Wednesday, May 11, 2016

மூன்று மாத காதலி

காலையில் மணி 3 க்கு எழுந்து குளித்து கிளம்பி வேகவேகமாக பேருந்து நிலையம் வந்து 3:50க்கு ஓடி போய் சென்னை   பேருந்தை பிடித்தா..... மார்கழி குளிர் லேசாக தெரியும் வேர்வை ஈரத்தில் ....
சுனாமி வந்து சில நாட்கள் தான் ஆகி இருந்தது ....
பேருந்தில் பெரும்பாலானோர் கைகளில் வைத்திருந்த  செய்திதாள் வார ஏடுகளிலும் அதை பற்றிய படமும் செய்தியும்.....பார்க்க பார்க்க மனதை வாட்டி கொண்டே இருந்தது....
காலை 6 மணி பாக்கெட்டில் உள்ள செல்போனை எடுத்து அவளுக்கு கால் பண்ணலாமா ? வேண்டாம் தூங்கி கொண்டிருப்பாள்...
மணி 6:30 அவளுக்கு கால் செய்தேன் ...சொல்லு எங்க இருக்க ....இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துடுவேன் ..
டேய் உன்ன 8 மணிக்கு தான வர சொன்னேன் ..
பரவால time தான்முக்கியம் அதுனால ஒரு அரை மணிநேரம் முன்னாடியே அங்க வருற மாதுரி நான் பிளான் பண்ணிட்டேன்..... நீ வேணும்னா 8 மணிக்கு வா நா வெயிட் பண்ணுறேன்....
7:30 மணி தாம்பரம் பேருந்து நிலையம் ...Sunday என்பதால் பூ கடைகளும் சில அட்டோகளை தவிற
வெறிச்சோடி கிடந்தது ....
அவளுக்கு போன் போட்டு நான் வந்துட்டேன் நீ கிளம்பிட்டேய ...?
இதோ வந்துகிட்டே இருக்கேன்...
அவள் தங்கி உள்ள விடுதி இங்கிருந்து பேருந்தில் 15 -20 நிமிட தொலைவில்.
அவள் வரும் வரை என்ன செய்யலாம் .... சுற்றும் முற்றும்  பார்த்தேன் இடதுபுறம் மேலே ஒரு Aircel விளம்பர பலகை ..வலதுபுறம் BPL சிம் கார்டு விளம்பர பலகை.... இரண்டிலும் அழகான மாடல் நடிகைகள்....அதை பார்த்தது கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரிய வில்லை ....
மணி 8 ..அவள் இன்னும் வரவில்லை ...
சாலை போக்குவரத்தை சீர் படுத்த டிராபிக் போலீஸ் வந்து விட்டார் ..
கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் பெருக ஆரம்பித்தது ....சென்னை விழித்துக் கொண்டது ....
மணி 8:15 அவளுக்கு பொன் செய்தேன்
தோ வந்துட்டே இருக்கேண்டா என்றாள்
சரி என்று போனை வைத்தேன் ..
டிராபிக் போலீஸ்காரர் வந்து  தம்பி ரோட்டில நிக்குற கொஞ்சம் பின்னால போ என்றார்...
அப்போதுதான் உணர்ந்தேன் நான் நிற்பது சாலையில்...காலையில் போக்குவரத்து பெருக ஆரம்பித்தது  வாகனங்கள் சாலையை விரிவடைய செய்துகொண்டே இருந்தது ....நான் பின்னால் போய் கொண்டே இருந்தேன் ....ஒரு பூ கடையில் மோதி நின்றேன் .
மணி 8:30 அவள் இன்னும் வரவில்லை ..... நேரம் நகர நகர நரக வேதனை ......பசிக்க ஆரம்பித்தது .....கலையில் இருந்து பச்சை தண்ணிகூட குடிக்கவில்லை .....எனக்கு பின்னால் ஒரு ஹோட்டல் ....அவள் வந்துவிடுவாள் அவளுடன்  ஒன்றாக போய் சாப்பிடலாம் என்று எண்ணி அங்கேயே நின்ற இடத்திலே நின்றுவிட்டேன்....
மணி 8:45 அவள் ஏன்  இன்னும் வரவில்லை என்ற கோபத்தில் போன் செய்தேன்..போனை எடுத்தவுடன் ..
சாரிட சாரி கிட்ட வந்துட்டேன் என்றாள்...
அவளிடம் பேசிக்கொண்டே இருக்கும் போது என் அருகில் ஒரு அழகான பெண் வந்து நின்றாள்....
எப்பா செமத்த கட்ட என்று லேசாக பார்த்தேன்...
அவள் என்னை பார்த்து சிரித்தாள் ....
எனக்கு தூக்கிவாரிபோட்டது  ...... வேறு பக்கம் திரும்பி கொண்டேன் சிறிது நேரம் கழித்து  அவள் பக்கம் மீண்டும் திரும்பினேன் அவள் என்னையே பார்த்து கொண்டிருப்பதை உணர்ந்தேன் ... மீண்டும் சிரித்தாள்...மீண்டும் வேறு பக்கம் திரும்பி கொண்டேன்..
மணி 9:00 am என்னருகில் நின்ற பெண் எங்கு சென்றாள்  என்று தெரிய வில்லை ....வெயில் வேறு வந்து விட்டது ...பேருந்துகள் நிறுத்தம் அருகில் இருப்பதால் ...மக்கள் கூட்டம் வேறு அதிகரித்து விட்டது ...அவள் இஷ்டம்போல் வறட்டும் என்று விட்டுவிட்டேன்....
தனிமை பசி என்று என் மன நிலை வேறுவிதமாக யோசித்துக்கொண்டே சென்றது
டிராபிக் போலிஸ் வேறு அடிக்கடி என்னையே பார்த்து கொண்டிருந்தார்...
இங்கிருந்து கிளம்பலாம் வேறு இடத்துக்கு போகலாம் என்ற யோசனை வேறு...அவள் ஏன் இன்னும் வரவில்லை என்ற குழப்பம் வேறு...
மணி 9:30 அவளுக்கு கோபமாக கால் செய்தேன்
ஏய் வருவிய இல்லையா ...இல்ல நான் வரட்டுமா ஒழுங்கா சொல்லு... எனக்கு பசிக்குது ....
இல்லடா ஒரு வேலை அதான் ......லேட்....
சரி இப்ப எங்க இருக்க ..கிட்ட வந்துட்டேன்டா ....
ஓகே நீ நேர ஹோடேல்க்கு வந்துடு என்னால இங்க நிக்க முடியல மயக்கம் வருது..
என்று சொல்லி போனை கோபமாக வைத்துவிட்டு .
ஹோட்டல் பக்கம் திரும்பி நடந்தேன்....
ஹோடலுக்குள் நுழைந்ததும்
அவள் ஒரு டேபிள்லில்  அமர்ந்துகொண்டு ஜூஸ் குடித்து கொண்டிருந்தாள்...
அவள் அருகில் அந்த செமத்த கட்ட மற்றும் ஒரு அழகான பெண் .அவளும் நான் நிற்கும் போது என்னையே பார்த்துகொண்டே சென்றவள் தான்,......
அவள் சாரிடா என்று எழுந்து வந்து என்முன்னே நின்றாள்....
ஹோட்டலில் கூட்டம் இரைச்சல் வேறு...
பசி மக்கம் வேறு .....
பிறகு இது வேறு......
அடுத்து நான் என்ன செய்திருப்பேன்........?

கூலாக சத்யம் போலாமான்னு கேட்டேன்......
அவள் ஜாலியாக அங்க வேணாம் உதயம் போலாம் என்றாள்.......
ஆனா நீதான் pay பண்ணனும் என்றேன்
உற்சாகமாக ஓகே என்றாள்...
திநகர் ஷாப்பிங் வரை அவளையே pay பண்ணவைத்தேன்....
அவள் மாலைபொழுது வரை உற்சாகம் குறையாமல் இருந்தாள்  எனக்கோ சோர்வு தட்டிவிட்டது ...
கோயம்பேட்டில் (cmbt) வந்து அமர்ந்தேன் ..
அவள் என்னருகில் அமர்ந்தாள் பேசிக்கொண்டே இருந்தோம் ...
திடீர் என்று கையை பிடித்து அழுவ ஆரம்பித்துவிட்டாள்...
ஏய் அழுவாத என்ன அச்சி என்றேன்....

திடீர் என்று ஐ லவ் யு ட என்றாள்.......

ஏய் என்ன விளையாடுறியா ....லூச நீ நான்தான் வேற பொண்ண லவ் பண்றேன்னு தெரியும்ல.....

அவ உன்ன உன்ன லவ் பண்றாளா ?

ஐயோ உனக்கு  சொன்ன புரியாது ப்ளீஸ் வேண்டாம் don't
try to Tempt Me என்றேன்.

முடியாது உனக்கு ஒரு மாசம் time என்றாள்...

எதுக்கு

அவ உன்ன லவ் பண்றான்னு prove பண்ணு ....இல்லன நீ என்ன லவ் பண்ணனும் ....

இப்ப சொல்லுறேன் நா உன்ன லவ் பண்ணல... ஓகே வா..

இப்ப நீ லவ் பண்ண வேண்டாம் ஒரு மாசம் டைம் இருக்குல....

என்  ஊருக்கு  போக பேருந்து வந்தது........

அந்த பேருந்தில்  என்னுடனே  வந்து  தாம்பரத்தில் இறங்கி விட்டாள்

பேருந்து இங்கே ஐந்து முதல் பத்து நிமிடம் நிற்கும் ..
அதுவரை அவளை சமாதானம் செய்து  சில  புத்திமதி சொல்லிவிட்டு

Good bye சொன்னேன்.

இன்றுமுதல் இவள் பிரீண்ட்ஷிப்பை முடித்துக்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்துவிட்டு .......பேருந்தில் ஏறினேன்.

ஐந்து  மணி  நேர பேருந்து பயணத்தில் இதைப்பற்றியே ஒரே  யோசனை .......!
இவளை  எனக்கு  இரண்டு  மாசமா தான் தெரியும் ...அதுவும் என்  நண்பன் காதலித்த  பெண்ணின் தோழி அவள் முலம்  இவளுடன்..சற்று  நட்பாக உரிமையோடு  பழகி வந்தேன்
அவ்வளவே.

தொடர்ந்து  ஒரு  மாதம் போன் செய்வது  மெசேஜ்  அனுப்புவது  என்று  தொல்லை கொடுத்தது  கொண்டே இருந்தாள்....
நண்பனும்  காதலியும்  அடிகடி  ஊட்டி  செல்வது  வழக்கம்  அதை  மேற்கோள்  காட்டி  நாமும் அங்கே  செல்லலாம்  என்பாள்,,,
நான் முடியாது என்பேன்...

நண்பன்  முலமாக  காதல்  தூது விட  ஆரம்பித்தாள்
ஆகையால்  அவன் நட்பை துண்டிக்க  நேர்ந்தது......

அடுத்த  பிப்ரவரி 14 அன்று  போன் செய்வேன்  நீ  ஒத்துகொள்ள  வேண்டும்  இல்லை  என்றாள் ..அவ்வளவுதான்  என்றாள்

முடியாது என்றேன்...

சரியாக  அந்த நாள்  போன் செய்தால்  ...
ஐ லவ் யு என்றாள்

முடியாது  என்றேன்
...

அப்படினா  நான்  அன்னைக்கு  செலவு  பண்ண  காச  திருப்பி  கொடு என்றாள்....

ச்சி அவளோ  தான என்று ..
உடனே  அவளுக்கு அந்த தொகையை  மணி ஆடர்  செய்துவிட்டு ....

இத்துடன் முடிந்தது என்று  இருந்துவிட்டேன்.

அவள் அந்த மணி  ஆடரை  பெற்று கொண்டு அதில்லுள்ள சிறிய Reply மெசேஜ் இடத்தில் என் பெயரையும் அவள் பெயரையும் காதல் சின்னத்தால் இணைத்து "Still I Love you da" என்று எழுதி அனுப்பிவிட்டாள்..

சில நாட்கள் கழித்து
அதை தபால்காரர் நான் வீட்டில் இல்லாத  போது என் அம்மாவிடம்  கொடுத்துவிட்டார் .....இதை சற்றும் எதிர்பார்க்காத  நான் என்  வீட்டில்  மாட்டிக்கொண்டேன்...
அவர்கள் துருவி துருவி கேள்வி  கேட்க..
அதை அவர்கள்  முன்னே கிழித்தெறிந்துவிட்டு அவர்களை  எப்படியோ சமாளித்தேன்....

அதன்  பிறகு  அவள் என்னை தொடர்பு  கொள்ளவே  இல்லை.....

பன்னிரண்டு ஆண்டுகள் ஓடியது..இப்படி ஒரு பெண் என் வாழ்க்கையில் இருந்ததையே மறந்துவிட்டேன்.

சிறுது  நாட்கள்  முன்பு  எதற்சையாக அவளை  ஒரு  பேருந்து  நிலையத்தில்  பார்த்தேன்...

பயங்கர  குண்டாக  இருந்தாள்..சட்டென்று அவளை எனக்கு  அடையாளம் தெரியவில்லை..என்னை பார்த்த  உடன்  அதே  உற்சாகத்தில் சிரித்தாள்...

உடனே நான் அவளை  கண்டுகொள்ளாமல்  அடுத்து  வந்த பேருந்தில்  எறி வீடு வந்துவிட்டேன்.........

நான்  அன்று உண்மையாக காதலித்த  பெண்  என்  காதலை  இன்றுவரை ஏற்று  கொள்ளவில்லை என்பதும் இங்கே நான் சொல்ல  கடமை பட்டுள்ளேன்....

எனக்கு  கிடைத்த  பல வாய்ப்புகளில் நான் கைவிட்டதில் இதுவும் ஒன்று..

இந்த  முன்று மாத  காதலி

Krishna Kumar G