Wednesday, July 20, 2016

சாயம் போகும் உன் ஆடை

பொதுவா ஜவுளி கடைகளுக்கு  துணி எடுக்க போகும்போது அம்மா வுடன் அல்லது  குடும்பத்துடன்  செல்லும்  பழக்கம் உடைய பசங்கள்ல நானும் ஒருவன்  எனக்கு  என்ன  உடை  எடுக்கணும்ன்னு தேர்வு  செய்யறதே  என்  அம்மாதான்.. இப்படிதான்  பள்ளி  படிப்பு  முடியும்  வரை  தொடர்ந்தது..

அதன்  பிறகுதான் அம்மா உடை  தேர்வு  செய்யும்  சாயலில்  எனக்கு  பிடிச்ச  ஆடைகள்  தேர்வு  செய்து  எடுக்க  ஆரம்பிச்சேன்.. இல்லன்னா  நண்பர்கள்  தேர்வு  செய்த  ஆடைகளை  உடுத்த  ஆரம்பிச்சேன்.. பெரும்பாலும்  நண்பர்கள்  தேர்வு  செய்யும்  உடைகள்  மிகவும்  அல்ட்ரா  மாடர்ன்னாக அல்லது  சினிமாவில் ஹீரோக்கள் உடுத்தும்  உடையாக  இருக்கும்... அதை  உடுத்தி  கல்லூரில் வலம் வருவது மிகவும்  கூச்சமாக  இருக்கும்...அனைவரும்  உங்களது  உடை உடுத்தி வருவதை வேற்று கிரக வாசி யாரோ வந்தது  போல்  பார்த்தால்  அப்படிதான்  இருக்கும்.அந்த  ஆடைகளை உடுத்தி  வீட்டுக்கு  வந்தால்  அவளோதான் அம்மா என்னடா  டிரஸ் எடுத்து  வச்சி  இருக்கன்னு  கேட்பாங்க....இதுபோல் நண்பர்கள் ஒரு நான்கு முறை உடை  தேர்வு  செய்திருப்பார்கள்..பிறகுதான்  தெரிந்தது  அவர்கள்  நம்மை  சோதனை  எலியாய் பயன்படுத்துகிறார்கள் என்று..
பிறகு  மீண்டும்  நானே  அவ்வப்போது எனக்கு  பிடித்த  உடைகளை வாங்கி  உடுத்த  ஆரம்பிச்சேன்...
அதன்  பிறகு  தோழிகள்  காதலிகள்  என்று  அவர்கள்  உடை  தேர்வு செய்யும் காலம்  என்று ஒன்று  இருந்தது.. இவர்கள்  பெரும்பாலும்  அவர்களுக்கு  பிடித்த  நிறத்தைதான்  தேர்ந்தெடுப்பார்கள் நம் உணர்வுக்கு  மதிப்பளிப்பார்கள்  என்ற  பேச்சுக்கே  வேலை இல்லை. அனால்  உடுத்தும்  உடை  மிக  நன்றாக  இருக்கும்...ஒரு  ராயல்  லூக்  தரும்..எப்போதும்  புது  மாப்பிள்ளை போல்  தோற்றம்  தரும்  உடைகள்  இவர்கள்  தேர்வாக  இருக்கும்.
ஆனால்  அதை  நாம்  எல்லா  நேரங்களிலும்  உடுத்த  போவதில்லை..

பிறகு உடல் இடை கூடியா காலங்களில்  நானே  உடை  எடுக்க  ஆரம்பிச்சேன்
உடை  மிகவும் சாதரணமாக  இருக்க  வேண்டும்  என்பது  முதல் எண்ணமாக  வைத்து கொண்டு  தேர்வு  செய்ய  தொடங்குவேன்.. ஒரு  சில  நிறங்களை  தாண்டி  வேறு  நிறங்களுக்கு  செல்வதை  தவிர்த்தேன்.. கருப்பு  நிறம்  என்றால்  கொள்ளை  இஷ்டம் ஆனால்  அது என்  அம்மாவுக்கு  பிடிக்காது ... அந்த  உடை  சில  மாதங்களில்  கிழிக்கபட்டு  பிடி துணியாக மாறும்..அல்லது  கால்  மிதி துணியாக  மாறும்.. தம்பி  வெள்ளை  சட்டை  போடு வேஸ்ட்டி கட்டுன்னு  பலமுறை  சொன்னாலும்  அது ஒரு  சில  நிகழ்வுகளின்  போது மட்டுமே  அந்த  உடைகளை  உடுத்த  நேரம்  வாய்க்கிறது..பிறகு  அது  பிரோக்களில் பூட்ட பட்டு ஆயுள் காவலில் பாதுகாப்பில் வைக்க  பட்டுவிடும்.

இப்போது  என்  உடல் அமைப்புக்கு  ஏற்றார் போல்  உடை  தேர்வு  செய்கிறேன்..தேர்வு  செய்யும்  உடைகள்  மிகவும்  விலை  மலிவானாதாகவும்  உடுத்துவதற்கு  எளிதனாதாகவும் இருக்கவே  விரும்புகிறேன்..
ஒரு  சில  நேரங்களில் எப்பவாவது மிக விலை  அதிகமான பிராண்டட்  டி-ஷர்ட் வாங்குவேன் அது மட்டுமே  என்  உடல்  அமைப்புக்கு  மிக  கட்சிதமாக பொருந்துகிறது...ஆனால்  விலை  மிக  அதிகம்  என்பதால்  அதை  பெரும்பாலும்  தவிர்த்து  விடுவேன்..அந்த  விலைக்கு  மலிவாக  நாலு  உடை தேர்வு  செய்து  விடுவேன்.
பயணங்களுக்கு ஜீன்ஸ் பென்ட் உடை அல்லது  லோவ்யர் எனப்படும் ஜெர்சி வகையை  சேர்ந்தத ஆடை மிக  பயன்னுள்ளதாக  இருக்கும்..
நம்ம தட்பவெப்ப நிலைக்கு  ஷர்ட்ஸ் மிக முக்கியமாக தேவை  என நான்  கருதுகிறேன்....
உள்ளாடை (பனியன்,ஜட்டி) பத்து வயதில் வெள்ளை  நிறத்தில் போட தொடங்கி பிறகு  படிப்படியாக வண்ண  நிறத்துக்கு உருமாறி,கல்லூரி நாட்களில்  பாக்ஸ்சர் ஜட்டிகளுக்கு மாறி ,  முப்பது வயதுக்கு  பிறகுதான் தெரிந்தது அதிலும் பிராண்டட் உள்ளாடை தான்  மிக சுகமான உள்ளாடை என்று,என்னை பொறுத்தவரை ஆண்கள் உள்ளாடைகள் உடுத்துவது   மிக முக்கியமானது அல்ல என்பது  பிறகுதான் தெரிந்தது.. இது  உடலில்  ஒரு  சில  மாற்றங்கள்  செய்கிறது..இது  ஒரு  சில  பின் விளைவுகளையும் தருகிறது ஏனென்றால்  இது  சரியான வடிவத்தில் வடிவமைக்க படுவதில்லை...குறிப்பாக  ஜட்டிகள் ஆண்களக்கு சரியாக  பொருந்துவதில்லை...போருந்துவதைபோல்  தோற்றத்தை  மட்டுமே  தருகிறது .அதுமட்டுமல்லாமல் உடுத்தி பழகிவிட்டால்தால் அதை  துறக்க நமக்கு  மனம் வருவதில்லை, துறந்தால்  நல்லது  என  நான்  கருதுகிறேன்..என்  உடை  கதைகள்  ஒரு  பக்கம்  இருக்கட்டும்... என்  அம்மாவுக்கு உடல்  நிலை சரி இல்லாத தருணத்தில் இருந்து  ஒரு  ஏழு  எட்டு ஆண்டுகளாக  நான் அவர்களுக்கு  உடை  எடுத்து  வருகிறேன் , அதன்  அனுபவும் பல  வியப்புகள் அடங்கியது  .. அதை  சொல்லவே  இந்த  நெடு  நீள பதிவை  எழுதுகிறேன்..

அம்மாவுக்கு  உடை  தேர்வு  செய்ய  முதலில்  எந்த  கடைக்கு  போவது  என்ற  குழப்பம் வந்தது.. பெரிய  கடைகளுக்கு  சென்றால் கூட்டம்  அதிகமாக  இருக்கும்...அங்கே  போனால்  நம்மை  எல்லாரும்  கவனிப்பார்கள் என்று  வெட்கப்பட்டு கொண்டு ..பேசாமல்  சிறிய  கடையை  தேர்வு  செய்வோம் என்று முதலில்  சிறிய  கடைகளைதான்  தேர்வு  செய்தேன்..சிறிய கடைகளில்  பெரும்பாலும் ஆண்கள் இருப்பார்கள்  அல்லது  சிறிய  பெண்கள்  இருப்பார்கள்... ஆண்கள்  இருந்தால் பிரச்சனை  இல்லை.. சிறிய பெண்கள்  இருந்தால்  பிரச்சனை ... அனுபவம்  குறைவு  என்பதால்  நம்  தேவை  என்ன  என்பாது  அவர்களுக்கு எளிதில்  புரியாது அல்லது புரியவைப்பது கடினம்..... அதேபோல்  அவர்கள்  முகத்தில் சிரிப்பு  குறையாது ..நாம்  உடை  தேர்வு  செய்யும் கேவலமான முறையை  பார்த்து.

இது போல் சிறிய  கடைகளில் வாங்குவது  எளிது  உடை தேர்வு  என்பது ஐந்து  அல்லது  பத்து  நிமிடத்தில்  முடிந்து  விடும், தேர்வு  செய்த  உடையை  அம்மாவிடம்  காட்டும்போதுதான்  தெரியும் ..அவருக்கு  முதலில்  அந்த  நிறம்  பிடிக்காது... உடுத்தி  பார்த்தால்  அளவு  சரியாக  இருக்காது... ஆகையால்  மீண்டும்  கடைக்கு  போய்  உடையை  மாத்திட்டு வா என்பார்கள்... நமக்கு  மீண்டும்  போக  மனமும்  இருக்காது ... அட்ஜஸ்ட் பண்ணி  போட்டுக்கோன்னு  சொல்லிடுவேன்....பிறகு  சண்டை  வரும்...இறுதியாக  அந்த  உடையை  எடுத்து கொண்டு அதை  வாங்கிய  கடைக்கு  மீண்டும் செல்லவே  கூச்சமாக  இருக்கும்.. அதை  கடைகாரரிடம்  எடுத்து  சொல்லி உடையை  மாற்றிய பிறகுதான் நிம்மதி  பெருமுச்சி வரும்... மாற்றி  வந்த  உடை  அம்மாவுக்கு  பொருந்தினாலும் அந்த  உடையின் நிறம் அவருக்கு  மீண்டும் பிடிக்காது..இருந்தாலும்  பிள்ளையை அலைய  விட  கூடாது  என்று  அவர்  அதை  உடுத்தி கொள்வார்...

என் சூழ்நிலை காரணமாக பிறகு  இதுவே தொடர்ந்தது புடவை  தொடங்கி  உள்ளாடை வரை  நானே  வாங்க  நேர்ந்தது.. சிறிய  கடைகளில்  இருந்து பெரிய  கடைகளில் வாங்க  ஆரம்பித்தேன்..

பெரிய கடைகளில் கூட்டம் அலை மோதும்,நாம்  எதிர் பார்த்ததுபோல் பல பெண்கள் மத்தியில் சிக்கி தவிக்கும் ஒரு ஆண் நாம்மாக தான்  இருப்போம்.
உள்ளாடை வாங்குவதே தனி திறமை  வேண்டும் ... உடையீன் அளவு மிக முக்கியம்.அதை விட  முக்கியம்  அதன் நிறமும் அதன் வேலைப்பாடும்..
அந்த டிசைன் நல்லா இல்லை என்றாலும் பிடிக்கவில்லை  என்று  சொல்லி விடுவார்கள்.. (உள்ளாடையில் எதுக்கு டிசைன் பார்க்கிறார்கள் என்று நமக்கு இன்னமும் விளங்கவில்லை)

(அந்த ஏரியா  பக்கம் போகும்போது ... சைஸ் சரியாய் தெரியலைன்னு சொல்லி பாருங்க....அவங்க பதில்... செம காமடியா இருக்கும்... கூட்டத்துல யாரையாவது காட்டி அவங்கள மாதுரி இருப்பாங்களா இல்ல இவங்கள மாதுரி இருப்பாங்களான்னு காட்டி..நம்மல தேர்வு செய்ய வைப்பாங்க ... தேர்வு செஞ்ச பிறகு ... அவங்க  கிட்ட போய் ..அந்த பாவாடையை,nightyயை பிபக்கமாக வச்சி பாப்பாங்க....அவங்க அதை கண்டுக்காத மாதுரி ...தனக்கான ஆடை தேர்வுல தீவிரமா இருப்பாங்க....அத  பார்க்கும்போது  செம காமடியாய்  இருக்கும், இதேபோல்  ஒரு  ஆண்னிடம் செய்தால்  என்ன ஆகும் நினைத்து  பாருங்கள்  ரணகளம்மாக இருக்கும்)

பட்டு  புடவை ,வாயல் புடவை , காட்டன் புடவை  என்று  அனைத்து புடவைகளும் வாங்கி  பழகிவிட்டேன்..

என்  சித்திகள்  சகோதிரிகள்  என அனைவருக்கும்  உடை  எடுத்துவிட்டேன்..

ஆனால் நாம் என்னதான்  உடை  எடுத்தாலும் அதன் நிறம் பெண்களுக்கு  பிடிப்பதில்லை...ஒரு பேச்சிக்கு கூட  உடை  நல்லா  இருக்கு  என்று  சொல்வதும்மில்லை...அவர்களின்  இந்த  நிலை நம் மனசுக்கு  மிக  வேதனையை  கொடுக்கும்.

நான்  இங்கு  இதை கூட  சொல்ல  வர வில்லை  இதை  விட  மிக  முக்கியமானதை  சொல்ல  விரும்புகிறேன்..

தென் இந்திய பெண்கள்  உடை அழகாக  இருந்தாலும் அனைத்துமே  மிக கேவலமான  தரத்தில்  இருக்கிறது ..அதை  வாங்கும் போது  நமக்கு  தெரியாது  அதை  துவைக்கும் போது தான்  அதன் மோசமான  தரமே  நமக்கு  தெரியும்...
blouse(ஜாக்கெட்) , பாவாடை , புடவை (குறிப்பாக  போலி  பட்டு புடவைகள்  அதிகம்).

பட்டு  புடவையாட்டும் உள்ளடையாகட்டும் அனைத்தும் சாயம்  நிறைந்து  உள்ளது ...இது  துவக்கும்போது  தான் நமக்கு  தெரியும்...இந்த  உடை உடுத்துவதால்  தோல் சரும  நோய்கள்  வர  வாய்ப்புள்ளது..

ஆடையை பத்துமுறை துவைத்தாலும் தொடர்ந்து சாயம் வெளியாகும். புடவை வாங்கியபோது ஒரு  நிறத்திலும் துவைத்த பின் வேறு நிறத்திலும் தோற்றமளிக்கும்... இதுபோல் தரமற்ற  ஆடைகள் பல ஜவுளி கடைகளில் விற்பனை செய்ய படுகிறது இதை மக்கள் கண்முடி தனமாக வாங்கி உடுத்துகிறார்கள்.. தரம் குறைந்த பட்டு புடவைகள் அதிக விலைக்கு பெரிய பெரிய ஜவுளி கடைகளில் ஏமாற்றி விற்கிறார்கள்..

அரசு சார்ந்த கூட்டுறவு நிறுவனங்களில் வாங்கும் பட்டு புடவைகள்  மிகவும் தரமானதாக  இருக்கிறது அனால் மக்கள் எதிர்பார்க்கும்  நிறத்திலோ அல்லது அவர்கள் விரும்பும் தற்கால டிசைன்னிலோ இல்லை என்பது நிதர்சனம்..

விரைவில்
விரிவாக சொல்கிறேன்......சில  பெண்களிடம் வெளிப்படையாக உடை  குறித்து பேச  நேர்ந்த போது அவர்கள் ஜீன்ஸ் comfortable wear என்கிறார்கள்... புடவையை  விட  இது  பல வகையில்  பயன்  தருகிறது  என்கிறார்கள்.
புடவை  glamorous wear என்கிறார்கள்  ...புடவை  அழகே  தனி என்கிறாகள்.
சுடிதார்  எல்லாம்  எளிதில் அணிய கூடியதே...என்கிறார்கள்..
(90 களுக்கு  பிறகு இது  தற்போது  அன்றாட  உடையாகி  விட்டது)

எனக்கு  சுடிதாரில்  பிடித்தது பாட்டியாலா அல்லது பஞ்சாபி பெண்கள்  உடுத்தும் சுடிதார் இது  பெண்களுக்கு  மிக  அழகான  வடிவத்தையும்  தோற்றத்தையும்  கொடுக்கிறது...மற்றும் கலை வேலைபாடுகள்  உள்ள  சுடிதார்கள் அழகை கூட்டி  கொடுக்கும்.
ஷால்  இல்லாத  சுடிதார்கள்  அழகாகவே  தெரியவில்லை (உண்மையாக) ஏதோ  மொட்டையாக  இப்பது போல்  உணருகிறேன்...ஷாலை கழுத்திலும் தோளிலும்  சுற்றுகிற  விதமே ஒரு  தனி  கலை.
அதை  சரியாகா  செய்ய  தெரிஞ்சவர்களை  பார்க்கும் போது.. வாவ் என்று  சொல்ல  தோணும்...

தற்போது Co-optex யில் Organic (இயற்கை) saree புடவை  வந்துள்ளது  இது பற்றி சரியாக எனக்கு  தெரியவில்லை ..இருந்த போதும் இது தரமானதாகவே இருக்கும்  என  கருதுகிறேன் ..

to be continued.....


Krishna Kumar G