Wednesday, July 20, 2016

நான் கண்ட நல்ல மருத்துவர்

இரவு இரண்டு மணிக்கு admission போட்டதுனால
காலைல வந்து என்ன பாருன்னு அந்த டாக்டர் சொன்னதுனால அவர பாக்க போனேன்...அவர் EMERGENCY வார்டு வாசல்ல நின்னுகிட்டு இருந்தார்...அவர் கிட்ட நெருங்கும்போது ஒரு நர்ஸ் பொண்ணு ஹே ராஜேஷ் குட் மார்னிங்ன்னு சொல்லுச்சி..எனக்கு அப்பத்தான் அவர் பேர் ராஜேஷ்ன்னு தெரியும்....அதைவிட அதிர்ச்சி என்னடா ஒரு நர்ஸ் பொண்ணு டாகடர்ரை பார்த்து பெயர் சொல்லி குப்பிடுதுன்னு நினைச்சேன்...நமக்கு ஏன் இந்த வீண் வம்புன்னு ..
அவர் கிட்டக்க நான் வந்ததும் அவர் அந்த பக்கமா திரும்பி எங்கோ போக பார்த்தார்...
நான் உடனே சார்ன்னு கூப்பிட்டேன் ...அவர் திரும்பி பார்த்து நீங்களா... இப்ப பரவால உங்க அம்மா நார்மல்... என் டுட்டி முடிஞ்சிடுச்சி நான் நைட் வந்து பாக்குறேன்...
இப்படி அவர் சொல்லிக்கிட்டு இருக்கும்போதே...அங்க கூட்டி பெருக்கிகிட்டு வந்த ஒரு வயசான பெண்... ஏன்ப்ப ராஜேஷ்சு ஏதோ உரத்த குரல்ல பேச ஆரம்பிச்சாங்க...
எனக்கு அடுத்த ஷாக் என்னடா ஒரு டாக்டர்ரை பெயர் சொல்லி கூப்பிடுறாங்கன்னு.....
அடுத்து வரிசையா காலைல வேலைக்கு வந்த நர்ஸ் எல்லாமே குட் மார்னிங் ராஜேஷ்ன்னு சொல்ல..
நான் தெகச்சி போயிட்டேன்...அவர் என்கிட்ட நைட் பாக்குறேன்னு சொல்லிட்டு கிளம்பிட்டார்...
அவர நைட் பாக்க ஆர்வம் மிகுதியா கூடிடுச்சி ...
நைட் டுட்டி வந்த அவரு EMERGENCY வார்டுகிட்ட நான் வெயிட் பண்றத பார்த்துட்டு ...என்னைய அவர் கான்சல்டிங் ரூம்க்கு கூட்டிட்டு போனாரு அவர் அந்த ரூம் கதவை திறந்தா ... அந்த ரூம்ல டாக்டர் ரூம்ல இருக்க வேண்டியது ஒண்ணுமே இல்ல... ஒரு சின்ன டேபிள் ரெண்டு Chair ..அவர் Chairக்கு பின்னாடி ஒரு Guitar..அவளோதான்...
அந்த Guitarரை பார்த்ததும் ஒரு நொடி எனக்கு பழைய ஞாபகம் வந்துடிச்சி...
அப்போ நான் பேசும்போது சார் சார்ன்னு அவரை பார்த்து சொல்ல அவர் நீங்க என்ன சார்ன்னு கூப்பிட கூடாது ... என் பெயர் Isac ராஜேஷ் ன்னு சொன்னார்...
என்னால ஆப்படி கூப்பிடவே முடியல மறுபடியும் சார்ன்னு சொல்லிட்டேன்..
அவர் கோபமா... சரி நாளைக்கு பாப்போம்... நீங்க போலாம்ன்னு சொல்லிட்டார்....
அந்த hospitalல பதினைத்து நாள் தங்க வேண்டியதாக இருந்தது ...
ஒவ்வொரு நாளும் அவர்கிட்ட பேசாம இருக்க மாட்டேன்... அவர் நடவடிக்கைய கவனிக்காம இருக்க மாட்டேன்.... அந்த hospitalல எல்லாருமே அவர பெயர் சொல்லித்தான் கூப்பிடுறாங்க.. சின்ன குழைந்தைய இருந்தா கூட...
இப்படி நிறைய இருக்கு
அவரோடைய நடவடிக்கை எல்லாமே வித்த்யாசம்தான்.
அவர் நோய்யாளி கிட்ட பேசுற விதமே தனி..style
ஒரு drug addictகிட்ட தினமும் ஒரு பாக்கெட் cigarette வாங்கி கொடுத்துதே அவன தன் வழிக்கு கொண்டு வந்தார்..
அவர பார்த்த அசந்து போய்டுவிங்க..செம Gentleman..
இன்னிக்கு வரைக்கும் நான் யாரையும் அது மாதுரி பாக்குல..
மருத்துவர் விசியத்துல என் அளவுகோலே அவர்தான்.
இது ஒரு எட்டு வருசத்துக்கு முன்னாடி நடந்த கதை...

detailல அப்பறம்  சொல்லுறேன்..
continue .....