Sunday, July 31, 2016

எல்லா சாமியும் நம்ம சாமி தான்

இன்னொரு மதத்தை பற்றி கிண்டல் கேலி செய்யும் முன்பு உன் மதத்தை முழுமையாக தெரிந்து கொண்டு புரிந்து கொண்டும் வரவும்......
அல்லது மற்றவர்களை கிண்டல் கேலி செய்ய சொல்லி உன் மதம் போதித்திருந்தால் தொடர்ந்து அதை செய்யவும். (உன் முகத்தில் நீயே துப்பி கொள்வதற்க்கு சமம்)
அப்படி எந்த மதமும் போதித்ததாக தெரியவில்லை...
...............................................................................
மற்ற மதத்தினர் தவறு செய்வதாக நீங்கள் நினைத்தால்...
ஏன் அப்படி செய்கிறார்கள்....என்று சிறிது ஆராய்ந்து பாருங்கள்...
ஒருவேளை நீங்கள் உங்கள் மதத்தில் செய்வது தான் சரி என்று கருதினால்.
அல்லது உங்களை நீங்கள் புத்திசாலியாக நினைத்தால்
தகுந்த விளக்கத்துடன்
நீங்கள் அவர்களுக்கு போதியுங்கள்,
பிறகு
அவர்கள் உங்கள் விளக்கத்தை ஏற்றுகொள்வதும்
ஏற்றுகொள்ளாததும் அவர்களது விருப்பம்.
மாறாக நான் சொல்வதுதான் சரி , நீங்கள் கேட்டுதான் தீரவேண்டும் என்று விடா பிடியாக நிற்காதிர்கள்
இறுதியில் ஏமாந்து போவீர்கள்.
...............................................................................
சிறு வயதில் இருந்தே
எல்லா சாமியும் நம்ம சாமி தான்....
எல்லாரும் ஒண்ணுதான்னு சொல்லி கொடுத்ததால்
ஆரம்பத்தில் இருந்தே யாரையும் நான் பிரித்து பார்த்ததில்லை......
பிற்காலத்தில் மதங்கள் குறித்து
பகுத்தறிந்து ஆராய்ந்து பார்த்துள்ளேன்..
மதம் மனதோடு தொடர்புடையது...
மதத்தை பிறப்பால் தொடர்வதே தவறு...
மனம் பக்குவப்பட்ட பின் ஏற்றுகொள்வதே மார்க்கம் /மதம்.
பக்குவப்படாத மனங்கள் தர்க்கம் மட்டுமே செய்ய முடியும்.
அவர்களை எந்த மார்க்கமும் / மதமும் ஏற்றுகொள்ளாது.
வீண் பேச்சுகள் எடுபடாது......
...............................................................................
Krishna Kumar G