சந்தி சிரிக்கிறது.....
என்ற எண்ணத்தில்..
தொடர்கிறேன்

Krishna Kumar G


IRCTC வெப்சைட்

#IRCTC வெப்சைட்டில் விளம்பரம் தான் பெரிதாக தெரிகிறது .. உலகிலே மிக கடினமான முறையில் பயண சீட்டு முன் பதிவு செய்யும் ஒரே இணையத்தளம் இதுவாகத்தான் இருக்கும்.... வயதானவர்களின் கண்களுக்கு கண்டடிப்பாக எழுத்துகள் தெரியாது...
நமக்கு ஆயிரம் வழிகளில் வருமானம் வரும்போது இந்த adsense மூலமாக வரும் அந்த அற்ப வருமானம் எதற்கு.
Google adsense crawler இணையதளத்துக்குள் ஊடுருவும் இணையதளத்தின் செயல்பாட்டை கண்காணிக்கும்...
ஒரு அரசு இயந்திரம் இதன் வாயிலாக செயல்படுவது முற்றிலும் தவறான முறையாகும்...
உள்ளூர் விளம்பரங்களை இங்கே நேரடியாக பதிவு செய்ய இயலாது...
அரசே விளம்பரங்களை வாங்கி பதிவிட தனி துறையை digital India மூலம் உருவாக்கிட வேண்டும்.
நான் சொல்வது புரிகிறதா.... ? புரியவில்லையா சரி விடுங்க...
IRTC  Ticket Booking

#DigitalIndia


Thursday, August 11, 2016

வன்மத்தை அழிக்கும் முத்தங்கள்

சமுகவலைதலங்களில் தொடரும் பல வகையான வன்மங்களை எப்படி கட்டுப்படுத்தலாம்.....
இல்லையென்றால்
அதை அதன் போக்கிலே விட்டுவிடுலாமா..
இந்த வன்மம் தற்போது முத்தம் வரை வந்துவிட்டது..,
கடந்த முன்று நாட்களாக அன்பென பகிரப்படும் முத்தத்துக்கு கூட விளக்கம் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.
தமிழ் அன்பர்கள்.
யார் யாருக்கு கொடுக்க வேண்டும் எப்படி கொடுக்க வேண்டும் எப்போது கொடுக்க வேண்டும்
என்றெல்லாம் விளக்கம் கற்ப்பித்து வருகிறார்கள்..
பாவம் இவர்களை ஒரு முத்தங்கள் கூட சந்த்திதிருக்க வாய்ப்பு இல்லை போலும்.
உங்கள் மனதில் உள்ள வன்மங்களை எதிர்காலத்தில் உங்களை எதிர் நோக்கி வரும் முத்தங்களே அதை அழிக்கும். (அழிக்கட்டும்)



Wednesday, August 10, 2016

போக்கில்லா போக்குவரத்து கழகம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து பேருந்துகள் எல்லாம் மிக மோசமாக உள்ளது...
கதவு திறக்க கை பிடி இல்லாமல்
கதவுகள் இல்லாமல்
படிகள் இல்லாமல்
ஜன்னல் இல்லாமல்
இருக்கை இல்லாமல் (ஓட்டுனர் இருக்கை கூட)
Side Mirror உடைந்து.
எப்போது ஓடும் பேருந்து இரண்டாக பிளக்கும் என்ற பயமே வர தொடங்குகிற அளவுக்கு பேருந்துகள் இயக்கபடுகிறது.
இதில் SETC தான் மோசமான பேருந்து..டிக்கெட் விலைதான் அதிகம் ... ஒரு இருக்காய் கூட சரியாக இருப்பதில்லை
இப்போதெல்லாம் புதுவையிலிருந்து சென்னைக்கு நெடுநேரம் காத்திருந்து புதுவை மாநில பேருந்தில் தான் பயணிக்கிறேன் . அந்த பேருந்துகள் தரமானதாகவும் ...குறித்த நேரத்துக்கு செல்வதாகவும் உள்ளது..
சென்னை to புதுவை தமிழ்நாடு போக்குவரத்து பேருந்துகள் ECRல் நான்கு மணிநேரம் ஓட்டுகிறார்கள்...
இவர்கள் குறிக்கோளே இடையே வரும் உணவு நிறுத்தம்தான்....பயணிகள் அனைவருக்கும் பசி எடுத்துவிடும்...
VOLVO AC பஸ் வேகமாக சென்றாலும் அதில் இருக்கைகள் சரியாக இல்லை...
பஸ் பிரேக் பிடித்தாலோ அல்லது வேகமாக திரும்பினாலோ
தினமும் யாராவது கிழே விழுந்து வாருவார்கள்.இதில்  வயதானவர்களை கூட்டி  செல்வது  மிக கடினம்.

இவங்க வண்டலூர்லையும் பேருந்து நிலையம் கட்ட மாட்டாங்க ....ECR லையும் புதுசா கட்ட மாட்டாங்க...
(ECR-சோளிங்கநல்லூர் வாட்டர் tank, கலைஞர் சாலை அருகே பேருந்து நிலையம் வரும் என்று நினைத்த இடத்தில்... இப்போது இரண்டுபுறமும் 200 Villa அப்பார்ட்மெண்ட் வந்துவிட்டது,இப்போது இடமில்லை-கோவளத்தை தாண்டிதான் கட்ட இடம்கிடைக்கும்)

சென்னை  போக்குவரத்து  நெரிசலில் தவிப்பதால்  வெளி ஊர்களில்  இருந்து  வரும்  பேருந்துகள்  சென்னை  உள்ளே  நுழைந்ததும்  ஊர்ந்து  செல்லும்  நிலை  வருகிறது.. நகருக்கு  வெளியே பேருந்து  நிலையம்  அமைக்கும்  பட்சத்தில்  இது  தவிர்க்க  படும்.

மக்கள் படுற கஷ்டம் கொஞ்ச நஞ்சம் அல்ல..
Krishna Kumar G



Monday, August 8, 2016

இந்திய விவசாயி 2016

இது விவசாயம் செய்வது பற்றிய  பதிவு  அல்ல..
விவசாயிகள் பிரிவு பற்றிய  பகிர்வு

விவசாயிகளை நான் முன்று  விதமாக  பிரிக்கிறேன்.....
விவசாயம் என்றாலே நமக்கு  மண் சார்ந்த  தொழில்  தான்  நினைவுக்கு  வரும்.
விவசாயம்  என்பது  பல துறை  சார்ந்தது.. இதில் பிரதானமாக விளங்குவது மண் செடி கோடி மரம் சார்ந்த  தொழிலே..
ஒருங்கிணைந்த  விவசாயம் செய்வது சால  சிறந்தது பெரும் பலனை இரட்டிப்பாக  செய்யும்..
விவசாய  முறைகளை  விட்டுவிட்டு  விவசாய நண்பர்களை பற்றி பார்ப்போம்.

முன்று  விதமான  விவசாயிகள் என் பார்வைக்கு தெரிகிறார்கள்.

விவசாய முதலாளி
விவசாய நடுநிலையாளி
விவசாய தொழிலாளி

விவசாய முதலாளி :- (நல்ல நிலம்) நான்கு ஏக்கருக்கு மேல் வைத்துள்ளவர்களை விவசாய முதலாளிகள் என்று  தான்  சொல்ல வேண்டும், இவர்களுக்கு பொதுவாக வீடு தோட்டம் tractor, கார் , மாற்று தொழில்  என ஏக போகமாக  வாழ்பவர்கள்.



விவசாய நடுநிலையாளி : (நல்ல நிலம்) ஒரு ஏக்கரில்லிருந்து அதிக பட்சம் நான்கு ஏக்கருக்கு  குள்  வைத்துள்ளவர் ,சுமாரான  வாழ்க்கை வாழும் நடுத்தர  குடும்ப வர்க்கத்தை சேர்ந்தவர்.


விவசாய தொழிலாளி : ஒரு ஏக்கருக்கும் குறைவாகவும் அல்லது நிலம் இல்லாமலும் இருப்பவர், ஆனால் தொடர்ந்து விவசாய தொழிலில் இடுபடுபவர்.விவசாயத் தொழிலை மட்டும் நம்பியே குடும்பத்தை நடத்துபவர்..
பரம ஏழையாக  இருப்பவர் ..விவசாய தொழில் இல்லாத  நாட்களில் ஒருவேளை உணவுக்கே திண்டாடுபவர்.



இந்த முன்று விதமான சொந்த நிலம் மற்றும் பொருளாதார வேறுபாடுகள்  இவர்களுக்குள் இருந்தாலும் நாம் இவர்களை பொதுவாக விவசாயி என்றே அழைக்கிறோம்..

நான்காவதாக ஒருவர்  இருக்கிறார் இவரை நாம் பெரும்பாலும் நாம் அடையாள  படுத்துவதில்லை , நிலம் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்பவர். இவரை இந்த பட்டியலுக்குள் தற்போது சேர்க்க வேண்டாம்..
இவரை சேர்த்தால் இது பெரும் குழப்பத்தை  ஏற்படுத்தும்.. ஏன் என்றால் நிலம் குத்தைக்கு எடுப்பவர் அந்த முன்று விதமான விவசாயிகளில் ஒருவராகத்தான் இருக்க கூடும் அல்லது ...விவசாய துறை சாரதவராகவும் இருக்க கூடும்.

ஐந்தாவதாக ஒரு நபர் இருக்கிறார் அவர்தான் விவசாய பொருட்களை கொள்முதல் செய்பவர் இவர்தான் கொள்ளை லாபம் பார்ப்பவர்.. இவர் சில நேரங்களில் விவசாய முதலாளியாக கூட இருக்க வாய்ப்பு உண்டு..
அரிசி ஆலை சக்கரை ஆலை சொந்தகாரராகவோ அல்லது பங்குதாரர்களாகவோ இருக்க வாய்ப்பு உண்டு.

விவசாய முதலாளி பெரும் பணக்காராக இருப்பவர் அவர் வசிக்கும் ஊர்ளில் மிகவும் மதிப்பும் மரியாதையும் நிரைந்தவர்.. பெரும்பாலும் அரசியல் செல்வாக்கும் அல்லது அரசியலில் இடுபடுபவராகவும் இருக்க கூடியவர்..
இவர்களது குடும்பத்தினர்கள் பெர்ம்பாலும் நகரத்திலோ அல்லது வெளிநாடுகளிலோ நாகரிகமாக சுகமாக வசிக்க கூடியவர்களாகவும்.பெரும் படிப்பு படித்திருப்பார்களாகவும்.சொந்த ஊருக்கு வருடத்தில் முக்கியாமான விசேஷ நாட்களில் வந்து செல்பவர்களாகவும் இருப்ப்பார்கள்.அரசின் அனைத்து துறைகளிலும் இவர்களுக்கு சலாம் போடா ஆட்கள் இருக்கும்.வங்கியில் கை நீட்டினால் கடன் தருவார்கள்.அதை அடைக்க மாற்று வழிகளையும் அதிகாரிகள் சொல்லித்தருவார்கள்.


விவசாய நடுநிலையாளிகள் நேரடியாக இல்லாமல் மறைமுகமாக
விவசாய முதலாளிலியை சார்ந்தே வாழ்பவர்கள் .விவசாயமாகட்டும் அரசியலாகட்டும் அவர்கள் காட்டும் திசையை நோக்கி செல்ல கூடியவர்கள்..இவர்கள் அவர்களை போல் ஆகா வேண்டும் என்று பெரும் ஏக்கத்தோடு வாழ்பவர்கள். இவர்கள் பிள்ளைகள் முதல்  தலைமுறை பட்டதாரிகளாகவும் இருப்பவர்கள்.நகர சுழலுக்கு மெல்ல நகர்ந்து செல்பவர்கள்.
பெண்பிள்ளைகளை திருமணம் செய்து கொடுக்க  காலமெல்லாம் காசு சேர்ப்பவர்கள்.வாங்கிய விவசாய கடனை அடைப்பதும் அதை அரசு தள்ளுபடி செய்ய சொல்லி போராடுவதும்,அதை அரசு செய்ய தவறும்போது இவர்கள் கடனாளியாகவும் வாய்ப்பு உண்டு அல்லது நிலத்தை விற்று வேறு வேலைக்கு செல்லவும் வாய்ப்புகள் உண்டு.


விவசாய தொழிலாளிகள்  அந்த இருவரிடமும் கூலியாக வேலை செய்பவர்கள்.இவர்கள் பெரும் கனவு காணவே உரிமை இழந்தவர்கள்,விவசாய வேலை இல்லாத நாட்களில் நூறுநாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்து அந்த வருட நாட்களில் பசியை விரட்டுபவர்கள்.இவர்கள் பிள்ளைகள் பெரும்பாலும் அரசு பள்ளிகள் அரசு கல்லூரிகள் என அரசை நம்பியே காலம் கடத்துபவர்கள், மது பழக்கம் இவர்கள் வாழ்வில் ஒரு இருளாக விளங்குகிறது.
இவர்களால் விவசாய கடன் பெற இயலாது காரணம் சொந்தமாக நிலம் கிடையாது.இவர்கள் அரசியலில் விவசாய முதலாளிக்கு கொடி பிடிக்கவே பயன்படுவார்கள்.ஆனால் இவர்கள் இல்லையேல் விவசாய தொழிலே இல்லை.

அரசு மானியம் கடன் என்று பல்வேறு முறைகளில் விவசாய தொழிலை ஊக்குவிக்கிறது.
இருந்தபோதும்  இந்த தொழிலை விட்டுவிட்டு வேறு தொழிலுக்கு செல்லவே இவர்கள் விரும்புகிறார்கள் ..காரணம் குறைந்த கூலி/சம்பளம் மற்றும் இந்த தொழிலில் ஒட்டுமொத்தமாக ஏற்படுகிற பெரும் இழப்பே இதற்க்கு காரணம்\..

மறுபுறம் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி சரியா முறையாக தொழில் செய்து முன்னேருபவர்களும் இருக்கிறார்கள்.. ஒருவகையில் பார்த்தால் விவசாயம் கொள்ளை லாபம் தருகிற தொழிலாகவும் இருக்கிறது..அந்த தொழில் நுட்பம் இங்கே பலருக்கு தெரிவதில்லை ...
தெரிந்தவர்கள் பெரும்பாலும் விவசாயம் செய்வதில்லை.

நான் மேலே கூறிய விவசாய பிரிவுகள் கால சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும் , அதே போல் நில அளவுகள் வெவ்வேறு பகுதிக்கும் வேறு படும்.
இயற்கை பெர்ரிடர் போன்ற காலங்களில் அரசு  தரும் இழப்பிடுகள் போதாமல் போகவும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. 


தொடர்ந்து அரசால் தரப்படும் மானியமும் விவசாய கடன் தள்ளுபடியுமே தான் இந்த தொழிலை அழிவில் இருந்து காக்கிறது .

இதற்க்கு நவீன கட்டமைப்பை உருவாக்க வேண்டும் அதாவது தொழில் முறையில் இயற்க்கை சார்ந்த நவீனம் புகுத்துதல் (மாற்று சக்தி) மற்றும் உற்பத்தி செயப்படும் பொருட்களின் வியாபார கட்டமைப்பை உருவாக்குவது  (Direct Sale) அதன் மூலம் விவசாயிகளுக்கு நேரடி லாபம் என சில மாற்றங்களை செய்ய வேண்டும்.

Krishna Kumar G








Saturday, August 6, 2016

This news for web designers and website owners

Domain name :Registarant name யை Privacy protection ல hide பண்ணாலும் உண்மையான பெயர் முகவரி தான் கொடுக்கணும்..
போலியான பெயர் முகவரி கொடுக்ககூடாது
கொடுத்தால்...
ஐந்தாண்டுகள் சிறை தண்டனை... இந்தியாவில் இல்லை வெளிநாடுகளில்...
So போலியான பெயர்களில் இந்தியாவில் வலைவீசும் வலைதளங்களுக்கும் அதை போலி பெயரில் நிர்வகிக்கும் இந்தியர்களுக்கும் இந்த செய்தியை எச்சரிக்கையாக பகிர்கிறேன்....
உங்களுடைய போலி கணக்குகளை முடக்கிகொள்ளவும்..
இந்த போலி கணக்குகள் முலம் விளம்பர லாபம் அடையும் பட்ச்சத்தில் பண மோசடி குற்றத்துக்காக 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்குமாம்..
 .
Krishna Kumar G

Thursday, August 4, 2016

ஒருதலை காதல்

ஒருதலை காதல் ஆண்களுக்கு மட்டும் சொந்தமானதா...
வேடிக்கையாக இருக்கிறது...
அப்போ ஒரு பொண்ணு கூட உங்களை காதலிக்க வில்லை என்றுதான் எடுத்துகொள்ள வேண்டும்.
காதல் பொதுவானது.....
ஆண்களை விட பெண்கள்தான் தீவிர காதல் கொள்வார்கள்...
பெர்ம்பாலும் பிடிவாதமாய் இருந்து ஒருதலை காதலில் வெற்றி பெற்றுவிடுவார்கள்....
ஆண்கள் காதலிப்பதால் ஒரு மாற்றமும் இந்த உலகில் நிகழ்ந்ததில்லை.....
பெண்கள் காதலிப்பதால்தான் சாதி ஒழிகிறது மதம் ஒழிகிறது ஆணவம் ஒழிகிறது மாற்றமே நிகழ்கிறது..
புது புது காவியங்களே பிறக்கிறது..
Krishna Kumar G


Wednesday, August 3, 2016

சட்டம் 1000:1

1000:1
நாட்டில் நடக்கும் ஓர் ஆயிரம் குற்றங்களில் வெறும் நாலு குற்றங்கள் மட்டும்தான் வழக்காக பதிவு செய்யப்படுகிறது
அதில் ஒரு வழக்கு தான் முழுமையான தீர்ப்பும் ...முழுமையாக நிறைவேறாத தண்டனையும் கிடைக்கிறது..
மாறாக அனைத்து குற்றங்களும் வழக்காக பதியப்பட்டு தீர்ப்பும் பெற்று தண்டனையும் தரும் பட்சத்தில் ...
இந்திய சிறைசாலைகளில் மனிதர்கள் நிற்க கூட இடம் இருக்காது..
IPC CRPC மற்றும் இதை சார்ந்த சட்ட புத்தகம் சொல்வதைபோல்...ஒவ்வொரு வழக்கும் பதியப்பட்டால் அவ்வளவுதான்...
ஒரு உயர் அரசு அதிகாரியை கை நீட்டி பேசினால் கூட குற்றம் என்று உள்ளது...அதற்கும் தண்டனை வேறு உள்ளது..
சீட்டுக்கட்டு விளையாண்டால் குற்றம்
புருவத்தை மழித்தால் குற்றம்...
பாக்கெட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்க வேண்டும் என்று
இப்படி ஏகப்பட்டது உள்ளது.
இதுலாம் நமக்கு எதுக்கு..
(ஒருவர் மீது வழக்கு போட  வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் எப்படி வேண்டுமென்றாலும் வழக்கு பதியலாம்.)
மேலே சொன்ன சட்டங்கள் மேஜைக்கு மேலே உள்ளது..
தண்டனைகள் மேஜைக்கு கிழே உள்ளது.
மேலே சொன்ன 1000:1
Krishna Kumar G


வெளிநாட்டில் புலி உள்நாட்டில் எலி

நம்ம பசங்க எப்புடின்ன
இங்க இருக்கும்போது அமைதியா இருப்பானுங்க...
அப்புடியே கிளம்பி வெளிநாட்டுக்கு போன பிறகு...
அங்க இருக்கிற உதவாத மத சங்கம், ஜாதி சங்கம் , இன சங்கம்ன்னு இப்படி ஏகபட்ட சங்கம் இருக்குல அதுல ஏதாவது ஒண்ணுல சேர்ந்து புதுசு புதுசா கத்துப்பானுங்க...
கத்துகிட்டு நம்ம நாட்டு எதிரா நிம்மதியை கெடுக்குற மாதுரி வேலையை இணையதளம் வழியா செய்ய ஆரம்பிப்பானுங்க.... அதுவும் வெவரமா செய்வானுங்க .
பெரும்பாலும் போலி இணையதள கணக்குகளை பயன்படுத்துவாங்க.
இதுக்கு அந்த நாட்டுல கிடைக்கிற ஓசி wifi யை பையன் படுத்துவானுங்க...
இவனுங்களால மத கலவரம்,சாதி கலவரம், இன கலவரம்.... நம்ம நாட்டுல அரங்கேறும்...
தப்பான ஆளை ஆதரிச்சி மணி கணக்கா சமுக வலைதளத்துல பதிவுகளை போடுவானுங்க....
போட்டது யாருடான்னு பார்த்தா வெளிநாட்டுல இருந்து வருற போலி கணக்கா இருக்கும்.
நல்லவங்க போடுற பதிவுக்கு அசிங்க அசிங்கமா மிரட்டல் கமெண்ட் போடுவானுங்க...
இவனுங்க பெரிய குரூப்பா நெட்வொர்க்கா ஒரு அமைப்பா செயல் படுவானுங்க...
இவனுங்க அந்த நாட்டுல வேலை செய்யுற காலம் முடிஞ்சி தாய் நாடு திரும்பும் போது ....
இவனுக கிறுக்கு செயல்பாட்டை அங்கே கிழட்டி வச்சிட்டு வந்துடுவானுங்க...
இங்க வந்த பிறகு ஒண்ணுமே தெரியாதது போல அமைதியா இருப்பானுங்க...
எந்த வம்பு தும்புக்கும் போக மாட்டானுங்க...
இணையதளத்துல இவனுங்க நடவடிக்கையே குறைஞ்சிடும்...
இங்க காசு கொடுத்து தான் இணைத்தளம் பயன்படுத்த முடியும்... (இது இவனுங்களுக்கு பிடிக்காத ஒரு விசியம்)
அதுமட்டுமில்லாமல் இங்க அதுமாதுரி பதிவு போட்ட நம்ம எங்க மாட்டிப்போமோன்னு பயம் வேற இருக்கும்...
வெளிநாட்டுல இருக்கும் போதும் பின்பற்ற தொடங்கின அமைப்பு தலைமையை இங்கே பார்த்து தங்கள் ஆதரவை தெரிவிக்க தவறவே மாட்டாங்க...
வெளிநாட்டுல அவங்களுக்கு ஆதரவா செயல்படுறத பற்றி பெருமையா அவுங்க கிட்ட சொல்லி பொலம்பி தான் கஷ்ட்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அந்த அமைப்புகளுக்கு நன்கொடையாய் கொட்டி தீர்ப்பானுங்க..
இதை பெருமையா வேற நினைப்பானுங்க...
திரும்பவும் வெளிநாட்டுக்கு போனபிறகு இணையதளத்துல தங்கள் கடமையை / சேவையை ஆற்ற தொடங்கிடுவானுங்க.
-------------------------------------------------------------------
நீங்க யாரவது இது மாதுரி இருந்தா கொஞ்சம் சிந்திச்சி பாருங்க....
நம்ம நாட்டுக்கு எதிராக சமுக ஒற்றுமைக்கு எதிராக நீங்க செய்ற காரியங்கள் சரியான்னு..
இல்லை நான் இப்படிதான் இருப்பேன்னு நீங்க சொன்னா..
அது உங்க இஷ்ட்டம்...
--------------------------------------------------------------------

நீங்க இருக்கிற எந்த நாடும் சாதாரண நாடுகள் கிடையாது
இந்தியாவை போல் மன்னித்துவிட../

இணையதள குற்றங்களுக்கு
அவுங்க கண்காணிப்பே வேறு மாதுரி இருக்கும்

Krishna Kumar G


மரணம்

மரணம்  நம்  அருகில்தான்  இருக்கிறது
அது நமக்கு தேவை  என்றால் 
நாம் எப்பொழுது வேண்டுமானாலும் எடுத்துகொள்ளலாம்
இல்லை அது தேவை இல்லை என்று நாம் புறக்கணித்தாலும்
அது நம்மை ஒருபோதும்  விடாது
அது நம்மை விட்டும் வைக்காது

மரணம் நிரந்தரம்


பாலின இயலாமை

பழகியவுடன் காதலில்
ஆண்களின்  இயலாமையை தான் முதலில்
பெண்கள் தெரிந்து கொள்வார்கள்

அதை வைத்துதான்
சாதிக்க வைக்கவும்
சோதித்து அழிக்கவும்
செய்வார்கள்

(விளக்கம் : உங்க weak point டை  தான்  முதில்
தெரிந்து  வைத்துகொள்வார்கள்

தனக்கு  தேவை  என்றால்
அதை வைத்தே  அன்பை  பொழிவார்கள்

தனக்கு  தேவை இல்லை  என்றால்
அதை  வைத்தே  வேதனை  புரிவார்கள்

ஆண்களிடம்  இருக்கும்  weak point டே
முதல்  வேலையாக  தங்கள் weak point டை பெண்களிடம்

வெளிப்படையாக  வெளிபடுத்துவது  தான்.)

பெண்களிடம் இயலாமை என்று ஏதுமில்லை
ஏதுமில்லை என்று அன்பாய் புகழ்ந்தாலே போது
அவர்கள் இயலாமை தானே வெளிப்பட்டுவிடும்

(பெண்களிடம் weak point என்பதே அவர்களிடம்  இல்லை 
அதை நாம்தான் ஒருசில விதங்களில் தொடுத்தேடுக்க 
வேண்டும் )




Monday, August 1, 2016

How Gas cylinders price can be determined by company

அரசு மானியம் தருவதால் பெட்ரோல் டீஸல் விலையை மாதம் தோறும் அதை வழங்கும் / விற்கும் நிறுவனமே நிர்னைத்துகொள்ளலாம் என்பது விதி...
சரி...
காஸ் சிலிண்டர் விலையை எப்படி மாதம் தோறும் அந்த நிறுவனமே நிர்னைத்துகொள்ள முடியும்...
காஸ் சிலிண்டரை இங்கு யாரும் தனியார் நிறுவனத்திடம் மானிய விலையில் வாங்க வில்லையே..
முழு தொகையை செலுத்தி தான் வாங்குகிறார்கள்...
பிறகு
மானிய தொகையை அரசிடம் இருந்துதான் நேரடியாக வங்கி கணக்கில் பெறுகிறார்கள்.
இங்கு தனியார் நிறுவனத்துக்கு முழு தொகையும் மக்களால் செலுத்த படுகிறது... இத்துடன் இந்த வியாபாரம்/ஒப்பந்தம் முடிந்துவிடுகிறது ...
பிறகு
அரசு தான் மானிய தொகையீன் அளவை நிரனனையம்
செய்து அதன் பிறகு அந்த தொகையை மக்களின் வங்கி கணக்கில் செலுத்துகிறது பிறகு எப்படி தனியார் நிறுவனம் காஸ் விலையை நிரனனையம் செய்ய முடியும்....
அரசிடமிருந்து அந்த நிறுவனங்கள் எந்த ஒரு மானியமும் பெற வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்கும் பட்சத்தில்
பிறகு இதை எப்படி தனியார் நிறுவனம் காஸ் விலையை நிரனனையம் செய்ய அதிகாரம் பெற முடியும் ....
மானியம் தருபவருக்குதான் அந்த அதிகாரம் இருக்கும்.
இது ஏதோ கோல்மால் வேலையை
போல் தெரிகிறது...
இந்திய
சட்டம் தெரிந்தவர்கள் உன்னிப்பாக கவனிக்கவும்..
பொதுநல வழக்கு தொடுக்க சிறந்த வழக்கு...
Krishna Kumar G