Friday, March 4, 2016

சொல்லாத காதல் சுகமென நீள்கிறது

அவளை மட்டும் பிடித்த நாட்கள் தாண்டி
அவள் குடும்பமும் பிடிக்க தொடங்கும்

அவளுக்கென  நம் வாழ்வே நெறிகொள்ள தொடங்கும்
அவளுக்கென எல்லாம் செய்ய தோணும்

அவள் கண்ணில் அந்த காதல் தெரியும்
அவள் அதை சொல்லாமல் பிறழுவது  நம்மை பரிதவிக்க செய்யும்.

அவளிடம் காதல்  சொல்லவும் மடை போடுவாள்
தடைகளுக்கு நடுவே விற்றுக்கொண்டு நம் அன்பை  சோதிப்பாள்

அவள் ஏன் இப்படி சிக்கலுக்குள் தன்னையே தள்ளி கொள்கிறாள்
காதலை சொல்ல வழியின்றி நம்மை வாழ செய்கிறாள்

அவளிடம் சொல்லாத காதல் மட்டும் வாழ்கிறது
அவள் போதும் அவள் மட்டும் போதும் என்று
அவள் மேல் நாம் (நான்) (வைக்கும்) வைத்துள்ள காதல் சுகமென நீள்கிறது

(ஏதோவொன்று ஏனோ என்று சொல்லாமல் கொள்கின்றதே)