Monday, May 30, 2016

Gave Blood after long gap

After bike accident now only I got stability to donate blood..

Thank god my blood going to save someone

Please donate blood if you can.

மத்தவங்களுக்கு இரத்தம் கொடுக்க பத்து முதல் இருபது  நிமிஷம் தான்...
ஆனா எனக்கு ஒன்றரை மணி நேரம் ஆச்சி...
சும்மா நர்ஸ் என்கிட்ட ஜாலியா பேசிகிட்டு இருந்தாங்க...
கொஞ்சம் போடோ  எடுத்து கொடுங்கன்னு ஆரம்பிச்சி...
நான் சிங்கிள தான் இருக்கேன் என்ற வரைக்கும் சும்மா பேசிகிட்டு இருந்தேன்..
அவங்களுக்கும் என்னைய வெளியில அனுப்ப மனசே வருல.... he he :) .

Wednesday, May 25, 2016

பேஸ்புக் தோசை

இன்னிக்கு காலைல facebook பாத்துகிட்டே தோசை ஊத்துனேன், தோசை தீஞ்சி போச்சி... ,
Omg அப்போ..
இந்த காலத்து பிள்ளைங்க எல்லாம் பாவம் தினமும் தீஞ்சி போன தோசைதான் சாப்புடுறாங்களான்னு
ஒரு சந்தேகம் ?
School Lunch Time ல அந்த புள்ள facebookக்க நினைச்சி புலம்பும்போது தான்அது தெரியும்.


இன்டர்ன்ஷிப்னா (Internship) என்ன ?

லாரி கிளினர்க்கு சம்பளம்லாம் எதுவும் கிடையாது ..டிரைவர் கூடவே இருந்து கொடுக்குறத வாங்கி தின்னுட்டு தொழில் கத்துக்க வேண்டியதுதான் ...
-
இதுதான் இப்ப Internship பல கம்பெனிகளில்
யாருக்கும் சம்பளம்லாம் கிடையாது
கூடவே இருந்து  தொழில் கத்துக்க வேண்டியதுதான்


இந்த பொண்டாட்டிங்கலே இப்படிதான்

என்னடா கல்யாணம்மாகி ஒரு மாசம் கூட அகல அதுக்குள்ளே ஹோட்டல் பார்ல ஒக்காந்திகிட்டு பிலேன்டட் ஸ்காட்ச் குடிச்சிகிட்டே இருக்க....வீட்டுக்கு எப்படி போவ..உன் பொண்டாடிக்கு இது தெரியுமா...
*அட போடா நான் வீட்டுல தண்ணி அடிச்சா அவதான் எனக்கு கறி வறுத்து அம்ப்ளேட் போட்டு தருவா,,,,,..
இப்படி சொல்லிட்டு அவன் மறுபடியும் இன்னொரு பெக் குடிக்க ஆரம்பிச்சிட்டான்..
அதை கேட்ட எனக்கு....
இவனுக்கு போய் இப்படி ஒரு போண்டட்டியா ...ஜாடிக்கு எத்த மூடினு பொறமை...வேற,
நம்ம என்னடான்னா அதுவரைக்கும் துவையலில்லிருந்து தம் பிரியாணி வரைக்கும் வைக்க தெரிஞ்சவதான் பொண்டாட்டின்னு நினைச்சிகிட்டு இருந்தோம்...
சரக்குக்கு கரெக்டா மிக்ஸ்ங்க்கும் பண்ண தெரிஞ்சவதான் பொண்டாட்டின்னு அன்னிக்குத்தான் அவன் சொல்லி கொடுத்தான்....
-----------------------
இந்த சம்பவம் நடந்து ஒரு வருடம் கழித்து..
அவன் டாஸ்மாக்கில் இருந்து ரெண்டு சரக்கு பாட்டில் வாங்கிட்டு வீட்டுக்கு போய்கிட்டு இருந்தான் ....
அதை பாத்துட்டு என்னடா வீட்ல கறி வறுவலா என்ன சிக்கன்னா மட்டன்னான்னு கேட்டேன்.....
* நீ வேற வீட்டுல பொண்டாட்டி இல்ல டா ஊருக்கு போய்ட்டா....அதுனாலதான் ஜாலிய தண்ணி அடிக்க போறேன்...அவளுக்கு தெரிஞ்ச அவளோதான்...
இத கேட்ட எனக்கு ஒரே கொழப்பம்...
ஏய் நில்லுடா ஒரு வருசத்துக்கு முன்னாடி அப்போ அப்புடி சொன்ன இப்ப இப்படி சொல்லுற...
*அது அப்போ இது இப்போ...நிலைமை தலைகீழா மாறிடுச்சி...
இதை கேட்ட எனக்கு ஒண்ணுமே புரியல .....
நான் இன்னும் வளரனும்....6 அடி பத்துலைன்னு நினைக்கிறேன்..
‪#‎தமிழ்‬ ‪#‎கதை‬
Krishna Kumar G


Sunday, May 22, 2016

மார்டன் மாடல் பெண்

என் கல்லுரி காலம் தொடங்கி
நான்  இதுவரை  கடந்து  வந்த பெண்களிலே  என்னை அசரடித்த பெண்  இவள்தான்.
ஒரு பெண்ணுக்குள் இத்தனை விசியங்கள் இருக்க  முடியுமா  என்று  எனக்கு புரிய  வைத்தவள் இந்த தோழிதான்...
பெண் என்பவள் இவ்வளவுதான் என்று அதன் ஆழத்தை எனக்கு உணர செய்தவள்......
மிக துணிச்சல் நிறைந்தவள்......
எத்தனை மொழிகள் எத்தனை திறமைகள்...
நான் துணிச்சலாக இன்று இணையத்தில் எழுதுவதற்கே இந்த பெண்தான் காரணம்..
என்னை புதுவிதமாக எழுத வைத்தாள் போது மேடைகளில் புதுவிதமாக பேச வைத்தாள்.
எனக்கு பல விசியங்களை கற்றுகொடுத்தாள்...
அவளிடம் பேசுவதற்கு எப்போதும் என்னை ஆவல்ளுடன் ஏங்க வைத்தாள்.
அவள் எழுதியதை என்னிடம் விவாதிப்பாள்.....
இருவருக்குமான புரிதல் அளப்பரியது...........

இப்படி ஒரு பெண் எனக்கு கிடைத்து விட மாட்டாளா என்று அனைவரும் ஏக்கத்துடன் பார்க்கும் அளவுக்கு அவள் அழகு.......... உணமையாக அழகோ அழகு

இவள் எப்படி எனக்கு தோழி யானாள் என்று என்னை அடிகடி யோசிக்க வைத்துவிடுவாள்...
என் குடும்பத்தாரோடு அப்படி இனுக்கமாக பழகுவாள்

இது காலம் செல்ல செல்ல காதலாக  மாறிவிடுமோ என்ற பயம் வர தொடங்கியது.... இது நட்ப காதலா என்ற குழப்ப நிலைக்கே வந்துவிட்டோம்....

இருவரும் சில கரங்களுக்காக பிரிய நேர்ந்தது ..............
கண்ணிர் கண்ணிர் இருவரிடமும் ........

நானே அதை சொல்லிவிட்டு செய்தேன்......... வேண்டும் மென்றே இருவரும் பிரிந்தோம் .

இவள் சென்ற பிறகு வெகுவாக இளைத்தேன்,,,,,,,,உடல் அளவிலும் மனதளவிலும் ..

பல வருடங்கள் கழித்து அவளை பார்த்தேன் ,,,,சமுகவளைதலத்தில்...ஆனால் அவளை தொடர்புகொள்ளவில்லை ...அவளை போல் அவளுக்கு அழகான இரண்டு குழந்தைகள்....

அவளிடம் பேச வேண்டும், அவளை பார்க்க வேண்டும் ,அவள் குழந்தைகளை கொஞ்ச வேண்டும் என்று ஆசை ....ஆனால் அதை நான் செய்ய வில்லை.......

நல்லவேளை நல்லபடியாக  இருக்கிறாள்..............

ஒருவேளை  இருவரும்  காதலித்து என்னோடு  இருந்திருந்தால் இத்தனை இன்பங்கள் நிறைந்தவளாக இருந்திருப்பாளோ எனபது சந்தேகம்தான்.........

நான் கடந்து வந்த கரடுமுரடு பாதைகளில் இவள் என்னுடன் பயனிக்காதது நல்லதே........

இவளுக்கு எனக்கும் ஒரு சவால் உண்டு .........அதில் நான் இன்னும் வெற்றி பெறவில்லை..........

அது நடக்கும் ......... அது வேறொன்றுமில்லை அவள் என்னை தொழில் ரீதியாக பேட்டி எடுக்க வேண்டும் அதற்க்கான தகுதியை நான் அடைய வேண்டும் என்பதே ...

என்னை உயர்த்தி அழகு பார்க்க வேண்டும் அதுவே அவளது விருப்பம்.

கிருஷ்ண குமார்
Krishna Kumar G


Wednesday, May 18, 2016

மின்னலை பிடித்தேன்

One day ஒரு நாள் Two day இரண்டு நாள்  Three day முன்று நாள்

என்ன  சொல்ல வறேன்னா ?

ஒரு நாள் இரவு சுமார் ஏழு மணிக்கு லேசான மழையில் அடியோ  காஸ்செட் (Audio Cassette)ல உள்ள பாட்டு எல்லாத்தையும் சீடி ல ஏத்த நெய்வேலி ராகம்  மியூசிக்  செனட்டர் (பிளாக் 25 ) கடைக்கு போனேன் .அதான் அதேதான் அந்த குளுனி ஸ்கூல் பின்னாடி தனிய ஒரு கடை இருக்கும்ல அந்த கடை தான்

அப்ப வழக்கமா அந்த  கடையில தான் பாட்டு  ஏத்துவேன், அதுனால அந்த கடாயில் வேலை செய்பவர்கள்  எனக்கு கொஞ்சம் பழக்கம்.

அங்கே இருக்கும் பாடல் பதிவுகள் மற்றும் பட்டியல்களை  பார்த்து கொண்டே இருந்தால் நேரம் போவதே  தெரியாது.. அதில் ஒவ் ஒரு பாடல்களாக  தேர்ந்தெடுத்து ஏத்துவது என்பது எனக்கு ஒரு இன்பம்.

அப்போது சீடி முப்பது ரூபாய் விருப்பமான பாடல் ஏற்ற நுறு முதல் நூற்றி ஐம்பது ருபாய் இருக்கும் இந்த பாடல் ஏற்றும் விலை எனக்கு சரியா என ஞாபகம்மில்லை.

இப்படி அன்றிரவு பாடல் ஏற்றி கொண்டிருக்கையில்....என் பாக்கெட்டில் உள்ள
 மொபைல் போன் அடித்தது .......அப்போது மொபைல் டவர் சரியாக எடுக்காத காலம் இந்த மழையில் எப்படி எடுத்தது என்ற யோசனையில் போனை பார்த்தால் அந்த பெண் ...போனை எடுக்காவிட்டால் அவ்வளவுதான் எங்க வீட்டுக்கு கால் செய்துவிடுவாள்......கால் செய்து எங்க அம்மாவிடமோ அல்லது எங்க  அப்பவிடமோ ஏதாவது பேசுவாள்.

போனை நான் எடுத்தே  அக வேண்டும் என்னை சுற்றி தெரிந்த கடை காரர்கள் வேறு ...ஒரு மொபைல் அடித்தால் பேசவி முடிக்கும் வரை  எல்லாம் நம்மை மட்டும் பார்க்கும் காலம் அது.
கடைக்கு வெளியில் மழை வேறு...,

வெளியே மழையில் நடந்து கொண்டே போனை எடுத்தேன் ...
எங்க இருக்க ?
இங்கதான் பக்கத்துல .......(எனக்கு வேற உடனே போய் சொல்ல வராது)
பக்கத்துலைய எங்க இருக்க ......
இருக்கும் இடத்தை சொல்லி விட்டேன்.
இங்கதான்  இருக்கியா.....
ஆமா
ப்ளீஸ் வாடா பாக்கணும்
மழை பெய்யுது ....வரலாம் முடியாது...
மழை விட்டதும் வா
பாக்கலாம்

இவளிடம் பேசவே  எனக்கு பயமாக இருக்கும்...எப்ப  என்ன பண்ணுவானே தெரியாது ....சைகோ  மாதுரி...

சரி நா வைக்கட்டுமா ?
வேணா பேசுறா
சரி சொல்லு...

இப்படியே பேசி கொண்டே மழையில் அருகில் உள்ள சாலையை கடந்தேன்.
திரும்பி பார்த்தேன் கடையில் உள்ளவர்கள்  என்னையே பார்த்து கொண்டிருந்தார்கள்.
மீண்டும் சாலையை பார்த்தேன் எனது இடதுபுறத்தில் வீடுகள் இருந்தது.
என்னிடம் இருந்து ஒரு இருபது அடி தூரத்தில் ஒரு வீட்டின் தோட்டத்தில்  இலவம்பஞ்சு  மரம் ஒன்று மிக உயரமாக இருந்தது..
மொபைல் போன்யில் பேசி கொண்டே இரவில் அதுவும் அந்த கொட்டும் மழையில் அந்த மரம் மிக அழகா தெரிந்தது  அதை நான் பார்த்தகொண்டே
இருக்கும் வேலையில் ..
திடிர் என்று ஒரு மின்னல் வந்து மரத்தின் மேல் விழுந்தது
மின்னல் விழுந்ததில் மரம் இரண்டாக பிளந்து தெரித்தது ..
நான் அதை பார்த்து அதிர்ந்து போய் போனை காதில் இருந்தது எடுப்பதற்க்குள்
மின்னலில் இருந்து வீசிய மின்சாரம் கொண்ட மின்காந்த அலைகள் என் கையில் வைத்திருந்த மொபைல் போன் முலமாக  என்னை  தாக்கியது ...
மின்சாரம் ஒரு நொடி என்னை தாக்கி இருக்கும் 
உடனே அதிர்ச்சியில் இருந்து நினைவு திரும்பியது நான் நடந்து கொண்டிருந்தேன் அல்லவா என்னால் அடுத்த  அடி கால்களை எடுத்து வைக்க முடியவில்லை .காது அருகே மொபைல் போனை பிடித்திருந்த வலது கையை என்னால் மீண்டும் கீழே கொண்டு வர முடியவில்லை ...
நான் அப்புடியே பின்னால் சரிந்தேன்..
கடையில் இந்த  நிகழ்வையும் நான் மின்னல் தாக்கி கிழே சரிந்து விழுவதையும் பார்த்து கொண்டு இருந்தவர்கள் என்னை ஓடிவந்து தாங்கி பிடித்தார்கள் ....
அவர்கள் பேசுவது எனக்கு கேட்கிறது ஆனால் என்னால் அவர்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை...
என்னை நானே அமைதி படுத்தி கொண்டேன்.
மெதுவாக வாய் குழறி பேச தொடங்கினேன்....
எனக்கு ஒண்ணுமில்லை எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க...
என்னை அமர வைத்து தண்ணிர் கொடுத்தார்கள்...
கை கால்களை அசைத்து பார்த்தேன் எதும் ஆகா வில்லை..

கடையில் உள்ளவர்கள் இவளோ மழை பெய்யுது இதுல போன் பேசிட்டு போற என்று திட்டினார்கள்....
அப்போதுதான் எனக்கு நினைவுக்கே வந்தது ....அய்யய்யோ இந்த சைகோ என்ன பண்ண போகுதோ என்று ....
உடனே போனை எடுத்து பார்த்தேன் ,,
எப்பாடா..! இவளோ நடந்தும் போன் கட் ஆகவே இல்லை ...

எடுத்து ஹலோ சொன்னேன் அவள்
ஏய் என்னடா நடந்தது என்றாள்
மிக சாதாரணமாக வேறு ஒண்ணுமில்ல என்மேல இடி விழுந்தது என்றேன்..
டேய் போய் சொல்லாத ட என்றாள்
எங்க உண்மைய சொன்ன நம்பவ போற என்றேன்.
அவள் சிரித்தாள்
அதை கேட்டு 
எனக்கே சிறுப்பு வந்துவிட்டது அப்போது....

கடைகாரகள் இங்க என்ன நடக்குது என்ற ரேஞ்சுக்கு என்னை வெறுக்க பார்த்து கொண்டிருந்தார்கள்...

---------------------------------இந்த கதை இத்துடன் முடிந்தது----------------------------

(உங்கள் சந்தேக புத்திக்காக இன்னும் சில தகவல்கள்)

அதன் பிறகு 
இந்த செல்ல சைகோ தோழியால் நான் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல ...
பல ஆண்டுகள் என்னை ஆட்டிபடைத்து கொண்டிருந்தாள்.
இப்பபொழுது அவள் முழுவதும் தொடர்பில இல்லை என்றாலும்......
தொடர்பில் இருந்தவரை "ஹே டார்லிங் ஹொவ் ஆர் யு" என்று பேச தொடங்கும் ஒரே பெண் இவள் தான்.

எனக்கு அந்த இடி விழுந்த நாளில் இருந்து இன்றுவரை ஒரு நல்லதும் நடக்கவில்லை.......

(அடுத்தது புயலுக்குள் நான் புகுந்த  வந்த கதையை சொல்லுறேன்)


Krishna Kumar G
கிருஷ்ண குமார் 


Wednesday, May 11, 2016

மூன்று மாத காதலி

காலையில் மணி 3 க்கு எழுந்து குளித்து கிளம்பி வேகவேகமாக பேருந்து நிலையம் வந்து 3:50க்கு ஓடி போய் சென்னை   பேருந்தை பிடித்தா..... மார்கழி குளிர் லேசாக தெரியும் வேர்வை ஈரத்தில் ....
சுனாமி வந்து சில நாட்கள் தான் ஆகி இருந்தது ....
பேருந்தில் பெரும்பாலானோர் கைகளில் வைத்திருந்த  செய்திதாள் வார ஏடுகளிலும் அதை பற்றிய படமும் செய்தியும்.....பார்க்க பார்க்க மனதை வாட்டி கொண்டே இருந்தது....
காலை 6 மணி பாக்கெட்டில் உள்ள செல்போனை எடுத்து அவளுக்கு கால் பண்ணலாமா ? வேண்டாம் தூங்கி கொண்டிருப்பாள்...
மணி 6:30 அவளுக்கு கால் செய்தேன் ...சொல்லு எங்க இருக்க ....இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துடுவேன் ..
டேய் உன்ன 8 மணிக்கு தான வர சொன்னேன் ..
பரவால time தான்முக்கியம் அதுனால ஒரு அரை மணிநேரம் முன்னாடியே அங்க வருற மாதுரி நான் பிளான் பண்ணிட்டேன்..... நீ வேணும்னா 8 மணிக்கு வா நா வெயிட் பண்ணுறேன்....
7:30 மணி தாம்பரம் பேருந்து நிலையம் ...Sunday என்பதால் பூ கடைகளும் சில அட்டோகளை தவிற
வெறிச்சோடி கிடந்தது ....
அவளுக்கு போன் போட்டு நான் வந்துட்டேன் நீ கிளம்பிட்டேய ...?
இதோ வந்துகிட்டே இருக்கேன்...
அவள் தங்கி உள்ள விடுதி இங்கிருந்து பேருந்தில் 15 -20 நிமிட தொலைவில்.
அவள் வரும் வரை என்ன செய்யலாம் .... சுற்றும் முற்றும்  பார்த்தேன் இடதுபுறம் மேலே ஒரு Aircel விளம்பர பலகை ..வலதுபுறம் BPL சிம் கார்டு விளம்பர பலகை.... இரண்டிலும் அழகான மாடல் நடிகைகள்....அதை பார்த்தது கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரிய வில்லை ....
மணி 8 ..அவள் இன்னும் வரவில்லை ...
சாலை போக்குவரத்தை சீர் படுத்த டிராபிக் போலீஸ் வந்து விட்டார் ..
கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் பெருக ஆரம்பித்தது ....சென்னை விழித்துக் கொண்டது ....
மணி 8:15 அவளுக்கு பொன் செய்தேன்
தோ வந்துட்டே இருக்கேண்டா என்றாள்
சரி என்று போனை வைத்தேன் ..
டிராபிக் போலீஸ்காரர் வந்து  தம்பி ரோட்டில நிக்குற கொஞ்சம் பின்னால போ என்றார்...
அப்போதுதான் உணர்ந்தேன் நான் நிற்பது சாலையில்...காலையில் போக்குவரத்து பெருக ஆரம்பித்தது  வாகனங்கள் சாலையை விரிவடைய செய்துகொண்டே இருந்தது ....நான் பின்னால் போய் கொண்டே இருந்தேன் ....ஒரு பூ கடையில் மோதி நின்றேன் .
மணி 8:30 அவள் இன்னும் வரவில்லை ..... நேரம் நகர நகர நரக வேதனை ......பசிக்க ஆரம்பித்தது .....கலையில் இருந்து பச்சை தண்ணிகூட குடிக்கவில்லை .....எனக்கு பின்னால் ஒரு ஹோட்டல் ....அவள் வந்துவிடுவாள் அவளுடன்  ஒன்றாக போய் சாப்பிடலாம் என்று எண்ணி அங்கேயே நின்ற இடத்திலே நின்றுவிட்டேன்....
மணி 8:45 அவள் ஏன்  இன்னும் வரவில்லை என்ற கோபத்தில் போன் செய்தேன்..போனை எடுத்தவுடன் ..
சாரிட சாரி கிட்ட வந்துட்டேன் என்றாள்...
அவளிடம் பேசிக்கொண்டே இருக்கும் போது என் அருகில் ஒரு அழகான பெண் வந்து நின்றாள்....
எப்பா செமத்த கட்ட என்று லேசாக பார்த்தேன்...
அவள் என்னை பார்த்து சிரித்தாள் ....
எனக்கு தூக்கிவாரிபோட்டது  ...... வேறு பக்கம் திரும்பி கொண்டேன் சிறிது நேரம் கழித்து  அவள் பக்கம் மீண்டும் திரும்பினேன் அவள் என்னையே பார்த்து கொண்டிருப்பதை உணர்ந்தேன் ... மீண்டும் சிரித்தாள்...மீண்டும் வேறு பக்கம் திரும்பி கொண்டேன்..
மணி 9:00 am என்னருகில் நின்ற பெண் எங்கு சென்றாள்  என்று தெரிய வில்லை ....வெயில் வேறு வந்து விட்டது ...பேருந்துகள் நிறுத்தம் அருகில் இருப்பதால் ...மக்கள் கூட்டம் வேறு அதிகரித்து விட்டது ...அவள் இஷ்டம்போல் வறட்டும் என்று விட்டுவிட்டேன்....
தனிமை பசி என்று என் மன நிலை வேறுவிதமாக யோசித்துக்கொண்டே சென்றது
டிராபிக் போலிஸ் வேறு அடிக்கடி என்னையே பார்த்து கொண்டிருந்தார்...
இங்கிருந்து கிளம்பலாம் வேறு இடத்துக்கு போகலாம் என்ற யோசனை வேறு...அவள் ஏன் இன்னும் வரவில்லை என்ற குழப்பம் வேறு...
மணி 9:30 அவளுக்கு கோபமாக கால் செய்தேன்
ஏய் வருவிய இல்லையா ...இல்ல நான் வரட்டுமா ஒழுங்கா சொல்லு... எனக்கு பசிக்குது ....
இல்லடா ஒரு வேலை அதான் ......லேட்....
சரி இப்ப எங்க இருக்க ..கிட்ட வந்துட்டேன்டா ....
ஓகே நீ நேர ஹோடேல்க்கு வந்துடு என்னால இங்க நிக்க முடியல மயக்கம் வருது..
என்று சொல்லி போனை கோபமாக வைத்துவிட்டு .
ஹோட்டல் பக்கம் திரும்பி நடந்தேன்....
ஹோடலுக்குள் நுழைந்ததும்
அவள் ஒரு டேபிள்லில்  அமர்ந்துகொண்டு ஜூஸ் குடித்து கொண்டிருந்தாள்...
அவள் அருகில் அந்த செமத்த கட்ட மற்றும் ஒரு அழகான பெண் .அவளும் நான் நிற்கும் போது என்னையே பார்த்துகொண்டே சென்றவள் தான்,......
அவள் சாரிடா என்று எழுந்து வந்து என்முன்னே நின்றாள்....
ஹோட்டலில் கூட்டம் இரைச்சல் வேறு...
பசி மக்கம் வேறு .....
பிறகு இது வேறு......
அடுத்து நான் என்ன செய்திருப்பேன்........?

கூலாக சத்யம் போலாமான்னு கேட்டேன்......
அவள் ஜாலியாக அங்க வேணாம் உதயம் போலாம் என்றாள்.......
ஆனா நீதான் pay பண்ணனும் என்றேன்
உற்சாகமாக ஓகே என்றாள்...
திநகர் ஷாப்பிங் வரை அவளையே pay பண்ணவைத்தேன்....
அவள் மாலைபொழுது வரை உற்சாகம் குறையாமல் இருந்தாள்  எனக்கோ சோர்வு தட்டிவிட்டது ...
கோயம்பேட்டில் (cmbt) வந்து அமர்ந்தேன் ..
அவள் என்னருகில் அமர்ந்தாள் பேசிக்கொண்டே இருந்தோம் ...
திடீர் என்று கையை பிடித்து அழுவ ஆரம்பித்துவிட்டாள்...
ஏய் அழுவாத என்ன அச்சி என்றேன்....

திடீர் என்று ஐ லவ் யு ட என்றாள்.......

ஏய் என்ன விளையாடுறியா ....லூச நீ நான்தான் வேற பொண்ண லவ் பண்றேன்னு தெரியும்ல.....

அவ உன்ன உன்ன லவ் பண்றாளா ?

ஐயோ உனக்கு  சொன்ன புரியாது ப்ளீஸ் வேண்டாம் don't
try to Tempt Me என்றேன்.

முடியாது உனக்கு ஒரு மாசம் time என்றாள்...

எதுக்கு

அவ உன்ன லவ் பண்றான்னு prove பண்ணு ....இல்லன நீ என்ன லவ் பண்ணனும் ....

இப்ப சொல்லுறேன் நா உன்ன லவ் பண்ணல... ஓகே வா..

இப்ப நீ லவ் பண்ண வேண்டாம் ஒரு மாசம் டைம் இருக்குல....

என்  ஊருக்கு  போக பேருந்து வந்தது........

அந்த பேருந்தில்  என்னுடனே  வந்து  தாம்பரத்தில் இறங்கி விட்டாள்

பேருந்து இங்கே ஐந்து முதல் பத்து நிமிடம் நிற்கும் ..
அதுவரை அவளை சமாதானம் செய்து  சில  புத்திமதி சொல்லிவிட்டு

Good bye சொன்னேன்.

இன்றுமுதல் இவள் பிரீண்ட்ஷிப்பை முடித்துக்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்துவிட்டு .......பேருந்தில் ஏறினேன்.

ஐந்து  மணி  நேர பேருந்து பயணத்தில் இதைப்பற்றியே ஒரே  யோசனை .......!
இவளை  எனக்கு  இரண்டு  மாசமா தான் தெரியும் ...அதுவும் என்  நண்பன் காதலித்த  பெண்ணின் தோழி அவள் முலம்  இவளுடன்..சற்று  நட்பாக உரிமையோடு  பழகி வந்தேன்
அவ்வளவே.

தொடர்ந்து  ஒரு  மாதம் போன் செய்வது  மெசேஜ்  அனுப்புவது  என்று  தொல்லை கொடுத்தது  கொண்டே இருந்தாள்....
நண்பனும்  காதலியும்  அடிகடி  ஊட்டி  செல்வது  வழக்கம்  அதை  மேற்கோள்  காட்டி  நாமும் அங்கே  செல்லலாம்  என்பாள்,,,
நான் முடியாது என்பேன்...

நண்பன்  முலமாக  காதல்  தூது விட  ஆரம்பித்தாள்
ஆகையால்  அவன் நட்பை துண்டிக்க  நேர்ந்தது......

அடுத்த  பிப்ரவரி 14 அன்று  போன் செய்வேன்  நீ  ஒத்துகொள்ள  வேண்டும்  இல்லை  என்றாள் ..அவ்வளவுதான்  என்றாள்

முடியாது என்றேன்...

சரியாக  அந்த நாள்  போன் செய்தால்  ...
ஐ லவ் யு என்றாள்

முடியாது  என்றேன்
...

அப்படினா  நான்  அன்னைக்கு  செலவு  பண்ண  காச  திருப்பி  கொடு என்றாள்....

ச்சி அவளோ  தான என்று ..
உடனே  அவளுக்கு அந்த தொகையை  மணி ஆடர்  செய்துவிட்டு ....

இத்துடன் முடிந்தது என்று  இருந்துவிட்டேன்.

அவள் அந்த மணி  ஆடரை  பெற்று கொண்டு அதில்லுள்ள சிறிய Reply மெசேஜ் இடத்தில் என் பெயரையும் அவள் பெயரையும் காதல் சின்னத்தால் இணைத்து "Still I Love you da" என்று எழுதி அனுப்பிவிட்டாள்..

சில நாட்கள் கழித்து
அதை தபால்காரர் நான் வீட்டில் இல்லாத  போது என் அம்மாவிடம்  கொடுத்துவிட்டார் .....இதை சற்றும் எதிர்பார்க்காத  நான் என்  வீட்டில்  மாட்டிக்கொண்டேன்...
அவர்கள் துருவி துருவி கேள்வி  கேட்க..
அதை அவர்கள்  முன்னே கிழித்தெறிந்துவிட்டு அவர்களை  எப்படியோ சமாளித்தேன்....

அதன்  பிறகு  அவள் என்னை தொடர்பு  கொள்ளவே  இல்லை.....

பன்னிரண்டு ஆண்டுகள் ஓடியது..இப்படி ஒரு பெண் என் வாழ்க்கையில் இருந்ததையே மறந்துவிட்டேன்.

சிறுது  நாட்கள்  முன்பு  எதற்சையாக அவளை  ஒரு  பேருந்து  நிலையத்தில்  பார்த்தேன்...

பயங்கர  குண்டாக  இருந்தாள்..சட்டென்று அவளை எனக்கு  அடையாளம் தெரியவில்லை..என்னை பார்த்த  உடன்  அதே  உற்சாகத்தில் சிரித்தாள்...

உடனே நான் அவளை  கண்டுகொள்ளாமல்  அடுத்து  வந்த பேருந்தில்  எறி வீடு வந்துவிட்டேன்.........

நான்  அன்று உண்மையாக காதலித்த  பெண்  என்  காதலை  இன்றுவரை ஏற்று  கொள்ளவில்லை என்பதும் இங்கே நான் சொல்ல  கடமை பட்டுள்ளேன்....

எனக்கு  கிடைத்த  பல வாய்ப்புகளில் நான் கைவிட்டதில் இதுவும் ஒன்று..

இந்த  முன்று மாத  காதலி

Krishna Kumar G


Tuesday, May 10, 2016

Life definition

Life is nothing but happenings of various incidents and accidents with hurt and love.......
Krishna Kumar G
Monday, May 9, 2016

From where Space gets its Energy ?

In space everything is in motion out of some energy .
You can't see a thing or material out of motion in space (no stable thing)

Art by myself

Sunday, May 8, 2016

Few Paints for my Instagram

Simple contribution few of my art works in my instagram page
You can follow me in www.instagram.com/krishgameThursday, May 5, 2016

கலாபக் காதலிகள்

இரவு பதினோரு மணிக்கு ஆடி கார்ல வந்து அவ எங்க தெரு முனைல என்னை பிக் அப் பண்ணிப்பா ...
நாங்க ரெண்டு பேரும் பார்க் செர்ட்டன் போய் தண்ணிய போட்டுகிட்டே பேசிகிட்டே இருப்போம் டைம் போறதே தெரியாது இரவு மணி மூணு ஆகிடும்.அப்படியே வெளில பேசிகிட்டே வந்து ஒரு தம்போடுவோம்.மணி நாலு ஆகிடும்..

குறுக்கே : அவ என்னடா குடிப்பா ? வோட்கா ட ப்ரீசர் கலந்து,அப்புடினா என்னடா ? அது ஒரு ஜூஸ் மாதுரி.
சரி அப்பறம் மேல சொல்லு ...

மறுபடியும் டைம் நகிஹே ... Continue......

Krishna Kumar G