Saturday, March 5, 2016

அப்பாவின் சைக்கிள் சப்த்தம்

பல நாட்கள் ஏன் சில வருடங்கள்  கூட இதை சொல்லலாம் என்று எண்ணி இருக்கிறேன்,பிறகு ஒரு நாளில் இதை எழுதலாம் என்று இருந்துவிட்டேன்.
அந்த நாள் இன்று  வந்துவிட்டது.
இது என் அப்பாவின் வரலாறு,இது அவர் வாழ்ந்த காலத்தில் என்னுடன் பகிர்ந்து கொண்டவை.
மிகவும் கஷ்ட்ட பட்டு வாழ்க்கையில் முன்னேறிய மனுஷன்.
2010 மார்ச் அவர் இன்னுலகை விட்டு பிரிந்தார் அன்று முதல் அவர் என் இதயத்தில் வாழ்ந்து வருகிறார்.

எனக்கு பிடித்த வாகனத்தை வாங்கி தந்துவிட்டு  அவர் கடைசி வரை சைக்கிள் ஓட்டியவர்.
நான் அவருக்கு பிறந்த ஒரு பொறுப்பில்லாத பிள்ளை என்று கூட சொல்லலாம்.

அவர் மிகவும் ஏழ்மையான  விவசாய குடும்பத்தில் பிறந்தவர்,
அவர் பத்தாம் வகுப்பு படிக்கவும் விடுதிக்கு பணம் செலுத்தவும் அவரது வீட்டு தோட்டத்தில் உள்ள மரங்களை  வெட்டி விற்றார் அவரது தந்தை ,இதை கண்டு வேதனை அடைந்த அவர் ,
பத்தாம் வகுப்பு படித்து முடித்தவுடன் வேலைக்கு செல்ல திட்டமிட்டார்.
சரியான வேலை எதுவும் கிடைக்க வில்லை இனி நான் வாழ்ந்து வீட்டுக்கு பாரமாக இருக்க கூடாது என்று எண்ணி தற்கொலை செய்து கொள்ளலாம் என்று ரயில் தண்டவாளத்தை நோக்கி சென்றார்.

to be continued...........