Saturday, October 31, 2015

இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்

நாம் சந்தித்த முதல் சந்திப்பு
பசுமை பூத்ததுபோல் இன்னும் என்னுள்ளே தேங்கி நிற்கிறது

நான் உன்னுடன் எதற்ச்சையாக  பேச நீ என்னை பார்க்க ,
அது என்னுள்
நாம் ஏற்க்கனவே பழகியதுபோல் ,எதோ ஒரு உணர்வு ..
கண்கள் கலந்து சற்று சிலிர்த்து போனேன்
அதுவரை நான் பேசிய யாரிடமும் அப்படி நான் உணர்ந்ததில்லை

அன்று முதல் இன்றுவரை அந்த உணர்வுக்கும் உறவுக்கும்
அர்த்தம் எனக்கு விளங்கவில்லை

நம் தேகம் தீண்டியதில்லை
நாம் சரியாக பேசியதுகூட இல்லை
நம் சந்திப்புகள் கூட சரியாக நேர்ந்ததில்லை

நீ வேறு நான் வேறு
இருவரும் எட்டாத இடத்தில் இருக்கிறோம்

வேறு வேறு திசைகளில் நாம் சென்றாலும்
காலம் நம்மை மீண்டும் இணைக்க முயல்கிறது

எதோ மாயைபோல் மீண்டும் ஒன்று சேர்ந்து விடுகிறோம்
நமக்குள் என்னமோ எதோ ........இருக்கிறது
அது நட்பா பகையா அல்லது காதல
என்று தெரியவில்லை
அதை எண்ணி எண்ணி வியக்கிறேன்

சில நேரம்
நட்பில் தொடங்கி காதலில் வளர்ந்து பகையில் முடிகிறது

மறுநேரம்

பகையில் தொடங்கி நட்பில் வளர்ந்து காதலில் முடிகிறது

இது என்னவென்றே எனக்கு புரியவில்லை

மீண்டும் உனக்காக நான் காத்துகிடக்கிறேன்

"இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்" அன்பே  அன்பே  என்று