Friday, July 29, 2016

பொட்டு

பொட்டு - பொட்டு ஒரு அடையாளம்,குறியீடு,அழகு சாதன பொருள்,
குங்கும பொட்டு,சந்தன பொட்டு ,செந்நிற மை பொட்டு, ஸ்டிக்கர் பொட்டு , திஷ்டி பொட்டு...என எத்தனையோ வகை பொட்டு இருக்கிறது..
ஆனால் அந்த பொட்டு என்ற ஒன்று மட்டும் நெற்றி பொட்டில் பொட்டென ஒட்டி கொண்டே தொடர்ந்து வருகிறது..
கண்ணத்தில்,தாடையில்,விழி முடிவில் என பொட்டு முகம் முழுவதும் ஆங்கங்கே தனக்கென ஓர் இடம் பிடித்து கொள்கிறது
முகத்தை தாண்டி பொட்டு
அணிகலனையும் தொட்டு கொள்கிறது
மாங்கல்யப் பொட்டு.
நெற்றி கோட்டின் மேல் பறக்கிறது
புருவத்தின் மத்தியில் வட்டமடிக்கிறது
மார்பிலே தொட்டுக்கொள்கிறது
பாதத்தில் ஒட்டி நிற்கிறது.
அதை இடும் இடம் கோணம் பொறுத்தே தனி தனி அடையாளம் அடைகிறது
சூடிய நபருக்கு வெவ்வேறு அடையாளமும் தருகிறது.
பொட்டின் தன்மை,உறவு நூற்றாண்டுகள் கடந்து நிற்கிறது...
இது எங்கே தொடங்கி இருக்கும்...
தெரியவில்லை
இது எங்கே முடியும்
தெரியவில்லை
தோரயமாக
பிறப்பில் தொடங்கி இறப்பில் முடிகிறதோ...
இல்லை
சிலருக்கு
இடையில் கூட முடிகிறது......
பொட்டு அழிக்கும் நிகழ்வில்
சங்கடமான சடங்கில்
இது பெண் பொட்டு
பொட்டு அழிக்கப்படுவதால் இது இனத்தையும் மதத்தையும் குறுப்பிடும் குறியீடாக இருந்திருக்க வாய்ப்பில்லை.
இருந்திருந்தால் குறியீட்டை இழந்த பெண் எந்த இனத்தையும் மதத்தையும் சேராதவள் என்றாகி இருப்பாள்.
பொட்டு நிகழ்வுகளை குறியீடுகிறது......
வாழ்வில் நிகழும்
ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு குறியீடாகிறது
ஆண் பொட்டு - அழியா பொட்டு இறுதிவரை தொடர்கிறது , காலத்தையும் செயலையும் நிகழ்வுகளையும் குறியீட்டுக்கொண்டே வரும் பொட்டு..
வெற்றி பொட்டு
குருதி பொட்டு - வீர பொட்டு
திஷ்டி பொட்டு - பொதுவான பொட்டு ...பாலினம் கடந்த போட்டு, கருமை பொட்டு.
ஒரு பொட்டு பல கதைகள் சொல்கிறது.
பொட்டில் ஏதோ வசியமும் விசியமும் ஒளிந்து இருக்கிறது...
அதை கூடவும் கூட்டவும் குறைக்கவும் அதனால் முடிகிறது.....
மீதமுள்ள பொட்டுகளை தேடி பிடித்து எனக்கு நானே ஒரு சிந்தனை பொட்டு வைக்க எண்ணுகிறேன்.