Monday, July 20, 2015

Smart Ration Card -Tamilnadu Civil supplies - TNEPDS

Smart Ration Card Tamilnadu Civil supplies https://www.tnpds.gov.in
Call 1967 ( அல்லது ) 1800-425-5901
(ஸ்மார்ட்' ரேஷன் கார்டு பற்றிய விவரம் பதிவின் கீழே உள்ளது)
(வீடியோ இணைப்பு உள்ளது)

 உங்க ரேஷன் கடையில Smart Card படிவம் தராங்க போய் வாங்குங்க ......இல்லன அவளோதான்.

Tamilnadu Government Issuing Smart Card Application in Ration shop.
Free Application but which is sold in cost of 2 rupees bribe .

To be filled :

Ration shop number
Ration card enrolment number in your shop
Ration card number in front page
Aadhar card number to be filled .
Name with age.
You age should be written as it is in old Ration Card
Signature of the person in the ration card

Submit your Aadhaar Card photocopy (xerox) in your ration shop

Web : http://www.consumer.tn.gov.in/fairprice.htm

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
Edited Sep 3 2016

Take up all your family Aadhar card to ration shop and scan it in their device and get up registered .
For smart ration card service,
Register your mobile number and get sms about the product available.

#SmartRationCard ரேஷன் கடையில் ஆதார் அட்டையை வைத்து பயோமெட்ரிக் ஸ்கேன் செய்யப்படுகிறது...
தவறாமல் உங்க குடும்பத்தில் உள்ள அனைவரது ஆதார் அட்டையை உடன் எடுத்து செல்லவும்
#தமிழ்நாடு வெட்டி பசங்க இன்னைக்கே இதை செய்யவும்..
வேலைக்கு போறவங்க ஒரு நாள் லீவு போட்டு செய்யவும்..
ஆதார் அட்டை இல்லாதவர்கள் ....வேறு கடைகளில் சக்கரை, துவாரம் பருப்பு வாங்கவும்...
++++
(Edited Sep 08 2016)

TNEPDS - Android 

Mobile App for Ration Card Holders in the State of Tamil Nadu.
Scan your Aadhar card to add your family members.
(தற்போது நியாய விலை கடைகளில் (ரேசன் கடைகளில்) ஆதார் எண்ணை நம் குடும்ப அட்டை எண்ணோடு பதிவு செய்யப்படுகிறது  , இதை செய்ய  முடியாதவர்கள். தங்கள் ஸ்மார்ட்போனில் Google app store ல் TNePDS என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதில் குடும்பத்தலைவரின் தொலைபேசி எண்ணை போட்டால் ஒரு முறை குறுஞ்செய்தி (one time password) வரும் அதை அந்த செயலியில் பதிவு செய்தால் நமக்கு நம் பக்கம் திறக்கும் அதில் ஆதார் எண்ணை பதிவு செய்த பிறகு  நம் ஆதார் அட்டையை. காட்டி barcode ஸ்கேன் செய்யவும் , பிறகு அதே போல் எல்லா குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டையையும் பதிவு செய்யவும் ,
இளைஞர்கள் தாமும் பயன் பெற்று தெரிந்தவர்களுக்கும் பதிவு செய்து கொடுக்கவும் , அதிகம் இதை பகிரவும் .)

+++++++++++++++++++++++++++++++++++++++++++++

(Edited Mar 21 2017)

ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் அச்சிடும் பணி துவக்கம்! கந்தலான அட்டைகளுக்கு ஏப்., 1 முதல் விடுதலை
ஸ்மார்ட் கார்டுகள், ஐந்து வகைகளில் இருக்கும். அதன்படி, கார்டில், புகைப்படம் அருகில், 'பி.எச்.எச்., - ரைஸ்' என்றிருந்தால், அனைத்து பொருட்களும்; 'பி.எச்.எச்., - ஏ' என்றிருந்தால், 35 கிலோ அரிசி உட்பட, அனைத்து பொருட்களும் தரப்படும். என்.பி.எச்.எச்., என மட்டும் இருந்தால், அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தரப்படும். 'என்.பி.எச்.எச்., - எஸ்' என்றிருந்தால், சர்க்கரை; 'என்.பி.எச்.எச்., - என்.சி.,' என்றிருந்தால், எந்த பொருட்களும் வழங்கப்படாது.
ஸ்மார்ட் ரேஷன் கார்டு, 'பான் கார்டு' வடிவில் இருக்கும். அதன் முதல் பக்கத்தின் மேல் பகுதியில், அரசு முத்திரையுடன், 'உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை' என, அச்சிடப்பட்டிருக்கும்.
அதற்கு கீழ், குடும்ப தலைவர் பெயர், கணவர் அல்லது தந்தை பெயர், பிறந்த தேதி, புகைப்படம், தனி குறியீட்டு எண், முகவரி போன்றவை இருக்கும். பின்புறம், உறுப்பினர்கள் பெயர், ரேஷன் கடை எண், ஆண்டு மற்றும் 'கியூ.ஆர்.,' என்ற ரகசிய குறியீடு இருக்கும். கார்டின் கீழ் பகுதியில், 'இந்த கார்டை முகவரிக்காக பயன்படுத்தக் கூடாது' என, எழுதப்பட்டிருக்கும்.
ஏப்., 1ல், ரேஷன் கடைகளுக்கு அருகேயுள்ள பள்ளி, சமூகநலக் கூடங்களுக்கு மக்களை வரவழைத்து, புது கார்டுகள் இலவசமாக வழங்கப்படும்.


Edited 5 April 2017
----------------------

ஸ்மார்ட்' ரேஷன் கார்டு உங்களுக்கு கிடைக்க வில்லையா ?

கவலை வேண்டாம் https://www.tnpds.gov.in இணையத்தில் உங்கள் மொபைல் எண்ணை கொண்டு login செய்யுங்கள் .
அதில் உங்கள் விபரங்கள் சரியாக இருக்கிறதா என்று முதலில் பாருங்கள்.

சரியாக இருந்தால் கவலை வேண்டாம்.

உங்களுக்கு ஸ்மார்ட்' ரேஷன் கார்டு விரைவில் வரும்.

கொஞ்சம் கொஞ்சமாகத் தான் தருகிறார்கள்.

இன்னும் கொஞ்சநாள் போனால் உங்கள் கார்ட் உங்கள் கைக்கு வரும்

அதுவரை குடும்ப அட்டையை பயன்படுத்துங்கள்..


குறிப்பு : ஸ்மார்ட்' ரேஷன் கார்டு பெரும்முன்
 உங்கள் குடும்ப அட்டையை ஒரு நகல் எடுத்து வைத்துகொள்ளுங்கள்.
ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்படும்போது உங்களது பழைய குடும்ப அட்டையை ரேஷன் கடையில் ஒப்படைக்க வேண்டும்.
புதிய அட்டையில் பிழை ஏதாவது இருந்தால் பழைய நகலை வைத்து சுலபமாக சரி செய்து கொள்ளலாம்

+++++++++++++++++++


 ஸ்மார்ட்' ரேஷன் கார்டு OTP எண் வரவில்லையா ? அல்லது அழித்துவிடீர்களா ?

கவலை வேண்டாம்  https://www.tnpds.gov.in
இணையதள முகவரியில் அதை பெற்றுகொள்ளலாம்

பயனாளர் நுழைவு => இதில் உங்கள் கைபேசி எண்ணை வைத்து உள்ளே நுழையவும்.
குறுந்தகவல் வரும் அதில் இருக்கும்
OTP எண்ணை பதிவிடவும் =>
ஸ்மார்ட் கார்டு விவர மாற்றம் => அதில் புகைப்படம் மற்றும் தகவல்கள் சரியாக இருக்கிறதா என்று பாருங்கள் ..
சரி இல்லை என்றால் சரி செய்யுங்கள்
ஸ்மார்ட் கார்டு செயலாக்கம் => இதில் உங்கள் அட்டை
அச்சிடப்படவில்லை அல்லது அச்சடிக்கப்பட்டுள்ளது .என்கிற விவரம் இருக்கும்

ஆதார் எண்கள் சரியாக இருக்கிறதா என்றும் பாருங்கள்.
தவறேதும் இருப்பின் திருத்துங்கள்

ஸ்மார்ட் ரேஷன் கார்டு பிழை திருத்தம்
புகைப்பட மாற்றம்,மொபைல் எண் மாற்றம்.

ஸ்மார்ட் ரேஷன் கார்டு
மொபைல்  OTP பெறுதல்

மேலும் விபரங்களுக்கு https://www.tnpds.gov.in
அழையுங்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்கள்
1967 ( அல்லது ) 1800-425-5901

ஸ்மார்ட் ரேஷன் கார்டு செயலாக்கம் ஆன்லைன் வீடியோசெயலி வீடியோ :